P.J.
0
சாதாரண பக்தர்களுக்கு திருப்பதியில் முன&#
சாதாரண பக்தர்களுக்கு திருப்பதியில் முன்னுரிமை
திருப்பதியில் சாதாரண பக்தர் களுக்கு முன்னுரிமை வழங்கப் படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கூறினார்.
திருமலை-திருப்பதி தேவஸ் தானம் சார்பில் திருப்பதியில் நேற்று 69-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்ப சிவ ராவ் தேசியக்கொடி ஏற்றி னார். பின்னர் தேவஸ்தான பாது காப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து சாம்பசிவ ராவ் பேசும்போது, “திருப்பதியில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரு பிரமோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. தேவஸ்தான அதிகாரி கள், ஊழியர்கள், வாரி சேவகர் கள் வழக்கம்போல் பக்தர்களுக்கு சிறந்த சேவை அளிக்கவேண்டும்.
தேவஸ்தானம் சார்பில் பல நல்ல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை, 3 வரிசையில் பக்தர்களுக்கு தரிசனம், ஆன் லைனில் தங்கும் விடுதி குறித்த விவரம் போன்ற பல திட்டங்கள் பக்தர்களிடையே நல்ல வர வேற்பை பெற்றுள்ளன. திருப்பதி யில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
சித்தூரை அடுத்துள்ள பலம நேரில் மிகப்பெரிய கோசாலை அமைக்கப்படும். மேலும் 10 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரமும், 7.2 மெகாவாட் காற்றாலை மின் சாரமும் உற்பத்தி செய்ய தேவஸ் தானம் திட்டமிட்டுள்ளது” என்றார்.
விழாவில் தேவஸ்தான கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. பாதுகாப்பு படையில் உள்ள குதிரைகள், மோப்ப நாய்களின் சாகச நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 169 தேவஸ்தான ஊழியர்களுக்கு நற்சான்றிதழும், 5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
ஆன்லைன் மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை, 3 வரிசையில் பக்தர்களுக்கு தரிசனம், ஆன்லைனில் தங்கும் விடுதி குறித்த விவரம் போன்ற பல திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
http://tamil.thehindu.com/india/சாத...ticle7546557.ece?homepage=true&relartwiz=true