• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஐப்பசி மாத பூஜைகள்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஐப்பசி மாத பூஜைகள்.

ஸ்கந்த சஷ்டி; --சூர ஸம்ஹாரம்.

4-11-13 முதல் 8-11-13 முடிய

ஆறு நாட்களும் விரதம் இருந்து ( ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷத்தில்) . இயலாதவர்கள் சஷ்டி அன்று மட்டுமாவது பூரண உபவாசம் இருக்கலாம்.
ஆறு ஆண்டுகளாவது இதனை தொடர்ந்து அநுஷ்டிப்பது உத்தமம்.

முடியாதவர்கள் ஒரு ஆண்டாவது அநுஷ்டிக்கலாம். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதற்கு சஷ்டியில் விரதம் இருந்தால் கர்ப்ப்பையில் குழந்தை உண்டாகும் என்பது பொருள்.

கந்த சஷ்டி அன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலை பருகினால் புத்ர லாபம் உண்டாகும். வால்மீகி மஹரிஷி ஶ்ரீமத் ராமாயணத்தில் பக்தஸ்ச ய: கார்திகேயே காகுஸ்த புவி மாநவ: ஆயுஷ்மான் புத்ர பெளத்ரஸ்ச ஸ்கந்த ஸாலோக்யதாம் வ்ரஜேத். என்கிறார். இதற்கு பொருள்=

கந்தனின் ஆவிர்பாவ சரித்திரத்தை முருகனிடத்தில் பக்தியுடன் கேட்பவர் நீண்ட, ஆயுள், நல்ல புகழ், நன்மக்கட்பேறு பெற்று முடிவில் ஸ்கந்த பெருமானின் திருவடி நிழலை அடைகிறார். என்பது ஆகும்.

8-11-13 அன்று “”விஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாசே சுக்ல பக்ஷே ப்ருகு வாஸர யுக்தாயாம் சஷ்ட்யாம் சுப திதெள பூர்வாஷாடா நக்ஷத்திர யுக்தாயாம் சுப யோக சுப கரண சகல விசேஷன

விசிஷ்டாயாம் அஸ்யாம் சஷ்டியாம் சுப திதெள மம ஸஹ குடும்பஸ்ய ஶ்ரீ பாலசுப்ரமணிய ப்ரஸாத ஸித்யர்த்தம் துலா சுக்ல சஷ்டி புண்ய காலே

கல்போக்த ப்ரகாரேண ஸ பரிவார ஶ்ரீ பால சுப்ரமண்ய பூஜாம் கரிஷ்யே.
இம்மாதிரி ஸங்கல்பம் செய்து கொண்டு 16 உபசார பூஜை செய்யலாம்.
கந்த புராணம் புத்தகம் தமிழில் உள்ளதை படிக்கலாம்.



10-11-13 அன்று கோபாஷ்டமி.

மத்ஸ்ய புராணம் கூறுகிறது. கார்திகேயாஷ்டமி சுக்லா க்ஞேயா கோபாஷ்டமீ புதை: தத்ர குர்யாத் கவாம் பூஜாம் கோ க்ராஸம் கோ ப்ரதக்ஷிணம்.

இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்து அகத்திக்கீரை, புல் முதலியவற்றை சாப்பிட தந்து குடிக்க ஜலம் கொடுத்து பக்தியுடன் 16 முறை பசுவை வலம் வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனால் பாபங்கள் விலகும். அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டும்.





துளசி விவாஹம். 14-11-13 அன்று..

மஹா விஷ்ணு புகழ்ந்து போற்றிய துதி . பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா, விஸ்வபாவனி, புஷ்பஸாரா, நந்தினீ, துளசீ, கிருஷ்ண ஜீவனி,

ஏதந் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம் நாமார்த்த ஸம்யுதம் ய: படேத்
தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்..

பிருந்தை என்பது மரங்கள் நெருங்கி அடர்ந்து இருப்பதை குறிக்கும். துளசி ஒரிடத்தில் மிக நெருங்கி அடர்ந்து இருப்பதால் அவளை பிருந்தை என்று போற்றுகிறேன்.

பிருந்தாவனம் தோறும் இருந்து பிருந்தாவனீ என்ற பெயர் பெற்றாள். அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என்ற பெயர் பெற்றாள். எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாக்கி விஸ்வபாவனீ என்ற பெயர் பெற்றாள்.

மலர்களின் மீது ப்ரீதி உள்ள தேவர்களும் அவைகளால் ஆன்ந்தமடையாமல் உன்னாலேயே ஆனந்த மடைந்ததால் புஷ்ப ஸாரா என்ற பெயர் பெற்றாள். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும்

தன்மையினால் நந்தினீ என்ற பெயர். பெற்ற துளசி. க்ருஷ்ணன் உன்னால் உருக்கொன்டு வாழ்வதால் க்ருஷ்ண ஜீவனி என்ற பெயர். பெற்றவள்.

எட்டு நாமங்களும் காரண பெயர்கள் ஆகையால் இதை மனனம் செய்வோர்
அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். துளசியின் தோத்திரம் கண்ணுவ சாகையில் உள்ளது.

மஹா விஷ்ணுவின் மனைவி பகவானின் அம்சம் நிறைந்த துளசி செடி.
பிருந்தையாகிய துளசி மஹா விஷ்ணுவை மணந்து கொன்ட நாள் . ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி.

ஆகவே இந்த நாளை ப்ரு.ந்தாவன த்வாதசி என்றனர்.

துளசி செடியை ஒரு மேடையில் அல்லது பூந்தொட்டியில் வைக்கவும். இப்போது இதற்கு ப்ருந்தாவனம் என்று பெயர்.

