இவர்களுக்கு வேத மந்திரம் தேவை இல்லை. இவர்களின் ஆச்சாரியர்கள் செய்து வைப்பது போதும்.
எந்த காலத்தில் கொஞ்சம் தர்மம் செய்தாலும் பலன் அதிக மாக கிடைக்கும் எவர் இப்படிபட்ட தர்மத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள். வேத வியாசரிடம் இந்த கேள்வி கேட்டார்கள்.. இதற்கு பதில்;- எந்த புண்ணியத்தை க்ருத யுகத்தில் செய்தால் அது பத்து ஆண்டுகளில் சித்திக்குமோ, அதுவே த்ரேதா யுகத்தில் ஒரு ஆண்டில் சித்திக்கும்.
அதுவே துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் சித்திக்கும். அதுவே கலி யுகத்தில் ஒரே நாளில் பயன் வந்து விடும். கிருத யுகத்தில் யோக நிஷ்டையில் இருந்து த்யானம் செய்வதனாலும் த்ரேதா யுகத்தில் யாகம் செய்வதனாலும், துவாபர யுகத்தில் அர்ச்சிப்பதனாலும் எந்த பயன் உண்டாகுமோ அது கலியுகத்தில் நாராயணனின் நாம ஸங்கீர்த்தனம் செய்வதனாலேயே கிடைத்து விடும்.
கலி யுகத்தில் மனிதன் சிறு சிரமத்தினாலேயே பெரும் அளவு தர்மத்தை அடைகிறான். பிராமணாதிகள் விரதம், அனுஷ்டானம் தவறாமல் இருந்துகொண்டு வேதங்களை ஓத வேண்டும்.தரும வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு யாகங்கள் விதிப்படி செய்ய வேண்டும்.பிராமணாதியர்களுக்கு பகவானை பற்றிய பேச்சுகளை தவிற வீண் பேச்சு பேச கூடாது.
பகவானுக்கு சமர்பிக்க்காத அன்னாதிகளை புசிக்க கூடாது. லாபத்திற்கும், டம்பத்திற்கும் யாகம் செய்ய க்கூடாது. மனம், வாக்கு, காயம் ஆகியவைகளை கட்டுபடுத்தி கொண்டிருக்க வேண்டும். இரு பிறப்பாளருக்கு எதையும் விதிப்படி செய்யாமற் போனால் குற்றம். போஜனாதிகள் கூட இஷ்டப்படி செய்து சாப்பிட முடியாது. யாதும் பிராமணர்களுக்கு பராதீனமானவை. ஆகையால் மிகவும் வருந்தி தாங்கள் அடைய வேண்டிய உலகங்களை ஜயிக்க வேண்டும்.
ஆனால் சூத்திரனுக்கு வேத அத்யயனம், யாக யஞ்யம், இது உண்ணதக்கது; இது உண்ணதகாதது, இது குடிக்க தகாதது, இது குடிக்க தகுந்தது என்று நியமம் எதுவும் கிடையாது . பிராமணாதியருக்கு பணிவிடை செய்வதனாலேயே சூத்திரன் பாக யக்ஞாதிகார முடைய வனாய் உத்தம உலகங்களை அடைந்து விட முடிகிறது.
ஆடவர்கள் தம்தமக்கு உரிய தர்மத்தினால் பணம் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பொருளை நல்லவர்களுக்கு, நல்லவைகளுக்கு நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும். இவ்விதமான பல வகை கிலேசங்களினால் ஆடவர்கள் ப்ராஜாபத்யம் முதலிய உலகங்களை வெல்கிறார்கள்.
பெண்களோ மனோ வாக்கு காயங்களினாலே தம் கணவருக்கு அனுகூல மாக இருந்து கொண்டு சிசுருஷைகளை செய்து வந்தாலே கணவன் அடையும் உலகங்களை எளிதில் அடைந்து விடுகிறார்கள். மிகவும் துஷ்டனான கலி புருஷனுக்கு இத்தகைய பெருங்குணம் உள்ளது.
காற்று, நீர், நெருப்பு, பூமி, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களினால் இந்த உலகம் சிருஷ்டிக்கபட்டது. ஒவ்வொன்றிலும் சதவீதம் தான் மாறுகிறது. இதனால் சிறிது எதிர்மறை சக்தியும் உண்டாகிறது. இந்த நெகட்டிவ் சக்தியை எடுக்கவே பெரிய கம்பெணிகளில் டிபார்ட்மென்ட் பல உள்ளது போல், இந்த உலகிற்கும் ப்ராஹ்மணர் என்ற டிபார்ட்மெண்ட் மாத்திரம், வேத மந்திரங்கள் ஓதி, யாக யக்ஞ்யம் செய்து இந்த நெகட்டிவ் சக்தியை அழிக்க வேண்டும் என அந்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் காற்று, நெருப்பு, நீர், விபத்துக்கள், தீவிர வாதம் முதலியன குறையும்.