இதோ, ஒரு எழுச்சிப் பாடல்!
புதிய வானம் . . . புதிய பூமி . . .
புதிய வானம் புதிய பூமி எங்கும்
தூய்மை தெரிகிறது - வைரஸ்
போகையிலே அதை வழி அனுப்ப இந்த
உலகே விழைகிறது
ஒஹோ ஹோஹோ ஹோ
உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
அழகிய இமயம் நூறு கல் தொலைவில்
அழகாய்த் தெரிகிறது - அன்று
அன்னை பாரதம் தூய்மையாய்த் திகழ்ந்த
காலம் தெரிகிறது அந்தக்
காலம் தெரிகிறது
ஓ . . . . ஓ லால்ல லா. லா . லா
பிள்ளைக் கூட்டங்களை வீட்டினிலே
அள்ளி அடைக்கும் இந்த நாளினிலே
பிள்ளைகள் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது - இவர்
வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று
ஆசை துளிர்க்கிறது என்று
ஆசை துளிர்க்கிறது
ஓ . . . . ஓ லால்ல லா. லா . லா
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இனி இயற்கையை வணங்கிடுவார் - மலை
உயர்ந்தது போல் தம் மனம் உயர்ந்து இவர்
வாழ்வில் சிறந்திடுவார் இவர்
வாழ்வில் சிறந்திடுவார்
ஓ . . . .ஓ லால்ல லா. லா . லா
ஓ . . . .ஓ லால்ல லா. லா. லா