துளசி செடியில் துளசி தேவியையும் பக்கத்தில் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி மர குச்சியையோ வைத்து அதில் மஹா விஷ்ணுவை ஆவாஹனம் செய்யலாம்.

விரத பூஜா விதானம் புத்தகத்தில் உள்ள படி துளசி விவாஹ பூஜை செய்யலாம். சாஸ்த்ரிகளுக்கு ஒரு பித்தளை சொம்பு அல்லது பித்தளை டம்பளரில் பாயஸ தானம் செய்ய வேண்டும். சாப்பாடும் போட வேண்டும்.

நித்ய துளஸி பூஜை;

துளசி அமந்துள்ள இடத்திற்கு ( பிருந்தாவனத்திற்கு) அருகில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்காரவும். ஆசமனம் செய்யவும்..

சுக்லாம்பரதரம் விஷ்ணும் ச்சி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. நெற்றியில் குட்டி கொள்ளவும்.

மமோபாத்த சமஸ்த துரிதயக்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் மம தீர்க்க ஸெளமங்கல்ய அவாப்தியர்த்தம் ,

குடும்ப க்ஷேம அபிவ்ருத்யர்த்தம் ஶ்ரீ லக்ஷ்மி நாராயண ப்ரீத்யர்த்தம் , யதா சக்தி துளசீ பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பம் செய்து கொள்ளவும்.

துளசியின் எதிரில் நின்று கொண்டு கைகளில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி துளசியை பூஜை செய்யவும்.

த்யாயாமி துளஸீம் தேவீம் ஸ்யாமாம் கமலலோசனாம் ப்ரஸன்னாம் பத்ம கல்ஹார ,வரதாஞ்ச சதுர்புஜாம் கிரீட ஹார கேயூர குண்டலாத்யைர்

விபூஷிதாம் தவளாம் ஸுக ஸம்வீதாம் பத்மாஸன நிஷேவிதாம் தேவீம் த்ரைலோக்ய ஜநநீம் ஸர்வ லோகைக பாவநீம்

அஸ்மின் துளசி குல்மே ஶ்ரீ துளசீ தேவீம் த்யாயாமி..

ஸர்வ தேவ மய தேவீ ஸர்வதா விஷ்ணு வல்லபே ஆகஸ்ச மம
கே ஹேஸ்மிந் நித்யம் ஸந்நிஹிதா பவ துளஸீம் ஆவாஹயாமி.

ரத்ந ஸிம்ஹாஸனஞ்சாரு புக்தி முக்தி பலப்ரதே மயா தத்தம் மஹா தேவி ஸங்குருஹாண ஸுரார்சிதே. ஶ்ரீ துளசி தேவ்யை நம: ஆஸனம் ஸமர்பயாமி..

ஶ்ரீ துளஸி தேவ்யை நம: பாத்யம் ஸமர்பயாமி செடியில் ஒரு உத்திரிணி ஜலம் விடவும். அர்க்கியம் ஸமர்பயாமி. ஜலம் விடவும். ஆசமனீயம் சமர்பயாமி ஜலம் விடவும். ஸ்நானம் ஸமர்பயாமி ஜலம் விடவும்.

ஸ்நானாந்திரம் ஆசமனீயம் சமர்பயாமி ஜலம் விடவும்/.வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி, ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி. கந்தம் ஸமர்பயாமி சந்தனம் இடவும் .ஸெளபாக்கிய த்ரவ்யம் சமர்பயாமி மஞ்சள் குங்குமம் இடவும்.

புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும். ஶ்ரீ துளசியை நம: விஷ்ணு பத்நியை நம:
அக ஹந்திர்யை நம: லோக வந்திதாயை நமஃ: பீதாம்பர தாரிண்யை நம: க்ஷீராப்தி தநயாயை நம: லோக ஜநன்யை நம: ஸர்வாபரண பூஷிதாயை நம;

ஸுமுகாயை நம: ஸுநாஸிகாயை நம: ரமாயை நம: ஶ்ரீ துளஸ்யை நம:

ஶ்ரீ துளஸீ தேவ்யை நம: தூபம் ஆக்ராபயாமி ஊதுபத்தி ஏற்றி காண்பிக்கவும். ஶ்ரீ துளஸீ தேவ்யை நம: தீபம் தர்சயாமி நெய் தீபம் கான்பிக்கலாம்.

ஸ்ரீ துளஸி தேவ்யை நம: ரஸ கண்டம் த்ராக்ஷா பலம், க்ஷீரம் நிவேதயாமி
கல்கண்டு, த்ராக்ஷை பால் நிவேத்யம் செய்யலாம். ஸ்ரீ துளசீ தேவ்யை நம: தாம்பூலம் சமர்யாமி வெற்றிலை பாக்கு நிவேத்யம் செய்யவும்.

ஶ்ரீ துளசி தேவ்யை நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி.

ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும் ப்ரார்த்தனை செய்யவும். ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம்
புஷ்பாஞ்சலி ப்ரதானேன தேஹி மே பக்தவத்ஸலே.

இந்த துளஸீ பூஜையை திருமணமான பெண்கள் அனைவரும் தினமும் செய்யலாம். .பக்தியுடன் துளஸியை பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, கணவன் மனைவி ஒற்றுமை, ,

குடும்பத்தில் அமைதி, லக்ஷிமி கடக்ஷம், வம்சம் தழைக்கும்.உடல் வலிமை, மனோ தைர்யம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும்.,

பூஜை செய்யும் துளசி செடியிலிருந்து துளசி பறிக்க கூடாது. வேறு துளசி செடியிலிருந்து தான் துளசி பறிக்க வேண்டும்..
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top