P.J.
0
கோஸ் சாம்பார்/Cabbage sambar
கோஸ் சாம்பார்/Cabbage sambar
முருங்கைக்கீரை சாம்பார்,முருங்கைக்கீரை&வாழைப்பூ சாம்பார்,கோஸ் சாம்பார் இவை செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்தால் சூப்பரா இருக்கும்.
தாளிக்கும்போது பெருஞ்சீரகம் சிறிது சேர்த்தும்,புளி சேர்க்காமலும் செய்ய வேண்டும்.மேலும் சாம்பார் நீர்த்து இருக்க வேண்டும்.சாதத்துடன் சாதாரன சாம்பார்போல் இல்லாமல் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட வேண்டும்.
தேவையானவை:
துவரம் பருப்பு_1/4 கப்
கோஸ்_ஒரு சிறு பூவில் பாதி
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,2 பூண்டிதழ் சேர்த்து மலர வேகவைக்கவும்.
தேவையான கோஸ் இலைகளைப் பிரித்துக் கழுவிவிட்டு,தண்ணீர் வடிய வைத்த பிறகு,மெல்லிய அளவில் நறுக்கிக்கொள்ளவும்.நான் நீளநீளமாக நறுக்கிக்கொள்வேன்.வெங்காயம்,தக்காளி நறுக்கிக்கொள்ளவும்.
குழம்பு வைக்கப்போகும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுக்காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம், தக்காளி அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.
தேவையான தண்ணீர் சேர்த்துக்கொண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
நன்றாகக் கொதித்த பிறகு கோஸ் சேர்த்துக் கிளறிவிடவும்.
கோஸ் சீக்கிரமே வெந்துவிடும்.கோஸ் சேர்த்த பிறகு,சாம்பார் கொதிக்க ஆரம்பித்து ஒரு 5 நிமிடம் கழித்து, தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
கோஸ் சேர்த்த பிறகு மூடி போடாமல் கொதிக்க விட்டால் அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
இப்போது கமகம வாசனையுள்ள சாம்பார் ரெடி.இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
https://chitrasundar5.wordpress.com/2012/12/10/கோஸ்-சாம்பார்cabbage-sambar/