• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சேர்த்தி சேவை !

பங்குனி உத்திரம் வர்றது. ரொம்ப விசேஷமான நாள். நம்மளோட ஸம்ப்ரதாயத்துக்கே விசேஷமான நாள். எல்லா திவ்ய தேச எம்பெருமான்களும் கோலாகலமா தன்னோட பட்டமஹிஷிகளுடன் ஒரே கேடயத்துல ஏள்ளியிருந்து ஒசத்தியான ஸேவை சாதிக்கற அழகான ஒரு உத்ஸவம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ரங்கநாதன் மஹாராஜா. ரங்கநாயகி மஹாராணி. ஸ்ரீரங்கம் சாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டம். பூலோகத்துல இருக்க ஸ்ரீவைகுண்டம். பங்குனி உத்தரத்தன்னிக்கு ரங்கநாயகி ஸந்நிதி முன்னாலே இருக்க மண்டபத்துலே அரையர் சேவை ரொம்ப ஒசத்தியா இருக்கும். பிரளய கலக சேவை. ஏன்னா ஜெகன் மாதாவாம் ரங்கநாயகியும் ஜகத் ரக்ஷகனாம் ரங்கநாதனும் சண்டை போட்டுக்கறாளாம். இந்த பிரபஞ்சம் என்ன கதியாகுமோ அப்டிங்கறதுனால பிரளய கலக ஸேவை. ரங்கநாதன் ஆசையாசையா உள்ளே வர முயற்சி பண்றதும், தாயார் கதவை அறைந்து சாத்தறதுமா சேவிக்கற நம்மளோட கண்ணுலேர்ந்து வழியற ஜலம் நிக்கவே நிக்காது.

இதுல ஒரு விசேஷமான அனுபவம் ரங்கநாதன் உறையூர் நாச்சியாரோட சேர்த்தி ஆனப்புறம் ஸ்ரீரங்கம் திரும்பி ஏள்ளுவார். வர்ற வழியிலே காவேரிக் கரையில் ஸ்ரமபரிகாரம் (rest) பண்ணிக்கலாம்னு பாத்தா, தன்னோட மோதிரம் காணலைன்னு ரங்கநாதன் ஒரு மாய்மாலம் பண்ணுவார். சேர்த்தியின் போது இவர் தான் உறையூர் நாச்சியாரண்ட கொடுத்திருப்பார். ஸ்ரீரங்கம் திரும்பி ஏள்ளின உடனே மோதிரம் எங்கேன்னு ரங்கநாயகி கேப்பாளே? கூட வந்தவாள்ளாம் காவேரி ஜலத்துல ஜல்லடையால மோதிரத்தை தேடற உத்சவம் பெருமாள் கண்டருள்வார். எவ்ளோ ஒசத்தியான ஆத்மார்த்தமான அனுபவம். கண்ணுல ஜலம் வந்துடும்.

இந்தப் பிரபஞ்சமே அவனோடது. எல்லாத்தயும் படைச்சதே அவன் தான். தூணிலேயும் துரும்பிலேயும் நிறைஞ்சு நிக்கறவன் அவன். ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளேயும் அந்தராத்மாவா சதா இருக்கவன். அவனுக்கா ஒரு மோதிரம் பெருசு? அது எங்கேன்னு அவனுக்குத் தெரியாதா? அவன் தேடணுமா என்ன? தேடினாதான் கிடைக்குமா? இதெல்லாமே நம்மளோட கர்மாக்களைக் கழிக்கறதுக்காக நம்முளுக்காக ஏற்படுத்தப்பட்ட ப்ரஹரணங்கள் (situations). ஸ்ரீரங்கம் போய் ஒவ்வொரு பிரஹரணத்தையும் மன்ஸூணி சேவிக்க முடியாதவாள்ளாம் கூட, பெருமாளுக்கு இப்போ இது நடந்துண்டிருக்கும். பெருமாளுக்கு இப்போ அது நடந்துண்டிருக்கும்னு மனசார அவரை சேவிச்சிண்டே இருக்கறதுக்காக ஏற்பட்ட ப்ரஹரணங்கள் இதெல்லாம். அப்படி மனசார அனுபவிக்கறப்போ உண்டாற சுகர்மா நம்மளோட ஆத்மாவை பலப்படுத்தறது. ஆத்மனுக்கு பலம் ஏற்படறப்போ ஜென்மா சாபல்யம் அடையறது.

முக்கியமா பங்குனி உத்தரத்தன்னிக்கு நாமோ ஸ்மரிக்க வேண்டிய வாழித் திருநாமங்கள் ரெண்டு இருக்கு. ரங்கநாதனோடதும் ரங்கநாயகியோடதும். எளிய தமிழ்ல தான் இருக்கு. மனப்பாடம் பண்ணிண்டு நித்யம் பெருமாளுக்கு பண்றப்போ அவா திருவடிகள்ல சேவிச்சோம்னா நல்லபடியா இந்த சம்சார சாகரத்துல நீந்திக் கரை சேரலாம்.

ஸ்ரீ ரங்கநாதன் வாழித் திருநாமம்

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத்து ஆய் மகளார் சேவிப்போன் வாழியே
இரு விசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே
இடர் கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

ஸ்ரீ ரங்கநாயகி வாழித் திருநாமம்

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திர நாள் பார் உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியே
மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
ஸ்ரீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

எப்போவுமே சொல்றா போலே பக்திங்கறதே பாவம் (bhaa) தான். மனசார நாமோ பண்ற பக்திக்கு அவன் கட்டுப்படறான். அதுக்கு தான் அவன் ஆசைப்படறான். அவனை பத்தி நாமோ நெனைக்கறப்போ கண்ணுலேர்ந்து வழியற அந்த ஒரு சொட்டு ஜலம் இருக்கே. அத மட்டும் தான் அவன் நம்மள்ட்டேர்ந்து எதிர்பாக்கறான். அது மட்டும் தான் அவனுக்கும் நமக்குமான பாஷை. வேறொண்ணுத்தையும் அவன் நம்மள்ட்டேர்ந்து எதிர்பாக்கறதில்லை.

சபரி மோக்ஷத்தும் போது அது தானே நடந்தது. நாமெல்லாம் எச்சில் அப்படின்னு நெனைக்கற விஷயத்தில் அந்தப் பரமன் ஒசந்த பக்தியைப் பார்த்தானே. தன்னையே கேள்வி கேட்ட உத்தவரண்ட அந்தக் கிருஷ்ண பரமாத்மா ஒசந்த பக்தியைப் பார்த்தானே. ந்ருஸிம்ஹன் ப்ரஹ்லாதனுண்ட பார்த்தானே. அசைக்க முடியாத அந்த த்ருடம், வலிகளை பொருட்படுத்தாத அசைக்க முடியாத நம்பிக்கை, ஆத்மார்த்தமான பக்தி இதுக்கு தானே அந்த ந்ருஸிம்ஹன் எல்லா வஸ்துக்குள்ளேயும் நிறைஞ்சு நின்னான். விசித்திரமான ரூபத்துல வந்தான். தன்னோட ப்ரிய மகிஷியை விட்டுட்டு ஓடி வந்தான். தன்னோட வாஹனமாம் கருடாழ்வாருக்காக கூட காத்துண்டிருக்காம அவசர கதியிலே ஓடி வந்தான். பக்திப்ரியன் அவன். பக்தானுகூலன்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் நாராயணா... உன் தாள் கண்டு கொண்டு சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி...
 

Latest ads

Back
Top