காஞ்சி பெரியவாளின் கருணை....
பெரிய உபன்யாசகரொருவர். கிடைக்கின்றசன்மானத்தொகையைமகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார். அவர் மகளுக்கு திருமணம்நிச்சயமானது. "கையிலே அப்படி இப்படின்னு 5000 ரூவா வெச்சிருக்கோம்.நகைநட்டு, சீர்செனத்தி, பொடவை, துணிமணி,சாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்தமுடியும்? இன்னும் 15000கண்டிப்பாவேணும்" இது மனைவி. திகைத்து நின்றார் கனபாடிகள். காஞ்சிபுரம் போய், பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லி, கேளுங்கோ... "பெரியவா" கண்டிப்பா செய்வா... பெரியவாளிடம்பணம் கேக்கறதாவது...எனறு முடிப்பதற்குள்..... குருவிடம்யாசகம் கேட்டால் என்ன தப்பு? என்றாள்மனைவி. அடுத்த நாள் காஞ்சி சென்றார்... ஒரு தட்டில் பழம், பத்திரிகையோடுநின்றுகொண்டிருந்தார்... பெரியவா அமர்ந்திருந்த இடத்தை அடைவதற்க்குள்... மகா ஸ்வாமிகள்,இவரைப்பார்த்துவிட்டார்.அடடே! நம்ம கரூர் கனபாடிகளா?வாங்கோ...எல்லோரும்க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?" என்றுவிசாரித்தார். உங்கஅனுக்கிரகத்துலே நன்னாநடக்கிறது ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே,ஆத்திலே..சௌக்யமா? என்ஆம்படையாதான்உங்களைப்பார்த்துவரச் சொன்னா..என்று குழறினார். அப்போ, நீயா வரலே? அப்படி இல்லே ..பொண்ணுக்குக்கல்யாணம்வெச்சுருக்கு, மனைவிஉங்களைதரிசனம் பண்ணிட்டு பத்திரிகையை சமர்ப்பிச்சு.. என்றுகனபாடிகள் முடிப்பதற்குள் ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச்சொல்லியிருப்பா என்று முடித்து விட்டார் ஸ்வாமிகள். விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதுஎன்று குழம்பினார் கனபாடிகள். உனக்கு ஒரு அஸைன்மெண்ட்வெச்சிருக்கேன்.என்றார் பெரியவா. பெரியவா இப்படிக் கேட்டவுடன், சொல்லுங்கோ காத்துண்டிருக்கேன்என்றார். திருநெல்வேலிபக்கத்துலஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமானநிலையில்இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்லசெத்துப் போய்டறதாம். "பாகவத உபன்யாசம்" பண்ணனும். பெருமாள் கோயில் பட்டர்இங்கே வந்து விஷயத்தைச் சொல்லிட்டு,"நீங்கதான் ஸ்வாமி "பாகவத உபன்யாசம்" பண்ண ஒருத்தரை அனுப்பிஉதவிபண்ணணும்"னார். சிலவுக்கு மடத்துலபணம் வாங்கி்க்கோ. சம்பாவனை அவாபாத்துக்குவா.சாப்டுட்டு ரெஸ்ட்எடுத்துக்கோ" என்றார் ஸ்வாமிகள். கனபாடிகளைகோயில்பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து அழைத்துச் சென்றார். பட்டர் வீட்டிலேயே தங்கினார்கனபாடிகள். ஊரிலிருந்துஓர் ஈ காக்காகூட கனபாடிகளை வந்து பார்க்கலை. "உபன்யாசத்தின்போது எல்லோரும் வருவா" என தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார். மாலைபெருமாள் சந்நிதி முன்ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தைக் காஞ்சிஆச்சார்யாளைநினைத்துஆரம்பித்தார்கனபாடிகள். எதிரே கோயில் பட்டரும்,காவலரும்தான். ஏன் ஒத்தருமேவரல்லே? என்று கேட்டார் கனபாடிகள். யார் தர்மகர்த்தாவா வருவதுஎன்பதிலே பங்காளிகளுக்குள்ளே சண்டை, உப்ன்யாசத்துக்கு நீங்கவந்திருக்கிற சமயத்துலஊர் இ்ப்படி ஆயிருக்கேனுரொம்ப வருத்தப்படறேன்" ஏழாவது நாள் முடித்தார்கனபாடிகள். பட்டர்பெருமாளுக்கு அர்ச்சனைபண்ணி பழங்களுடன் முப்பது ரூபாயைவைத்தார். காவல்காரர் தன் மடியிலிருந்துசில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார். பட்டர் ஒரு மந்திரத்தைச் சொல்லிசம்பாவனைத் தட்டைக் கனபாடிகளிடம் அளித்து , ஏதோஇந்த சந்தர்ப்பம் இப்படிஆயிடுத்து. மன்னிக்கணும். ரொம்பநன்னா ஏழு நாளும் கதைசொன்னேள். எத்தனை ரூவானாலும் சம்பாவனை பண்ணலாம்.