B
bliss192
Guest
சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து
சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்
From: தமிழ்ஹிந்து இணைய தளம்
நீ பிராமணன் உள்ளிட்ட எந்த வர்ணத்தையும் சேர்ந்தவன் இல்லை. அனைத்தையும் சாட்சியாய் அறியும் விழிப்பு நிலையே நீ என்று அறிவாயாக. – அஷ்டவக்ர சம்ஹிதை
அர்ஜுனன் சொல்கிறான்: என் உறவினரான துரியோதனர்களைக் கொன்றால் அந்தக் குலம் அழியும். குலம் அழிந்தால், அவர்கள் பின்பற்றும் குல தர்மம் அழியும். குல தர்மம் அழிந்தால் ஒரு குலத்துப் பெண்கள் மற்ற குலத்து ஆண்களோடு சம்பந்தம் கொள்வார். சாதிக் கலப்பால் தர்மம் அழிந்து போகும். குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.
கிருஷ்ணன் சொல்கிறான்: அழியும் உடல்களால் உருவாகுபவை பற்றுதல்களே; அன்றி, கடமைகள் அல்ல. அவை ஆத்மாவை அறியச் செய்யாது. ஆத்மாவை அறிந்து செயல்படுவதே தர்மம். மற்ற எதுவும் தர்மம் இல்லை.
தனிமனிதரின் குணம் மற்றும் செயல் – என்ற இந்த இரண்டின் மூலமாகவே வர்ண ஆசிரமம் உண்டாகிறது (பிறப்பால் இல்லை).
ஒருவரின் குணம் மற்றும் செயல்களால் உருவாகும் அந்த சுயதர்மத்தைப் பின்பற்றுவதுதான் அவரவர் கடமை. அனைத்து வகை தர்மங்களிலும் சிறந்தது சுயதர்மம் மட்டுமே. சுயதர்மத்தின்படி மட்டுமே நீ செயல்படு. சுயதர்மப்படி செயல்படாமல் இருப்பதுதான் பாவம். - பகவத் கீதை
பிராமணர் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளிலும், சாதிக் கலப்புத் திருமணம் குறித்துக் கடுமையான விதிகள் இருக்கின்றன. இருந்தாலும், சாஸ்திர சம்மதத்தோடோ அல்லது ரகசியமாகவோ உடல் உறவுகள் பல தலைமுறைகளாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சாதி இணக்கத் திருமணத்தை மிகக் கடுமையாகத் தடை செய்தாலும், எதிர்காலத்திலும் சாதி கடந்த உடல் உறவுகள் இருக்கத்தான் செய்யும். அதனால், ஒரு பார்ப்பனரின் மகன், பிராமணருக்கே உரிய உள்ளார்ந்த தகுதிகள் உள்ளவனாகவும், சத்திரியர் ஒருவரின் மகன் சத்திரியனுக்கே உரிய தகுதிகள் நிறைந்தும் இருப்பான் எனும் அந்த முழு நம்பிக்கையுமே ஒழிக்கப்பட வேண்டும்.
நம் அனைவரின் சாதிகளிலும் கலப்பு உறவுகள் நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நடந்து வருவதால், எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் ஒரு குறிப்பிட்ட தகைமைக்கு ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. – வீர சாவர்க்கர் (1931, Jatyuchchedak nibandha or essays on abolition of caste, Samagra Savarkar vangmaya,* Vol. 3, p. 472)
யுதிஷ்டிரன் கூறுகிறான்: நகுஷன் எனும் நாகனே, சூத்திரனோ பிராம்மணனோ பிறப்பால் உருவாகுவதில்லை. அவரவருக்கு இயல்பாக உள்ள குணத்தாலே வர்ணத்தை அடைகிறார்கள். நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் உடல் உறவு ஏற்படுவதால் பிறப்பின் அடிப்படையில் வர்ணத்தை நிர்ணயிக்க முடியாது. சமூகப் படிநிலைகளில் ஒரு படிநிலையில் இருக்கும் ஆண் மற்றொரு சமூகப் படிநிலையில் இருக்கும் பெண் மூலம் குழந்தைகள் பெறுகிறான். எனவே, ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்:
“குணமே முதன்மையானதும் முக்கியமானதுமான காரணி”.
இதை நிறுவும் வகையில் யாகங்களை ஆரம்பிக்கும்போது ரிஷிகள் இவ்வாறு கூறுகிறார்கள்:
“நாங்கள் எப்போதேனும் எதேனும் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த யாகத்தை நாங்கள் ஒன்றாகக் கொண்டாடுகிறோம்”. - மகாபாரதம்
கேள்வி: சாதி இணக்கத் திருமணத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை எப்படி உடைப்பது ?
சாதி இணக்கத் திருமணத்திற்கு எதிரான தடைகளை உடைப்பது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சாதியைச் சேர்ந்த பெண் மற்றொரு சாதியில் வற்புறுத்தித் திருமணம் செய்து தருவது என்று தவறாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது. காதல், நல்லொழுக்கம், அத்துடன் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுத் தரும் தகுதி போன்ற விரும்புதலுக்கு உரிய குணங்களை உடைய ஒரு இந்து, மற்றொரு சாதியைச் சேர்ந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தால், அவர்களுடைய சாதிகள் வேறுபட்டவை என்ற காரணத்தால் அப்படிபட்ட சம்பந்தம் எதிர்க்கப்படக் கூடாது. அந்தத் தம்பதிகள் இணைந்து வாழ்வது தகுதி அற்றது என்று கருதப்படக்கூடாது. – வீர சாவர்க்கர்
சாதி என்று இப்போது நாம் அறியும் இந்த அமைப்பை, அதன் அனைத்து விகாரங்களோடு சாத்திரங்கள் ஆதரித்தால், நான் என்னை ஹிந்து என்று அழைக்க மாட்டேன். ஹிந்துவாக இருக்கவும் மாட்டேன். ஏனெனில், சமபந்தி உணவு அருந்துவதிலோ சாதி இணக்கத் திருமணங்கள் குறித்தோ எனக்கு எந்த விதமான மனத் தயக்கமும் கிடையாது. – மகாத்மா காந்தி (Collected Works, vol.liii, pp.225f.)
