• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கார்த்திகை மாத மகிமைகள்

Status
Not open for further replies.
கார்த்திகை மாத மகிமைகள்

கார்த்திகை மாத மகிமைகள்


Astro-articles-12.jpg



காலாஷ்டமி, கால பைரவ பூஜை விரதம், ஆகாமாவை பௌர்ணமி, பரணி தீபம், கார்த்திகை தீபம், அருணாசல தீபம், சொக்கப்பனை என்று பல விசேஷங்களையும் இந்த விசேஷங்களை கார் நாற்பது, நெடுநல்வாடை, அகநானூறு, சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்கள் போற்றிக் கொண்டா டும் அற்புத மாதம் கார்த்திகை. பிரம்மதேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ‘என்ன இது? ஆரம்பமே சரி இல்லையே! பிரம்மதேவருக்கு அஞ்சு (5) முகமா? சதுர்முகன், நான்முக ன்னு சொல்றோமே தவிர, பஞ்சமுகன், ஐம்முகன்னு சொல்றது இல்லியே! பிரம்மாவுக்கு நாலுமுகந்தான்!’ என்றெல்லாம், சந்தேகச் சேற்றில் சிக்கிக் கொள்ள வேண்டாம். பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தன என்பதை, யோக வாசிஷ்டம் முதலான நூல்கள் விரிவாகவே கூறுகின்றன.

பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள், சிவபெருமானுக்கும் ஐந்து முகங்கள். அதன் காரணமாக பிரம்மாவிற்கு ஓர் ஆணவம் வந்து விடடது. ‘‘ஹ! சிவனுக்கும் ஐந்து முகம், எனக்கும் ஐந்து முகம். நானும் சிவனும் ஒன்று’’ என்று தலைகால் புரியாமல் பேசினார். அவ்வாறு பேசியது, அவருடைய ஐந்தாவது தலை.
அப்போது கால பைரவர் தோன்றி, பிரம்மதேவரின் அகம்பாவம் பிடித்த அந்த ஐந்தாவது தலையை வெட்டினார். கால பைரவரை பிரம்மஹஸ்தி தோஷம் பிடித்துக் கொண்டது. காலபைரவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம், காசி நகரில் நீங்கியது. அதன் காரணமாக, சிவபெருமான் காலபைரவரைக் காசிக்குத் தலைவராக நியமித்தார். அங்கே, பாவம் செய்தவர்களைத் தண்டிக்கும்படியான அதிகாரத்தைக் கால பைரவ ருக்கே சிவபெருமான் கொடுத்து இருக்கிறார்.

அதனால்தான், காசிக்குச் செல்பவர்கள் பைரவர் கோயிலுக்குப் போய், பைரவ தண்டனை பெறுவதைப்போல, அங்குள்ள பூசாரிகளால் மயில்தோகை கொண்டு அடிக்கப்படுகிறார்கள். காசி பைரவரின் கறுப்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்கிறார்கள். கால பைரவர் கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச (பௌர்ணமிக்கு அடுத்த) அஷ்டமியில் அவதரித்தார். அதனால், பாவங்களில் இருந்து விடுதலை பெறு வதற்காக, கால பைரவர் அவதாரம் செய்த நன்னாளில் கால பைரவரின் அருள் வேண்டி விரதம் இருப்பது இந்தியாவின் வட மாநிலங்களில் பெருவாரியாக நடந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் ‘ஆகாமாவை’ பௌர்ணமி என்று ஒன்று வருகிறது. சகலவிதமான தர்மங்கள், பூஜை, நீராடல், தானங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஏற்ற புண்ணியமான நாள் இது.

அது என்ன ‘ஆகாமாவை’ பௌர்ணமி?

ஆகாமாவை என்பதன் விரிவாக்கம், ஆஷாட, கார்த்திக, மாக வைசாகம்! அதாவது ஆடி, கார்த்திகை, மாசி, வைகாசி மாதங்கள். இவற்றின் முதல் எழுத்துகளைக் கூட்டிப் பாருங்கள், ‘ஆகாமாவை’ என்று வரும். இந்த நான்கு மாதங்களிலும் வரும் பௌர்ணமி நாட்களில், சந்திரன் காலையில் மறைவதற்குள் நீராடினால், பாவங்கள் எல்லாம் விலகி, மிகுந்த புண்ணியம் கிடைக்கும். ஆடி, கார்த்திகை, மாசி, வைகாசி என்னும் மாதங்களின் பௌர்ணமி நாட்கள் ஆகாமாவை புண்ணிய காலங்கள் எனப்படும். கார்த்திகை தீபத்தைப் பற்றிய முக்கியமான தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம். கார்த்திகை தீப வழிபாட்டைப் பற்றி நம் பழந்தமிழ் நூல்கள் பல வாறாக குறிப்பிடுகின்றன.

