P.J.
0
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளை அதிகரி&
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளை அதிகரிக்க அதிரடி கட்டண சலுகை!
சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை, கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் தற்போது சேவை நடைபெற்று வருகிறது. சேவை தொடங்கியவுடன் இந்த குளுகுளு சொகுசு ரயிலில் ஏறி பயணம் செய்ய சென்னை மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் ஒரு சில நாட்கள் மெட்ரோ ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்னர், மெட்ரோ ரயில் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருப்பதாக கருதியதால், படிப்படியாக மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது.
ஆலந்தூர் – கோயம்பேடு இடையே ஒருமுறை செல்ல ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 20 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வகையில் இந்த கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி ஒட்டு மொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டண சலுகையை பெற முடியும். குறிப்பிட்ட 2 நிறுத்தங்களுக்கு இடையே தினமும் பயணம் செய்வோருக்கு சலுகை அளிக்கப்படுகிறது.
12 முறை, 50 முறை, 100 முறை என 3 விதமான சலுகைகள் கொண்ட கட்டண அட்டைகள் வழங்கப்பட உள்ளன. 12 முறை பயண அட்டை 7 நாட்களுக்கும், 50 முறை பயண அட்டை 30 நாட்களுக்கும், 100 முறை பயண அட்டை 60 நாட்களுக்கும் செல்லுபடியாகும். இந்த பயண சலுகை அட்டையை பெற திரும்ப பெறத்தக்க முன்பணம் ரூ.50 செலுத்த வேண்டும். பயண அட்டையை திருப்பி கொடுத்தால், எஞ்சியுள்ள பயண முறைகளுக்கான கட்டணத்தையும், முன் பணத்தையும் பயணிகளிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் திருப்பி கொடுக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளை அதிகரிக்க அதிரடி கட்டண சலுகை!
(31/08/2015)
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 20 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை, கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் தற்போது சேவை நடைபெற்று வருகிறது. சேவை தொடங்கியவுடன் இந்த குளுகுளு சொகுசு ரயிலில் ஏறி பயணம் செய்ய சென்னை மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் ஒரு சில நாட்கள் மெட்ரோ ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்னர், மெட்ரோ ரயில் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருப்பதாக கருதியதால், படிப்படியாக மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது.