P.J.
0
கணவனின் இறுதிச்சடங்கில் சிரிப்பு ; சோகத்
கணவனின் இறுதிச்சடங்கில் சிரிப்பு ; சோகத்திலும் விழிப்புணர்வு!
21/09/2015
சவப்பெட்டிக்குள் இறந்த கணவரின் உடல் வைக்கப்பட்டிருக்க, அதற்கு முன் இரு குழந்தைகளுடன் நின்றபடி ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களால் கண்டிப்பாக அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.
சவப்பெட்டிக்குள் இறந்தநிலையில் கிடப்பவர் மைக் செட்டில்ஸ் (Mike Settles). சிரித்தபடி நின்று கொண்டிருப்பது அவரது மனைவி இவா ஹாலண்டு. (Eva Holland) அமெரிக்காவின் சின்சினாட்டியில் வசித்து வந்த மைக், அளவுக்கு அதிகமான போதைப்பழக்கத்தினால் கடந்த வாரம் இறந்துவிட்டார். அப்போது அவரது மனைவி இவா ஹாலண்ட் எடுத்து வெளியிட்ட இந்தப்படம்தான் சமூக வலைத்தளங்களில் இப்போது செம வைரல்.
புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியானவர்களுக்கு பதில் தரும் வகையில் புகைப்படத்தின் கீழ், தான் சிரிப்பதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார் இவா.
" இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம். என்னை மனிதாபிமானவற்றவளாகக் கூட காட்டலாம். ஆனால் அதற்கு முன் என் கணவர் மைக்கின் முழுக் கதையையும் கேட்டுவிட்டு நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். சிறு வயதில் இருந்தே மைக்கை நான் காதலித்து வந்தேன். திருமணத்திற்குப் பிறகு எங்களுக்கு அழகான இரண்டு குழந்தைகள்.
மைக், ஹெராயின் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தது திருமணத்திற்குப் பிறகு தாமதமாகவே எனக்குத் தெரிய வந்தது. அந்தப் பழக்கத்தை விட்டுவிடுமாறு அவரிடம் எவ்வளவோ பேசியும், கெஞ்சியும், அழுதுபார்த்தும் பலனில்லை. அதன் பிறகு அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுத் திரும்பியதும், மகிழ்ச்சியான வாழ்வு எங்களுக்கு மீண்டும் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் அது பொய்யாகிவிட்டது. மீண்டும் ஹெராயின் பழக்கத்தை தொடர ஆரம்பித்துவிட்டார் மைக்.
எங்களைப் பிரிந்திருந்த மைக்கால், ஹெராயினைப் பிரிந்திருக்க முடியவில்லை. அளவுக்கதிகமாக அவர் எடுத்துக் கொண்ட ஹெராயினால் என் குழந்தைகளையும், என்னையும் இப்போது தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
ஹெராயின் சாப்பிட்டதால் என் கணவர் இறந்துவிட்டார் என்று நான் எழுதினால் அது ஆயிரம் செய்திகளில் ஒன்றாகப் போயிருக்கும். என் குழந்தைகளுக்கும் எனக்கும் ஏற்பட்ட கதி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதால்தான் இப்படி ஒரு முடிவெடுத்தேன். ஹெராயின் பாதிப்பை மற்றவர்களுக்கு உணர்த்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும்தான் என் மனதைக் கல்லாக்கி, துயரத்தை சுமந்து கொண்டு என் கணவரின் உடல் முன் சிரித்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டேன்.
நான் நினைத்தபடி இந்தப் புகைப்படம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பலர் போதைப் பழக்கத்தை விட்டுவிடுவதாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன், நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு பெண் என்னிடம் வந்து, என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளவா என்று கேட்டு, கட்டிப் பிடித்துக் கொண்டார்.
அதன்பின் தான் ஒரு கதாநாயகி என்றும், ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் சொன்னார். மேலும், 'நேற்று இரவு நான் அதிகமாக ஹெராயின் எடுக்க நினைத்தேன். நீங்கள் வெளியிட்டிருந்த புகைப்படம் என் மனதை மாற்றிவிட்டது’ என்றார்.
நான் எடுத்த இந்த முடிவு இன்று பலரது வாழ்க்கையை மாற்றியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று துயரத்திலும் நெகிழ்கிறார் இவா ஹெலண்ட்.
இவாவின் கணவர் இறந்ததுக்கு வருத்தம் தெரிவிப்பதா இல்லை, இவ்வளவு துயரிலும் அடுத்தவருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி செயல்பட்டதற்காக பாராட்டுவதா....எதை முதலில் சொல்வது?
-ஜெ.முருகன்
http://www.vikatan.com/news/article.php?aid=52691