P.J.
0
ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மை
ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறப்பு!
சென்னை: வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மொத்தம் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4 கோடியே 74 லட்சம் பேருக்கு மட்டுமே ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 28 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் விடுபட்ட 1 கோடியே 72 லட்சம் பேர்களின் ஆதார் விவரங்களை பதிவு செய்வதற்காக, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 521 ஆதார் நிரந்தர மையங்கள் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் மட்டும் 72 மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிரந்தர முகாம்கள் வரும் அக்டோபர் வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 47 லட்சம் பேர்களின் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 5 கோடியே 1 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் பல்வேறு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் ஆதார் விவரங்களை பதிவு செய்ய கூடுவதால் அவர்களைச் சமாளிக்க சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குறைகளைத் தீர்க்க செய்ய ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 118 ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட உள்ளன. எந்த இடத்தில் ஆதார் மையங்களை திறப்பது என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள். சென்னையில் மட்டும் கூடுதலாக 18 மையங்கள் திறக்கப்பட உள்ளன.
http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1