• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சுனாமி 10வது ஆண்டு நினைவு தினம்: மெழுகுவர்&#29

Status
Not open for further replies.
சுனாமி 10வது ஆண்டு நினைவு தினம்: மெழுகுவர்&#29


சுனாமி 10வது ஆண்டு நினைவு தினம்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Untitled%203%28424%29.jpg


சென்னை:
சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கோர சம்பவத்தை நினைவு கூறும் வகையில் கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, சுனாமி ஆழிப்பேரலை, இந்தோனேஷியாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேறபட்டவர்கள், இலங்கையில் 35 ஆயிரம் பேர், அந்தமானில் 10 ஆயிரம் பேர் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டது.

தெற்காசியாவையே உலுக்கிய இந்த சுனாமி, தமிழகத்தையும் விட்டு வைக்காமல் கடற்கரை மாவட்டங்களான நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், காரைக்கால் பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் மனித உயிர்களை பலி கொண்டது.


இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (26 ஆம் தேதி) 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவம், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் அது ஆறாத வடுவாகவே உள்ளது.

இந்த கோர சம்பவத்தை நினவு கூறும்வகையில், இந்தநாளில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன்படி, சென்னை மெரினா, காசிமேடு, பட்டினப்பாக்கம், திருவான்மியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.


சென்னை மெரினா கடற்கரையில் பா.ஜ.க. மீனவரணி சார்பில் சுனாமி அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார். இது தவிர பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைதி பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன. நாகை கடற்கரையில் மணல் சிற்பங்கள் அமைத்து பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.


Please also read from here


Memorial services are being held in Indonesia and other nations for the victims of the Indian Ocean tsunami on the 10th anniversary of the disaster.


In Indonesia's province of Aceh - the worst hit area - Vice-President Jusuf Kalla led tributes to the dead at the Siron mass grave.


Memorial ceremonies will also take place in Thailand and Sri Lanka.

More than 200,000 people died when an underwater earthquake set off massive waves on 26 December 2004.







BBC News - Indian Ocean tsunami anniversary: Memorial events held




?????? 10??? ????? ?????? ?????: ????????????? ????? ??????!
 
கடலன்னையே வணங்குகிறோம்...:

கடலன்னையே வணங்குகிறோம்...:





கடல் தாயே நீ பொங்கினால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து உள்ளோம்.பத்து வருடங்களுக்கு முன்னால் சுனாமி என்ற பெயருடன் நீ பொங்கி எழுந்தபோது ஏற்பட்ட வலியை இன்னமும் மறக்கமுடியவில்லை ஆகவே இனியொருமுறை அந்த வலியை தாங்கும் சக்தி எங்களுக்கில்லை என்று சொல்லி சுனாமி நினைவு நாளான இன்று சென்னையில் கடலுக்கு பூ துாவி வணங்குகின்றனர்.


Cartoon photoon Photo's | Cartoon photoon Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top