அகனகர் எல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர் மலர் நெல்லொடு தூஉய்ப்பகன் மாய்ந்த மாலை மணி விளக்கங் காட்டி (சிலப்பதிகாரம்); மனை வி ளக்குறுத்து மாலை தொடரி (அகநானூறு); இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீ இ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது (நெடுநல் வாடை); நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கில் தகைமை உடையவாகி (கார் நாற்பது).... தீபத்தின் பெருமையை இவ்வாறு பழந்தமிழ் நூல்கள் மட்டுமல்ல, வரலாற்று ஆராய்ச்சி நூல்களும் அழகாகக் குறிப்பிடுகின்றன. மொகலாய சக்கரவர்த்தியான அக்பர் தீபத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்ற தகவலை, ‘அயின் அக்பரி’ என்ற நூல் தெரிவிக்கிறது.

அப்படிப்பட்ட தீப வழிபாட்டின் பெருமையை விளக்கும் மாதம் இது. கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் என்பது ஏற்றப்படும். பரணி தீபத்திற்கு உண்டான முறைப்படி, அதை ஏற்றுகின்றோமோ இல்லையோ, அதைப் பற்றிய தகவல்களையாவது தெரிந்து கொள்வோம். வாருங்கள். பரணி தீபம் என்பது கார்த்திகை தீபத்திற்குப் பூர்வாங்கமானது ஆகும். பரணி தீபத்தைக் கொண்டே, மறு நாளான கார்த்திகை தீபத்தன்று, திருவண் ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதாக ஐதீகம் உண்டு. பரணி நட்சத்திரத்திற்குத் தலைவன் யமதர்ம ராஜா. அந்த யமதர்மராஜாவைப் பிரார்த்தித்து ஏற்றப்படுவதே பரணிதீபம்.
பரணிதீபம் ஏற்றுவதிலும் முறைகள் உண்டு. நம் கையால் பஞ்சைத் திரித்துத் திரியாக ஆக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட 360 திரிகளை, ஒரு மடக்கில் போட்டு (மண்ணால் செய்யப்பட்ட பெரிய அகல் விளக்கில்) எண்ணெய் விட்டு ஏற்ற வேண்டும். ஏன் இப்படி?

நமது வாழ்நாள் முடிந்ததும், நமது ஆன்மா இரண்டு வகையான வழிகளில் பிரயாணம் செய்து, மேலுலகை அடைகிறது. ஒருவழி உத்தராயண வழி, இரண்டாவது வழி தட்சிணாயண வழி. நற்செயல்கள், தானம், தவம், வழிபாடு முதலானவற்றைச் செய்தவர்கள், ஒளிமிகுந்த உத்தராயண வழியில் பயணம் செய்து, பிரம்மலோகத்தை அடைவார்கள். அவ்வாறு செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள், ஆகியோரின் உயிர், தட்சிணாயணம் என்னும் இருள் மயமான வழியில் பயணம் செய்து, இருள் மயமான உலகை அடையும். அப்படிப்பட்ட ஜீவர்கள் பயணம் செய்யும் அந்த இருள் வழியிலும் ஒளி காட்ட வேண்டுமென யமனைப் பிரார்த்தித்து ஏற்றப்படுவதே - பரணி தீபம்.

நமக்கு ஓர் ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதைக் குறிக்கும் முகமாகவே 360 திரிகளை ஒன்றாகச் சேர்த்துப் போட்டு பரணி தீபம் ஏற்றுகி றோம்.
அதாவது இருள்மயமான வழியில், இறந்து போய் பயணப்படுபவர்களுக்கு ஒளிமயமான வழியைக் காட்டு என தினந்தோறும் (தேவலோக கணக்குப் படி) பிரார்த்திப்பதாகக் கருத்து. பரணி தீபம் யமனைப் பிரார்த்தித்து ஏற்றப்பட்டாலும், அந்தத் தீபத்தில் பார்வதி-பரமேஸ்வரரை ஆவாகனம் செய்து, அவர்களை வழிபட வேண்டும். அதனால் யமதர்மராஜா மகிழ்வார். பரணி தீபத்திற்கு மறுநாளான கார்த்திகை தீபத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஞான நூல்கள் அனைத்தும் இறைவனை ஜோதி மயமானவராக ஒளி மயமானவராக அறிவிக்கின்றன.

தீப மங்கள ஜோதீ நமோ நம (அருணகிரிநாதர்); திருவையாறு அகலாகு செம்பொற் சோதீ (தேவாரம்)....
இவ்வாறு சொன்ன ஞான நூல்களில், ‘ஞான சாரம்’ என்ற நூல் இன்னும் ஒரு படி மேல போய், ஓர் அற்புதமான தகவலைச் சொல்கிறது.
அதாவது, ஜோதி - சிவபெருமான். ஜோதியில் கையை வைத்தால், அது சுடுகிறதல்லவா? அந்த சூடு, பராசக்தி. ஜோதி சிவந்த நிறத்தில் காட்சி அளிக்கிறது. அந்தச் சிவந்த நிறம் - விநாயகப் பெருமான். ஜோதியில் இருந்து வெளிப்பட்டுப் பரவும் ஒளி - முருகப் பெருமான்.

