கடன் இருக்கும்வரை நோயில்லை
கடன் இருக்கும்வரை நோயில்லை. கடன் அடைத்தபின் நோய் வந்தது.
என் அப்பா சொன்ன வாக்கியம் தான் அது. எனக்கு விவரம் தெரிந்தவரை அவரது வாழ்வில் சோர்ந்து போய் நான் பார்த்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வயது ஆக ஆக கை, கழுத்து வலிகள் அவரை தாக்குகிறது. என்ன செய்வது...சோர்ந்து போய் விட்டார். எப்பொழுதுமே அவர் சோர்ந்து போக மாட்டார். எந்த வித கடினத்தையும் எளிதில் எடுத்துக்கொள்வார். அதனை சரிவர செய்துவிடுவார். எந்த வித பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவார். ஆனால் இப்பொழுது உடல் நல பிரச்சனையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது வரைக்கும் எந்த வித நோய்க்கும் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டதில்லை. எப்ப்பொழுதாவது தலை வலித்தால், ஒரு சூடா டீ அடிப்பார். நன்றாக தூங்குவார். அது சரியாகிவிடும்.
கை, கழுத்து வலிகள் அதிகமாவதர்க்கு காரணம் உண்டு. பத்து நாட்களுக்கு முன்பு கணினியில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அலுவலக வேலை பார்த்தார். அதனால், கழுத்து வலி வந்தது. அது கைகளில் கூட பரவியது. அதாவது, மூலையிலிருந்து கழுத்து வழியாக நரம்புகள் கைவரைக்கும் செல்லும். கழுத்தில் உள்ள நரம்புகளில் சில வீக்கங்கள் ஏற்பட்டதால் வலி வந்தது என்று எங்களது குடும்ப மருத்துவர் கூறினார். ஓரிரு வருடங்களுக்கும் முன் அப்பா இரத்த கொதிப்பு குறைந்த அளவில் இருப்பதை உணர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். பின்னர் தனக்கு ஒன்றும் இல்லை, ஒன்றும் வராது என்று சொல்லி அதனை நிருத்திவிட்டார். அதன் விலைவு இரத்த கொதிப்பு சிறிது அதிகமாகிவிட்டது. அதன் தாக்கமாக வலி அதிகமாகியுள்ளது. எனது அப்பா வலியுடன் அகமதாபாத் சென்றார் என் அண்ணன் அண்ணியை காண. இரயில் அதிக வலி ஏற்பட்டது. அம்மாவும் ரொம்ப பயந்து போய்ட்டாங்க. அங்கே அக்மதாபாத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்தார். அனைவருக்க்ம் மனசு கடினமாகிவிட்டது. பிறகு ஓரளவுக்கு பரவாயில்லை. கடந்த வாரம் ஞாயிறு அன்று சென்னை வந்தார். அப்பாவின் முகமே வாடி போயிருந்தது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. சென்னையிலேயே இருந்துவிட்டேன் இந்த வாரம். திங்கட் கிழமையன்று குடும்ப மருத்துவரை சென்று சந்தித்தோம். மருந்துகள் எல்லாம் எழுதிக் கொடுத்தார். பின்னர் வீட்டிற்கு வந்துவிட்டோம்.
இப்பொழுது அப்பார் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நானும் அப்பாவுடன் தங்கி விட்டேன். வீட்டீலேயே இருந்து வேலை பார்க்கிறேன் என்று எனது அலுவலகத்திற்கு சொல்லிவிட்டேன். ஏன் இந்த சோக கதையை இங்கு சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அது ஒன்றும் இல்லை. என் அப்பாவுக்கு நடந்ததைபோல மற்றவருக்கும் நடக்க கூடாது. அது என்ன வென்றால், Self-Medication எனப்படும் தானாக நோய்க்கு தீர்வு காணுவதை விட்டுவிடுங்கள். நல்ல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெருங்கள். வயது ஆக ஆக வருடா வருடம் உடல் நலத்தில் நாம் சிறிது அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். நமது அப்பாக்கள் எல்லாம் பஞ்ச் வசனம் சொல்லுவார்கள் “எனக்கு எதுவும் வராது. நான் யாருக்கும் எந்த தீங்குதல் எதுவும் செய்ததில்லை. கடவுள் துணை இருப்பார்.” அது எல்லாம் சரிதான். ஆனால் வயது ஆக ஆக, எல்லொருக்கும் வரும் இரத்த கொதிப்பு, சக்கரை வியாதி, இருதயம் சம்மந்தமான பிரச்சனைகள் போன்ற வற்றைக்கு சரியான முறையில் நாம் நமது பெற்றோர்களை மருத்துவரிடம் சென்று சோதித்து பார்த்து, அதற்கேற்ற உணவு பழக்கங்களை அவர்களுக்கு பழக வைக்க வேண்டும். மேலும் வெறும் மாத்திரை மருந்துகளால் மட்டும் இவையாவும் குண்மாகிவிடாது. அவர்களுக்கு உணவுடன் பாசத்தினையும் ஊட்ட வேண்டும் என்று இப்பொழுது இருக்கும் என்னை போன்ற இளசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
சரி தலைப்புக்கு வருகிறேன். என் அப்பா வாங்கிய கடன்களை யெல்லாம் அவர் அடைத்து விட்டர். நாங்கள் படிப்பதர்க்கு, வீடு கட்டுவதர்க்கு, அண்ணனின் திருமணத்திற்கு வாங்கிய கடன்கள் இருந்த வரை அவரது உடலுக்கு எந்த வித நோய்களும் அதிகமாக வந்ததில்லை. தினமும் வேலைக்கு செல்வார். திரும்ப வருவார். நாளிதழ்களை படிப்பார். வீட்டில் அனைவரிடமும் உரையாடுவார். அப்பொதெல்லாம் வராத இந்த இரத்த கொதிப்பு, சக்கரை வியாதி போன்றவை, இப்பொழுது கடன் அடைத்த பின் நோய்கள் வருகிறது என்று நேற்று அவர் சிரித்தபடி கூறினார்.