JR
Hare Krishna
திருமலை அனந்தாழ்வானின் கடப்பாரை
இந்த நாளை திருமலை அனந்தாழ்வானின் கடப்பாறைக்கு சமர்ப்பிப்போம்...
... திருமலை அனந்தாழ்வான், ஸ்வாமி இராமானுஜரின் ஆசைப்படி, திருமலை திருப்பதியில் பகவான் மலையப்பனுக்கு மாலை கட்டும் கைங்கர்யம் செய்ய மனைவியோடு சென்றார்....
அப்போது அவரின் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தும் கூட அனந்தாழ்வானோடு ஏரி வெட்டும் கைங்கர்யத்தில், மண்ணை கூடையில் எடுத்துச் சென்று வேறிடத்தில் கொட்டும் பணியைச் செய்துவந்தார்...
அப்போது பகவான் பாலாஜீ தானே ஒரு சிறுவனாக அவருக்கு உதவ வந்தார். ஆனால் அனந்தாழ்வான் மறுத்துவிட்டதால், அவருக்குத் தெரியாமல், அவர் மனைவியிடமிருந்து மண் கூடையை பாதி வழியில் வாங்கி அவருக்கு உதவி செய்தார்....
அதை அறிந்த அனந்தாழ்வான் மனைவியின் பின்னால் ஒளிந்திருந்து, சிறுவனைப் பிடிக்க, அவன் இவரிடமிருந்து தப்பித்து ஓடினான். விடாமல் துரத்திய அனந்தாழ்வான் கடுங்கோபத்தில், அச்சிறுவன் மீது கடப்பாரையை வீச, அது அவன் தாடையில் பட்டு ரத்தம் வழிந்தது...
அச்சிறுவன் சன்னிதியில் ஓடி மறைந்தான். அப்போது மலையப்பனின் தாடையில் ரத்தம் வழிய, பக்தர்கள் பதறினார்கள். உடனே அனந்தாழ்வான் தன் கையினால் பகவானின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை மருந்தாக இட்டார்...
அன்றிலிருந்து திருமலை நாதனுக்கு தாடையில் பச்சைக்கற்பூரம் இடும் வழக்கம் உண்டாயிற்று...
இன்றும் திருமலை கோயிலின் ராஜகோபுர வாசலில் அநந்தாழ்வானின் இந்தக் கடப்பாரைத் தொங்கவிடப்பட்டுள்ளது...
பக்தனின் கையிலிருந்து கிளம்பி, பகவான் மலையப்பனை அழுத்தமாக முத்தமிட்ட பவித்திரமான கடப்பாரை பாகவதரே...
அடியேனும், திருமலையில் ஏதேனும் ஒரு மூலையில் பக்தி செய்துகொண்டிருக்க அருள் செய்யுங்கள்...
The above info is from Facebook.
To know more about Ananthazhwan, visit acharya.org/d.html | Anandazhvan