ஒரு ஜோதியிலேயே எவ்வளவு தெய்வ வடிவங்கள்!
இதைக் கீழ்க்காணும் பாடல் சொல்கிறது:
சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திடமார் கணநாதன் செம்மை - படரொளியோ
கந்த வேளாகும் கருதுங்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு (ஞானசாரம்)

இப்படிப்பட்டி ஜோதி வழிபாட்டின் பெருமையை விளக்கும் கார்த்திகை மாதத்தில், மாதம் 30 நாட்களும் தீபதானம் செய்வது சிறப்பு. செல்வ வசதி உள்ளவர்கள், கோயில்கள், திருமடங்கள், வீடு, நான்கு தெருக்கள் கூடும் இடங்கள் மற்றும் வீதிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கலாம். முடியாதவர்கள் கார்த்திகை மாத பௌர்ணமி தொடங்கி முன்று நாட்களாவது, தங்கள் வீட்டில் வரிசையாகத் தீபமேற்ற வேண்டும். கார்த்திகை தீப வழிபாட்டிற்கென்றே, நமது முன்னோர்கள் ஒரு திருத்தலத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது, திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் இது ‘அக்னி’ தலமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜோதி வடிவமாக நின்ற சிவபெருமானின் அடி - முடி தேடி, விஷ்ணுவும் பிரம்மாவும் சென்றதாகச் சொல்லப்படும் கதை நிகழ்ந்தது திருவண்ணாமலையில்தான்.
அடி-முடி தேடிக் காணமுடியாத இந்த ஜோதியே அருணாசலமாக ஆனது. அக்னிமயமான மலை அது. மற்ற மலைகளில் எல்லாம், மழை பெய்தால், அப்படியே மழைநீர் வழிந்து, வடிந்து ஓடும். ஆனால் திருவண்ணாமலை திருத்தலத்தில் உள்ள அரு ணாச்சலம் என்னும் அந்த மலையில் எவ்வளவுதான் மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்து ஓடாது. அனைத்தையும் ‘அக்னி’ மயமான மலை அதை உறிஞ்சிக்கொண்டுவிடும். கார்த்திகை தீபத் திருநாளன்று உபவாசம் இருந்து, அன்று மாலையில் ஜோதி தரிசனம் செய்து, அருணாசலம் என்னும் அந்த மலையை ‘கிரிவலம்’ செய்தால் -அஞ்ஞானம் நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். முக்தி பெறலாம். விருப்பங்கள் நிறைவேறும்.

இவ்வாறு ‘கிரிவலம்’ செய்வதைப் பற்றியும், ஞான நூல்கள் கூறுகின்றன. ஒருசமயம் அம்பிகை விளையாட்டாக சிவபெருமானுடைய இரண்டு கண்களையும் தன் கரங்களால் பொத்தினாள். சூரிய-சந்திரர்களையே தன் கண்களாகக் கொண்ட சிவபெருமானின் கண்கள் மூடப்பட்டதால், இரவு-பகல் இல்லாமல் போய் விட்டது.இரவு-பகல் தெரியாமல் போனதால் முனிவர்கள் முதலானவர்களால், கர்ம அனுஷ்டானங்களைச் செய்ய முடியாமல் போயிற்று. அதனால் மிகவும் வருந்திய தேவீ, தன் பாவம் தீரக் காஞ்சியில் தவம் புரிந்தாள். அப்போது சிவபெருமான் தோன்றி, ‘‘தேவீ! உன் பாவம் தீர்ந்தது. நீ போய், திருவண்ணாமலையில் தவம் செய்! எம்மேனியில் பாதியாக இடம் பெறு வாய்’’ என்றார்.

அதன்படியே அம்பிகை திருவண்ணாமலை வந்து தவம் செய்து, இறைவனின் திருமேனியில் பாதி பெற்றாள். அர்த்தநாரீசுவரர் என்ற திருநாமமும் சிவ பெருமானுக்குக் கிடைத்தது. அம்பிகை, தன் தவம் நிறைவுபெற்று, தன் எண்ணமும் ஈடேறப்பெற்றதால் கார்த்திகை மாதத்தில், திருவண்ணாமலை மேல் உள்ள தீபத்தைத் தரிசித்து, கிரிவலமும் வந்தாள். அதனால் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபதரிசனம் செய்து, கிரிவலம் செய்பவர்கள் விரும்பியதைப் பெறுவார்கள்.
உத்தமமான கார்த்திகை தீபத் திருநாளுக்குப் ‘பத்மகம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

அது மிகவும் சிறந்த புண்ணிய காலம்.கார்த்திகை மாதப் பௌர்ணமி, திங்கட்கிழமையன்றோ அல்லது வியாழக்கிழமையன்றோ வந்தால், அது மகாததி, மகா கார்த்திகை எனப்படும். அது இன்னும் விசேஷமான புண்ணிய காலம். கார்த்திகை மாதப் பௌர்ணமி நன்னாளில்தான் கோமுகன் என்ற அரக்கனைக் கொன்று வேதத்தை மீட்டுவர, பகவான் பரவாசுதேவன் மச்சாவதாரம் எடுத்தார். கார்த்திகைப் பௌர்ணமிக்கு மேலும் மகிமை சேர்க்கும் நிகழ்வு இது.

பி.என்.பரசுராமன்

?????????? ??? ???????? - Kungumam Tamil Weekly Magazine

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top