• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கார்த்திகை மாத விரதங்கள்.திருவிசலூர் கங&

Status
Not open for further replies.

kgopalan

Active member
கார்த்திகை மாத விரதங்கள்.திருவிசலூர் கங&

கார்த்திகை மாத விரதங்கள்.

22-11-2014;-- திருவிச நல்லூர் ஶ்ரீ ஶ்ரீ தர ஐயா வாள் கங்கா ஆகர்ஷணம்.. கும்பகோணம் அருகிலுள்ள திருவிசநல்லூரில் 1635 முதல் 1720 வரை வசித்து வந்த ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேசர் என்பவர் நாம ஸித்தாந்தத்தை ஸ்தாபனம்

செய்த மூவருள் ஒருவர். ஶ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளால் அபியுக்த சிகாமணி என்றும் மற்றவர்களால் ஐயாவாள் என்றும் அன்புடன் அழைக்கபட்ட இவரது பெருமையை உலகிற்கு காட்ட பரமேஸ்வரன் செய்த

லீலையால் ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மாதம் அமாவாசையன்று இவர் வீட்டு கிணற்றில் கங்கை பொங்கி வழிகிறது. இதில் ஸ்நானம் செய்தால் கங்கா ஸ்நான பலன் கிட்டும். அங்கு இது விமரிசையாக கொண்டாட படுகிறது.

விவரங்களுக்கு www.sriayaaval.org..ஶ்ரீ ராமக்ருஷ்ண பாகவதர் தொலை பேசி (0435).2461616 மற்றும் 9443443815 தொடர்பு கொள்ளவும்.

13-11-2014 முதல் 22-11-2014 வரை தினமும் அன்ன தானம், நாம ஸங்கீர்த்தனம், ப்ரவசனம், ஸங்கீதம் நடை பெறுகிறது.


திந்திரிணி கெளரி வ்ரதம்:-- மார்க சீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை 24-11-2014.

திந்திரிணி என்றால் புளி. புளிய மரத்தின் அடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். புளியஞ்சாதம் மற்றும் புளிப்பு பொருட்கள் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்..

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, பாசம் ஏற்படவேண்டும் என்றால் பார்வதி என்னும் கெளரீயை பூஜிக்க வேன்டும் என்கிறது ஶ்ரீ பாகவதம்.கெளரி என்றால் வெண்மை அல்லது தூய்மை எனப்படும்.


ஜாதகத்தில் சுக்ரன் நீசமாக கன்னியா ராசியில் இருந்தாலோ அல்லது கெடுதலான இடங்களில் சுக்ரன் இருந்தாலோ காலத்தில் திருமணம் நடைபெறாது. திருமணம் ஆனவர்களுக்குள் கருத்து வேற்றுமை, ஒற்றுமை யின்மை. பிரிவு போன்றவை ஏற்படலாம்.. தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படவும் இந்த கெளரீ விரதம் தக்க பரிஹாரமாகும்.


சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்யவும். விரத பூஜா விதானம் புத்தகத்தில் ஸ்வர்ண கெளரி விரதம் போல் இப்பூஜையை செய்ய வேண்டும்.


26-11-2014 பதரி கெளரி விரதம்:- மார்க்கசீர்ஷ மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி.

பதரி என்றால் இலந்தை பழம். . இலந்தை மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். இலந்தை பழங்கள் நிவேதனம் செய்து தானும் சாப்பிடவும். பிற குழந்தைகளுக்கும் கொடுக்கவும்.

இதனால் சிறந்த அறிவு ( ஞானம்) கிட்டும். வாழக்கையின் இறுதியில் ஆத்ம தர்சனம் கிடைக்கும் ஆத்மா விஷயமான உபனிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.


27-11-2014. மார்கசீர்ஷ சஷ்டி திதி சிவலிங்கம் தரிசனம் செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி கெளஸ்துபம் –பக்கம் -430..

“”மார்கசீர்ஷே (அ)மலே பக்ஷே சஷ்டியாம் வாரே (அ) ம்ஸு மாலின: சத தாரா கதே சந்த்ரே லிங்கம் ஸ்யாத் த்ருஷ்டி கோசரம்”

மார்கசீர்ஷ மாத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று நூறு நக்ஷதிரங்கள் ஒன்றாக சேர்ந்ததால் சத தாரா என்ற பெயருடைய சதய நக்ஷத்திரத்தில் சிவாலயத்தில் முறையாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்க படும் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

இதனால் குடும்பத்தில் முன்னோர் காலத்து நிகழ்ந்த சிவாபசார தோஷங்கள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களின் மனோ புத்தி தோஷங்கள் விலகும். மனநிம்மதி அறிவு திறன் வளரும்…


28-11-2014;- சூரிய வ்ருதம்.- மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி..

மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார். “”அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர: ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின்
மித்ர ஸப்தமி “”—ஸ்ம்ருதி கெளஸ்துபம்-பக்கம்-430.

பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் திவாகரன் எனப்பெயர்.
அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் மித்ரன் எனப்பெயர்.

இன்றைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்
சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்.

“”நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை: மது நா ச ப்ரசஸ்தேந ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான் என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.

இதனால் ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத் என்பதாக தீராத அனைத்து நோய்களும் தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்.



2-12-2014 கைசிக ஏகாதசி அல்லது உத்தான ஏகாதசி:-அல்லது ப்ரபோத ஏகாதசி கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி யன்று பகவான் யோக நித்திரை யிலிருந்து கண் விழிக்கிறார்.

கரஹரப்ரியா ராகத்தின் மேள கர்த்தாவின் ஜன்ய ராகம் கைசிகா. . இந்த கைசிகா ராகத்தில் பாடிய பலனை ஒரு ப்ருஹ்ம ராக்ஷசுக்கு ஒரு பாடகர் கொடுத்து அந்த ப்ரஹ ராக்ஷசிற்கு சாப விமோசனம் கிடைக்க பெற்றதால் கைசிக ஏகாதசி எனப் பெயர்.

திருக்குறுங்குடி க்ஷேத்திரத்தில் இன்றும் இது நாடகமாக நடித்து காண்பிக்க படுகிறது. இந்த கைசிக ஏகாதசி தினத் தன்று தான் ஶ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுன னுக்கு பகவத் கீதை உபதேசம் செய்யப்பட்ட நாள்.. பகவத் கீதை இந்த உலகிற்கு வெளிப்பட்ட நாள். இன்று நாமும் சிறிதேனும் கீதை படிக்கலாம்.


5-12-2014:- கார்த்திகை மாத க்ருத்திகையில் முருகன் தரிசனம்;
“”கார்திக்யாம் க்ருத்திகா யோகே ய: குர்யாத் ஸ்வாமி தர்ஸனம் ஸப்த ஜன்ம பவேத் தீரோ த நாட்யோ வேத பாரக:””

5-12-2014 அன்று கார்த்திகை மாத க்ருத்திகை. இன்று யார் ஆலயத்தில் முருகனை தரிசனம் செய்கிறாரோ அவர் இம்மையிலும் அடுத்த ஏழு பிறவிகளிலும் தைரியம், செல்வம்,மக்கட் செல்வம் பெற்று வேத பொருளையும் உணர்ந்து இன்பமாக வாழ்வார்கள்.


14-12-2014 கார்த்திகை கடைசி ஞாயிறு.

“”ஆஸீனம் அம்பிகாம் துர்காம் அபயங்கர ஷண்முகெள வாஸுதேவம் ச வாஞ்சேஸம் மங்களாக்யாம் நமாம்யஹம்”

அமர்ந்த நிலையில் உள்ள மங்களாம்பாளையும், அபய ஹஸ்த துர்கை யையும் ஆறுமுகத்தனையும், வஸுதேவனையும் வாஞ்சேஸ்வர ரையும் நமஸ்கரிக்கிரேன் என்கிறது இந்த ஸ்லோகம்.

நன்னிலம் அருகில் உள்ள ஶ்ரீ வாஞ்சியத்தில் கார்த்திகை கடை ஞாயிறு உத்ஸவம் குப்த கங்கையில் தீர்த்த்வாரியுடன் சிறப்பாக நடை பெறும்.
முக்தி தரும் க்ஷேத்ரம் ஶ்ரீ வாஞ்சியம்.. பித்ரு கர்மாக்கள் செய்ய காசி ராமேஸ்வரம் போல் சிறந்த க்ஷேத்ரம் ஶ்ரீ வாஞ்சியம்..



4-12-2014 பரணி தீபம்.

6-12-2014 :- ஸர்வாலய தீபம்.

ஶ்ரீ மஹா விஷ்ணு மஹா பலியை ஆட்கொண்ட நாள். ஸ்ரீ பரமேஸ்வரன் திரிபுர அஸுரனை வதைத்த நாள்.
இன்று மாலையில் அனைத்து கோவில்களிலும், வீடுகளிலும் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி விளக்குகள் ஏற்ற பட வேண்டும்.

“”கீடா: பதங்கா: மசகாஸ்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே விசரந்தி தேவாஹா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் நச ஜனமபாகின: பவந்தி நித்யம் ச்வபசாஹி விப்ராஹா”

இந்த புண்ணிய நன்னாளில் தண்ணிரிலும் தரையிலும் வாழும் புழுக்கள் பூச்சிகள், பறவைகள், கொசுக்கள், மரங்கள், அந்தணர்கள், நாய் தின்னும் புலையர்கள். முதலான அனைவரும் இந்த தீபத்தை காண நேர்ந்தால் அவர்களுக்கு மறு பிறவியில்லை.