சாத்திர (ஸ்ம்ருதிகள்) அடிப்படையிலான சாதிப் பாகுபாடு ஒரு மனோ வியாதி. அதை ஏற்க மறுக்கும் அதே நொடியில் அந்த வியாதி குணமடைந்து விடும் -வீர சாவர்க்கர் (1935, *Samagra Savarkar vangmaya,* Vol. 3, p. 497-499)
உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் ஹரிஜன் கணவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் சிறந்தது என்று சொல்ல நான் தயங்குகிறேன். அப்படிச் சொல்வது பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற பொருள் தந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அப்படிபட்ட ஒரு தாழ்வு மனப்பான்மை இன்று இருக்கிறது என்பதை நான் அறிவேன். அந்தக் காரணத்தால், இப்போது ஒரு உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு ஹரிஜனைத் திருமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணம், உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ஆணை ஒரு ஹரிஜனப் பெண் திருமணம் செய்வதைவிடச் சிறந்தது என்பதை நான் ஏற்கிறேன். எனக்கு மட்டும் வழி கிடைத்து இருந்தால், எனது பாதிப்புக்கு உட்படுகிற அனைத்து உயர்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களும், ஹரிஜனக் கணவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். – மகாத்மா காந்தி (Harijan*, 7 July 1946, pp.212f.)
ஹிந்துஸ்தானத்தின் மேல் விழுந்த அன்னிய ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்வதைப் போல, இந்தச் சாதி அமைப்பையும் தீண்டாமையையும் எதிர்த்தும் புரட்சி செய்தேயாக வேண்டும் என்று நான் மனவெழுச்சி கொண்டேன். – வீர சாவர்க்கர் (1920, Letters from the Andamans, Samagra Savarkar vangmaya, Vol. 5, p. 490)
பல்வேறு வழிகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; இதை மறுக்கும் அளவு மடையர்கள் யார் இருக்க முடியும் ?
உதாரணமாக, இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: … சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது… நமது சமூகத்தில், பல நூறு வருடங்களாக ஒரு சாதியின் உட்பிரிவுகளுக்குள் மட்டுமே திருமணம் செய்யப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால், பெற்றோரின் குடும்பத்தோடு அல்லது நெருங்கிய உறவினர்களோடு மட்டுமே திருமணம் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாகவே, இந்த இந்திய சமூகம் உடல் அளவில் சீர்கேடு அடைந்து வருவதோடு, அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ?
… திருமண உறவு வட்டத்தை விரிவாக்குவதன் மூலம் மட்டுமே புத்துணர்வு ஊட்டும் புதிய வேறுபட்ட ரத்தத்தை நம்முடைய சந்ததியாருக்குத் தர முடியும். நம் சந்ததியினரை வரவிருக்கும் தீமைகளில் இருந்து காப்பாற்றவும் முடியும்.” – ஸ்வாமி விவேகானந்தர் (Complete Works of Vivekananda, Volume 5 – pages 334 ~ 341)
சாதி இணக்க மணம் என்பது ஓர் இளைஞனும், ஓர் இளம் பெண்மணியும் ஏதோ ஓர் இடத்தில் திடீர் என்று சந்தித்து, சந்தித்த காரணத்தினாலே இயற்கை உணர்ச்சியால் காதல் தூண்டப்பட்டுக் காதலிலே அவர்கள் ஈடுபட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிற நிலைமை ஏற்பட்டு, மன உறுதி இல்லாமல் ஒருவரை ஒருவர் கைவிட்டுப் போய்விடக் கூடாது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகிப் புரிந்துகொண்டு, வருகிற கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டால், எந்த சாதிப் பெண் எந்த சாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டாலும் வரவேற்கக்கூடியதுதான். – சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
உண்மையான தீர்வு சாதி இணக்கத் திருமணம்தான். ரத்தக் கலப்பு மட்டுமே ரத்த பந்தத்தை உருவாக்கி சுற்றத்தார் உறவினர் என்ற ஒட்டுறவு உணர்வை உருவாக்கும். இந்த உணர்வு முதன்மையானது. அந்த ஒட்டுணர்வு உருவாகும்வரை, இந்தச் சாதி உருவாக்கும் பிரித்துப் பார்க்கும் உணர்வு – வேறுபட்டவர் என்ற உணர்வு மறையாது. – அம்பேத்கர்
ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு எதிராக மிகப்பெரிய தடையாக இருப்பது சாதியே. சாதிக்குப் பதிலாக இந்துத்துவத்தை இந்துக்கள் கடைபிடிக்க வேண்டும். பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், எந்த ஹிந்து சாதியும் தீண்டத்தகாத சாதி கிடையாது என்பதால், அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். – ஆர்.எஸ்.எஸின் சர்சங்க சாலக் மரியாதைக்குரிய மோகன் பாகவத் ஜி

தமிழ்ஹிந்துவில் மாதந்தோறும் சாதி இணக்கத் திருமண விளம்பரங்கள் திரட்டப் பட்டு வெளிவருகின்றன. சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் நேரடியாகவும் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். ஆசிரியர் குழுவைத் தொடர்புகொள்ளவும்.
.