பொறுத்துக்கணும்ன்னுஉருகினார்!. காஞ்சிக்குவந்தார் கனபாடிகள். அன்றும் ஆச்சார்யாளைத் தரிசிக்க கூட்டம். காத்திருந்தார்.உபன்யாசத்துக்கு நல்லகூட்டமோ?சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ? என்றார்ஸ்வாமிகள். கனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும்குரலில் "அப்படிஎல்லாம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டுகோஷ்டிக்குள்ளேஏதோ பிரச்னையாம் அதனாலே கோயில் பக்கம்ஏழு நாளும் யாருமேவல்லே"என்றார்கனபாடிகள். சரி...பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்கவந்தா? ரெண்டே..ரெண்டு பேர்தான்இது கனபாடிகள். உடனே பெரியவா, கலங்கக்கூடாது. யார்அந்தரெண்டு பாக்யசாலிகள்?..என்றார். வெளி மனுஷா யாரும் இல்லே,கோயில் பட்டரும்,காவலரும் என்று சொல்லி முடிப்பதற்குள்,ஸ்வாமிகள் சிரிக்கஆரம்பித்துவிட்டார். தேர்லஒக்காந்துகிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தைஅர்ஜுனன்ஒருத்தன்தான் கேட்டான். ஒனக்குபாரு.ரெண்டு பேர்கேட்டிருக்கா. கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலிஎன்று பெரியவாசொன்னவுடன் கனபாடிகளுக்குசிரிப்பு வந்துவிட்டது. பெரிய சம்பாவனை கெடச்சிருக்கவாய்ப்பில்லை....என்றார் பெரியவா. அந்த பட்டர் 30ரூவாயும்,காவல்காரர்2 1/4 ரூவாயும் சேர்த்து32 1/4கால் ரூவாகெடச்சுது நான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டுவந்தே.உன்னோட வேதப் புலமைக்கு நெறயப்பண்ணனும்.இந்தச்சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு என்றுகூறி, காரியஸ்தரைக் கூப்பிட்டுகனபாடிகளு்க்குஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார். இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு. நீயும் ஒன்குடும்பமும்சௌக்கியமா இருப்பேள் என்றுஉத்தரவும் கொடுத்தார்ஸ்வாமிகள். நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்தகனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப் பார்க்கஎதற்காகவந்தோம் என்ற விஷயம் ஞாபகத்துக்குவந்தது. பெரியவாகிட்டே ஒருபிரார்த்தனை...பெண் கல்யாணம்நன்னா நடக்கணும். அதுக்கு...அதுக்கு... என்று தயங்க, என்னுடையஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாகத்தைசந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்திவைப்பார். ஜாக்ரதையா ஊருக்குப் போ..என்றுவிடைகொடுத்தார் ஆச்சார்யாள். வெறுங்க்கையோடுவீட்டை அடையும் தனக்கு, வரவேற்பு எப்படிஇருக்குமோ என்ற பயத்துடன் வீட்டைஅடைந்தார்கனபாடிகள். இருங்கோ...வந்துட்டேன்...உள்ளே இருந்துமனைவியின்குரல்.. கால் அலம்ப தண்ணீர்கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே போனாள். காபி கொடுத்துவிட்டு பூஜை ரூமுக்கு வந்து பாருங்கோஎன்று கனபாடிகளை அழைத்தார் ஸ்வாமிக்குமுன் ,பழவகைகளுடன் புடவை,வேஷ்டி இரண்டுதிருமாங்கல்யம், மஞ்சள்,குங்குமம், புஷ்பம்இவற்றுடன்ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது. தாமு..இதெல்லாம்...என்று அவர்முடிப்பதற்குள் காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதாமடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்தா. எதுக்கு?னு கேட்டேன். ஒங்கபொண்கல்யாணத்துக்காக பெரியவாசேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னானு சொன்னா... பெரியவாளோட கருணையே கருணை. நான்ஒண்ணுமே கேட்கலே.இருந்தும்இதையெல்லாம் அனுப்பியிருக்கார் பாருஎன்று தழுதழுத்தவர் கட்டிலே ரூவா எவ்வளவுஇருக்குன்னு என்றுகேட்டார். கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.15000ரூபாய்! |