இவ்வாறே எனது மனதிலுள்ள ஆசை, கோபம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் .ஆகிய அழுக்குகளும் எரிக்கப்பட்டு அக்ஞான இருள் நீங்க வேண்டும். என்பதாக இந்த ஸ்லோக அர்த்தம்.

கோவில்களில் சொக்க பானை கொளுத்துவார்கள். அந்த ஸமயம் சிறிது குங்கிலீயம் வாங்கி எடுத்து போய் சொக்கபானை எரியும் போது குங்கிலீ யத்தை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி போட வேண்டும்.

இதனால் நாம் செய்த பாபங்கள் விலகி குடும்பத்தில் நன்மையுண்டாகும்.
“உஜ்ஜ்வல ஜ்யோதிராகாசே தீப்யமானே விபாவஸெள குக்குலும் ப்ரக்ஷி
பாம்யத்ர ப்ரீதோ பவ மஹாபலே”


6-12-2014:-- ஆ கா மா வை.

இன்று விடியற் காலையில் சுமார் 4-30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஸ்நானம் செய்ய வேண்டும். இதனால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம்
சுகம், தைர்யம், ஆரோக்கியம் இவைகளை அடைய முடியும் என்கிறது ஸத்யவ்ரத ஸ்ம்ருதி.

6-12-2014 லவண தானம்;-

மார்கசீர்ஷ பெளர்ணமியான இன்று நாம் சாப்பிடும் கல் உப்பை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்./ இன்று காலை நித்ய பூஜைகளை முடித்து விட்டு சுத்தமான உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு தெய்வ ஸன்னதியில் மார்க்க சீர்ஷ பூர்ணிமாயாம்

ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் லவண தானம் கரிஷ்யே என்று உப்புடன் கூடிய பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு துளசி தக்ஷிணை சேர்த்து ரஸானா மக்ரஜம் ஸ்ரேஷ்டம் லவணம் பலவர்த்தனம் தஸ்மாதஸ்ய ப்ரதானேன அத: சாந்திம் ப்ரயஸ்சமே.

மார்க்கசீர்ஷ பூர்ணிமா மஹாபுண்ய காலே மம ஸஹ குடும்பஸ்ய ஸதா
ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் இதம் லவணம் ச பத்ரம் ஸம்ப்ரததே. என்று சொல்லி கீழே வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அதை யாரோ ஒருவருக்கு கொடுத்து விடவும்.

மேலும் பலருக்கு இன்று கல் உப்பு வாங்கி தரலாம். இதனால் தானம் செய்பவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அழகான தோற்றம் ஏற்படும்.
எப்போதும் அழகு குறையாது. என்கிறது நிர்ணய ஸிந்து.


6-12-2014:-ஸர்ப்ப பலி உத்ஸர்ஜனம்>

சிராவண பெளர்ணமியன்று ஆரம்பித்து சுமார் நான்கு மாதங்கள் தினசரி மாலையில் ஸத்து (அரிசி) மாவால் ஸர்ப்பங்களுக்கு பலி போட்டு அநுஷ்டித்து வந்த ஸர்ப்ப பலி எனும் கர்மா இன்று முடிவு அடைகிறது.

இன்று மாலை முன்பு போல் பலாச பூக்காளாலும் கொன்றை ஸமித்துக்களாலும் உத்ஸர்ஜன ஸ்தாலி பாக ஹோமம் செய்து ஸர்ப்ப பலியை நிறைவு செய்ய வேண்டும்.


6-12-2014 தத்தாத்ரேயர் ஜயந்தி:--

பதிவிரதையான அனஸூயா தேவிக்கும் அத்ரி மஹரிஷிக்கும் புத்ரராக மார்கழி மாத பெளர்ணமியன்று புதன் கிழமை ம்ருகசீர்ஷ நக்ஷத்திரதன்று அவதரித்தார் தத்தாத்ரேயர்.

இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் கஷ்டங்கள் தூர விலகி போகும்.
இவரை உபாசித்தால் பூத ப்ரேத பைசாச தொல்லைகள் நீங்கும். . ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் தீவிர வைராக்கியமும் உண்டாகும்.


8-12-2014:--பரசுராம ஜயந்தி;

ஶ்ரீ மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். த்ரேதா யுகத்தில் ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி மஹரிஷிக்கும் மகனாக பிறந்தார். தந்தை சொல்படி தாயின் தலையை துண்டித்து பின்னர் தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்பித்தார். ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர். இன்று பரசு ராமரைபூஜிப்போம்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top