P.J.
0
என்.சி.சி., தேசிய விருது; திருப்பூர் மாணவர் &#
என்.சி.சி., தேசிய விருது; திருப்பூர் மாணவர் தேர்வு
திருப்பூர் : தேசிய மாணவர் படையின் "சிறந்த மாணவன்' விருது, திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவன் ஆகாஷுக்கு கிடைத்துள்ளது.
திருப்பூர் மங்கலம் ரோடு, பழக்குடோன் பகுதியை சேர்ந்த மாணவன் ஆகாஷ், உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். செஸ், அபாகஸ் விளையாட்டில், மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். விளையாட்டில் மட்டுமின்றி, தேசிய மாணவர் படையிலும் இணைந்து, சேவையாற்றி வருகிறார்.குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்குபின், கடந்த ஜன., 28ல், டில்லியில் பிரதமருக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அதில் பங்கேற்ற 30 பேர் கொண்ட தமிழக தேசிய மாணவர் படையில், மாணவர் ஆகாஷும் ஒருவர்.இது தவிர, டில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவனுக்கான திறனாய்வு தேர்வில், நேர்த்தியான சீருடை, கம்பீரமான தோற்றம், நடைபயிற்சி, நேர்முகத்தேர்வு, பொது அறிவு, துப்பாக்கி சுடும் போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம், இந்திய அளவில் தேசிய மாணவர் படையின் "சிறந்த மாணவன்' விருதையும் தட்டிச் சென்றார். தமிழக அளவில், 9 பேர் சிறந்த மாணவர்களாக தேர்வாகியுள்ளனர். அவர்களில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, ஆகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ""தேசிய மாணவர் படை மூலம், பல்வேறு கட்டங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன். ராணுவத்தில் பணியாற்ற முயற்சிப்பேன். தேசிய மாணவர் படையில் சிறந்த மாணவன் விருது கிடைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
| ???.??.??., ????? ??????; ?????????? ?????? ?????? Dinamalar