P.J.
0
தனி ஆளாக சென்றால் 'ரூம்' கிடைக்காது:
தனி ஆளாக சென்றால் 'ரூம்' கிடைக்காது:
தனி ஆளாக, வெறும் கையை வீசிக் கொண்டு போய் நின்றால், ஓட்டல்களில், 'ரூம்' கிடைக்காது. பல சிக்கல்கள் வருவதால், தமிழகம் முழுவதும் கடுமையான கிடுக்கிப்பிடி விதிமுறைகளை, ஓட்டல் நிர்வாகங்கள் அமல்படுத்தி உள்ளன.
தமிழக சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் ஓட்டல் நிர்வாகங்கள் விழிப்படைந்துள்ளன. ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியவர் தற்கொலை; ஓட்டலில் கொலை போன்ற நிகழ்வுகளே, இதற்கு காரணம்.போலீஸ் விசாரணை, ஓட்டல்களை தொடர்ந்து நடத்த முடியாதது போன்ற சிக்கல்கள் எழுவதால், ஓட்டல் நிர்வாகங்கள் விழிப்படைந்துள்ளன. தனி ஆளாக சென்றால், ஓட்டல்களில், 'ரூம்' கிடைக்காது என்றளவில், பல, 'கிடுக்கிப்பிடி' விதி
முறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:
சிலர் தவறான நோக்கம், சட்டத்திற்கு புறம்பான செயல்கள் செய்யும் நோக்கில், தனி ஆளாக வந்து தங்குகின்றனர். ஏதேனும், எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தால், வழக்குகளை சந்திக்க வேண்டும் என்பதோடு, ஓட்டல்களை இழுத்து மூடும் நிலை வந்து விடுகிறது. இதை தடுக்கவே, ஓட்டல்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல்களில் இன்னும் கூடுதல் விவரங்கள் கேட்கப்படுகின்றன. நாங்கள் திருப்தி அடையாத பட்சத்தில், அறைகளை ஒதுக்குவதில்லை. அறைகள் காலியாக இருந்தாலும், 'தர முடியாது' என, வெளிப்படையாக கூறியோ; நச்சரிப்பு அதிகமானால், 'ரூம் காலியில்லை' எனக்கூறி அனுப்புகிறோம்; வேறு வழியில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:
வர்த்தக ரீதியாக, தொழில் ரீதியாகவோ வந்தால் பிரச்னை இல்லை. ஏதோ பிரச்னையில் இங்கு வந்து தற்கொலை செய்து கொள்வது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாலும், பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.இதைத்தடுக்க, இந்த விதிமுறைகள் பின்பற்றுவது அவசியம். சென்னை ஓட்டல்களிலும் இது நடைமுறையில் உள்ளது. அதற்காக, தனி ஆளாக வந்தால், ரூம் தரமாட்டோம் என்றில்லை; தங்குவதற்கான சரியான ஆவணங்கள் அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில்,
'கன்னியாகுமரியில், கடந்த ஆண்டில், 22 பேர்; இந்த ஆண்டில், இதுவரை, 11 பேர் ஓட்டல் அறைகளில் தற்கொலை செய்துள்ளனர். எனவே, தொடர் நிகழ்வுகள் காரணமாக, ஓட்டல்களில் அறை ஒதுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. தனி ஆட்கள் என்றால், கூடுதல் விசாரணை நடத்தி, நம்பிக்கை வந்தால் மட்டுமே அறை தருகிறோம்' என்றனர்.
அப்படி என்ன விதிமுறைகள்?
* தனி ஆளாக வெறும் கையை வீசிக் கொண்டு, உடைமைகள் ஏதுமின்றி சென்றால், 'ரூம்' கிடைக்காது. தன்னைப்பற்றிய முழு விவரம், அறையில் தங்குவதற்கான சரியான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
* விழாவுக்காக வந்தால், அதற்கான அழைப்பிதழ்; பிற நிகழ்ச்சிகள் என்றாலும், அதற்கான அழைப்பிதழ் போன்ற விவரங்கள் தர வேண்டும்.
* உள்ளூர் நபர்கள், அறைகள் கோரினாலும் தருவதில்லை; காரணம், அங்கு தங்க வேண்டிய அவசியம் இல்லை; அதில், உள்நோக்கம் இல்லை எனவும், தங்குவதன் அவசியத்தையும் தெளிவுபடுத்த வேண்டும்.
* இரண்டு பேர் என்றாலும், இருவரின் அடையாள அட்டை முக்கியம்; தங்குவதன் அவசியத்தை தெரிவிக்க வேண்டும்.
* குடும்பமாக வந்தால், யாரேனும் ஒருவரின் அடையாள அட்டை காண்பித்தால் போதும்.
* ஏற்கனவே தங்கிய நபர், அறிமுகமான நபர் என்றால், எந்த சிக்கலும் இல்லை. புதியவர் என்றால், அப்பகுதியில் தெரிந்த ஒருவர், அறிமுகம் செய்வது வைப்பது அவசியம்.
- நமது நிருபர் -
http://www.dinamalar.com/news_detail.asp?id=1280228