இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகல விதமான பாவங்களையும் நீக்கி மோட்சப்பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ, அதே போல் காமதா ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம், சகல வித பாபங்களையும் நீக்குகிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கர்மவினையின் காரணமாக இழி நிலை பிறவி எடுத்தவர் அதிலிருந்து விடுதலை பெறுவதுடன், இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர்.
காமதா ஏகாதசி ஒரு கந்தர்வனைப் பற்றியது. ரத்னபுரம் என்ற பட்டினத்தை புண்டரிகர் என்ற ராஜா ஆண்டு வந்தார். அந்த நகரத்தில் பல கந்தர்வர்களும், கின்னரர்களும், அப்சரசுகளும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் லலித் லலிதா என்ற கந்தர்வ தம்பதியர் மனமொத்து அன்புடன் வாழ்ந்து வந்தார்கள். லலித் என்பவர் பாடுவதில் வல்லவர். லலிதா ஆடுவதில் வல்லவர்.அந்த நகரத்தில் பாம்புகளும் வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் ராஜசபையில் அப்சரசுகளின் நடனத்திற்கு லலித் பாடிக் கொண்டு இருந்தார். அவரோடு லலிதா இல்லை. அவர் இல்லாமல் தவித்த லலித் பாடுவதில் தவறு செய்தார். இதனை கவனித்து கொண்டிருந்த ஒரு சர்ப்பம் மன்னரிடம் அதனை சுட்டிக் காட்டியது. வெகுண்ட மன்னர் லலிதை ஒரு நர மாமிசம் சாப்பிடும் ராக்ஷனாக மாற சபித்தார். லலித்தும் அப்படியே மாறினார்.
வருத்தமடைந்த லலிதா லலித் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உடன் சென்றார். நர மாமிசம் தேடி காடுகளில் அலைந்தார் லலித். மனமுடைந்த லலிதாவும் அவர் பின் சென்றார். ஒரு இடத்தில் ஷிரிங்கி ரிஷியை கண்டு அவரிடம் தனது நிலையை எடுத்துரைத்தாள். அவரும் காமதா ஏகாதசியின் மகிமையை எடுத்து சொல்லி அவளை அந்த ஏகாதசி விரதமிருக்கப் பணித்தார்.
அவ்வண்ணமே காமதா ஏகாதசி விரதமிருந்து தனது கணவருக்கு சாப விமோசனம் வேண்டினாள் லலிதா. தனது விரத பலனையும் கணவருக்கு அர்ப்பணித்தாள். பலனாக லலித் தனது அழகிய உருவத்தை மீண்டும் பெற்றார். லலிதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்தார்.
இவ்வாறாக காமதா ஏகாதசி விரதமிருப்பவர்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். சாப விமோசனம் பெற முடியும். தமது பாப சுமையிலிருந்து விடுபட முடியும்.
இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் அனைத்து பாபங்களும் நீங்குகிறது. இவ் விரதத்தின் புண்ணிய பலனானது பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களிலிருந்தும், மனித சொரூப இல்லா இதர யோனி பிறவிகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. உலகத்தில் இவ்விரதத்திற்கு நிகரான விரதம் வேறெதுவும் இல்லை. காமதா ஏகாதசி விரத கதை (அ) மஹாத்மியம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அத்யந்த பலனை அளிக்கக் கூடியது.