V
V.Balasubramani
Guest
கழிவறை, டிவி, வைஃபை வசதிகளுடன் கலக்கும் கī
கழிவறை, டிவி, வைஃபை வசதிகளுடன் கலக்கும் கர்நாடக அரசு பஸ்கள்! பெருமை இழக்கும் தமிழகம்
Excerpts:
பெங்களூரு: நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதியதாக அதி நவீன சொகுசு பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், மங்களூர்- பெங்களூரு இடையே இன்று இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் வைஃபை, தொலைக்காட்சி, கழிவறை உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் 'அய்ராவத் பிளிஸ்' மற்றும் 'அய்ராவத் சுப்பிரியா' ஆகிய புதிய சொகுசு பேருந்துகளின் போக்குவரத்து சேவை கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
அய்ராவத் பிளிஸ் பேருந்துகள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் ரசாயன கழிவறை, சமையல் அறை, பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் ஸ்டவ், ஒவ்வொரு சீட்டுக்கும் தொலைக்காட்சி, இணையதள வசதி போன்றவை இருக்கின்றன. இந்த பேருந்துகள் பன்முக 'ஆக்சில்' வசதி உடையவை. இந்த வசதியை உடைய 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோன்று அய்ராவத் சுப்பிரியா பேருந்துகளில் ரசாயன கழிவறை, ஒவ்வொரு இருக்கைக்கு பின்னாலும் தொலைக்காட்சி, இணையதள வசதி உள்ளது. தொலைக்காட்சிகளை தனித்தனியாக இயக்க `ரிமோட்' வழங்கப்பட்டுள்ளது. அதில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளை சேர்ந்த 60 அலைவரிசைகள் இருக்கின்றன.
நாட்டிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்து கழகங்களில் கர்நாடகத்தில் தான் இத்தகைய வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கழிவறைக்கு சென்று வந்த பிறகு தானாகவே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் வசதி உள்ளது. தானியங்கி இயந்திரம் கை கழுவ 10 நொடிகள் வரை மட்டுமே தண்ணீர் ஊற்றும். சுத்தம் செய்யும் கருவிகளை எளிதான முறையில் கையாள வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உணவு வகைகளை வழங்கவும், கழிவறையை சுத்தம் செய்யவும் கூடுதலாக தூய்மைப் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
………………………………….
………………………………….
அண்டை மாநிலமான கர்நாடகாவில் மக்களின் வசதிக்காக அம்மாநில அரசு நவீன சொகுசு பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இப்படிப்பட்ட பேருந்துகளை அரசு இதுவரை இயக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழகத்தில்தான் சொகுசு பேருந்துகள் விதவிதமாக அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தின் தற்போதைய நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. மழை பெய்தால் பேருந்தில் குடை பிடிக்கும் நிலை. நடுவழியில் பிரேக் டவுன் ஆகும் பேருந்து. இப்படிப்பட்ட நிலைதான் இங்கு. புதிய பேருந்து விடுகிறோம் என்ற பெயரில் பழைய பேருந்துகளை பெயிண்ட் அடித்து அதனை மக்கள் சேவைக்காக தமிழக அரசு விடுகிறது.
Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=52302