புதிய மாற்றங்கள்!
செலவுக் கணக்கு:
விடியற்காலை பால் பாக்கெட் சோப்பு போட்டுக் குளிக்கும்.
(சோப்)
காய், கனி வகைகள் பக்கெட் நீரில் நீந்தி, உப்பு - மஞ்சள் நீரில்
மூழ்கிய பின், உலர்ந்து, குளிர் சாதனப் பெட்டியை அடையும்.
(உப்பு, மஞ்சள் தூள்)
''இம்யூனிடி பூஸ்டர்'' என்று சில, பல பொடிகள் விற்பனையாகும்!
(கஷாயம் செய்ய காஸ்)
ஸரஸ்வதி தேவி ஆகிய பேப்பர்களும், லக்ஷ்மி தேவி ஆகிய
ரூபாய்த் தாள்களும் இஸ்திரிப் பெட்டியின் அடியில் சூடாகும்.
(மின்சாரம்)
கணினி, கைப்பேசி அழைப்புகளிலே சந்திப்புகள் நிகழும்
(இண்டர்நெட்)
பேசுக் காற்றை அவரவர் மூக்கில் முகக் கவசம் திருப்புவதால்,
எல்லோரும் நன்கு பல் துலக்க வேண்டும்!
(மவுத் வாஷ்?)
மேட்சிங் முகக் கவசங்கள் நாடப்படும்.
செலவு இல்லாக் கணக்கு:
யாருக்கும் வீட்டினுள் அனுமதி இல்லை - வேலையாட்கள் தவிர!
(டீ, காபி, நெறுக்குத் தீனி குறைவு)
விருந்துக்கு யாரும் அழைப்பதில்லை; நாமும் அழைப்பதில்லை!
(மளிகை சாமான்கள்)
பகட்டான உடைகள் அலமாரியுள் முடங்கிக் கிடக்கும்.
பள்ளி, அலுவலக உடைகளை இஸ்திரி செய்ய வேண்டாம்.
(இஸ்திரிக்காரன் செலவு)
பெண்களின் அழகு சாதனங்களுக்கு வேலை குறையும்.
கல்யாணங்கள் வலைத்தள ஒளிபரப்பாவது பெருகும்.
(பெட்ரோல்/ டாக்ஸி)
சமூக இடைவெளி:
ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தீட்டாகி, எட்டி நிற்பார்கள்!
கண்களையும் உருவத்தையும் வைத்து யாரென அறியணும்!