P.J.
0
தனி நபராக 300 மரங்களை வளர்க்கும் ஆர்வலர்:

திருவொற்றியூரை பசுமையாக்க, 'என்னை வளர விடுங்கள்' என, மரங்கள் கூறுவது போல, பலகைகளில் எழுதி வைத்து, மரங்களை நட்டு வருகிறார் ஒருவர்.திருவொற்றியூரை சேர்ந்தவர் குருசாமி, 'ஓம் நமசிவாய' அறக்கட்டளை நிறுவி, இதுவரை 300க்கும் மேற்பட்ட மரங்களை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
திருவொற்றியூரில் சாலை விரிவாக்க பணிக்காக அதிக மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் பசுமையாக இருந்த திருவொற்றியூர் சுற்றுவட்டாரம் காய்ந்து வருகிறது. இதற்காகவே கடந்த மூன்றாண்டுகளாக, மரங்களை நட்டு வருகிறேன். யாராவது கேட்டால் மரக்கன்றுகளையும் இலவசமாக தருகிறேன். திருவொற்றியூர் மேற்குமாடவீதியில், 51 மரங்கள், திருவொற்றியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், 24, ஜெயகோபால் பள்ளி வளாகத்தில், 10, ஆரம்பாக்கத்தில், 40 மரங்கள் என, 300க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறேன். டி.எச்.,சாலையில் 20 மரங்களை நட, தயாராக இருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. மேற்குமாட வீதியில் அரசியல் கட்சியினர், அவர்களது தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து விளம்பரத்தட்டி வைக்க, நன்கு வளர்ந்த மரத்தை வெட்டி விட்டனர். கேள்வி கேட்க ஆளில்லாமல் பல மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அதனாலேயே, 'என்னை வளர விடுங்கள்' என, மரங்கள் கேட்பது போன்று, மரத்தின் அருகே அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
Source:| ??? ????? 300 ??????? ?????????? ???????: ???????????????? ??????? ?????????????? ??????? | Dinamalar