P.J.
0
சென்னையை சேர்ந்த தமிழ் பெண் நியூயார்க் ந
சென்னையை சேர்ந்த தமிழ் பெண் நியூயார்க் நகர நீதிபதியாக பதவி ஏற்றார்
ஏப்ரல் 28,2015,
நியூயார்க்,
அமெரிக்காவில், நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்ப் பெண்ணான ராஜ ராஜேஸ்வரியை (வயது 43) நியமித்தார். நியூயார்க்கில் கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக இந்தியப்பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த ராஜ ராஜேஸ்வரி சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் தனது 16 வயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். அங்கு புரூக்ளின் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். இவர் பயிற்சி பெற்ற பரதநாட்டியம், குச்சுப்பிடி நடனக்கலைஞரும் ஆவார்.தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாக பேசுகிற ஆற்றல் வாய்ந்தவர் ஆவார்.
நியூயார்க் நகரில் இன்றுநடந்த நிகழ்ச்சியில் ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். அவருடன் குடும்ப கோர்ட்டு, கிரிமினல் கோர்ட்டு, சிவில் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட வேறு 27 பேரும் பதவி ஏற்றனர். அனைவருக்கும் மேயர் பில் டி பிளேசியோ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறித்து ராஜ ராஜேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், ’இது ஒரு கனவு போல இருக்கிறது. இது எனது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நான் இதற்காக கடமைப்பட்டுள்ளேன். இது எனது அமெரிக்க கனவு மட்டுமல்ல, இது சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான் என்று தொலைதூரத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் காட்டக்கூடியது என்று மேயரிடம் கூறினேன்’ என்றார். நீதி அமைப்பினை மேம்படுத்துவதற்கு எனது பதவியை பயன்படுத்துவேன் எனவும் அவர் கூறினார்.
???????? ??????? ????? ???? ?????????? ??? ?????????? ???? ???????||Raja-Rajeswari-becomes-New-Yorks-first-Indianborn