திவ்ய பிரபந்தம் நாலாயிரமும் எதைக் கூற வர
திவ்ய பிரபந்தம் நாலாயிரமும் எதைக் கூற வருகின்றன?
முதலாயிரத்தில் அமைந்த திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, குலசேகர் பாடிய பெருமாள் திருமொழி, தொண்டரடிப்பொடிகள் பாடிய திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமழிசைப்பிரான் பாடிய திருச்சந்த விருத்தம், திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் ஆகியவை யாவும் ஓம் என்கிற பிரணவத்தின் அர்த்தமாகப் பாடப்பட்டவை. அதே ஆயிரத்தில் மதுரகவிகள் பாடிய ‘கண்ணினுண் சிறுத்தாம்பு’ என்பது ‘நமஹ’ என்பதன் பொருளை விளங்கச் செய்வதாகும்.
இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கை மன்னன் பாடிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை ‘நாராயணாய’ என் பதன் பொருளை விளங்கச் செய்கிறது. மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா முழுவதுமே சரம ஸ்லோகத்தை விவரிக்கிறது. இதை தீர்க்க சரணாகதி என்பார்கள், பெரியோர். நாலாவது ஆயிரத்தில் த்வயத்தையும், அர்த்த பஞ்சகத்தையும் விவரித்து அந்தாதியாக பாடியுள்ளார் ஸ்வாமி நம்மாழ்வார். ஆழ்வார்களின் பாடல்கள் மறைந்தபோதிலும், நம்மாழ்வார் ஒருவரே தீர்க்க தரிசனத்தால், இன்ன இன்ன பாடல்கள், இந்த இந்த ஆழ்வாரால் பாடப்பட்டது என்று கூறி நாலாயிரத்தையும் அர்ச்சாவதார ரூபியாகவே நாதமுனிகளுக்கு சொன்னார். இப்போது பிரபந்தங்களைப் படிக்கவும், பாடவும், எண்ணி எண்ணி மகிழவும் கிடைத்திருக்கிற தென்றால், அதற்கு நம்மாழ்வாரின் கருணைதான் காரணம்.
ஸ்வாமி நம்மாழ்வார் இவ்வாறு பிரபந்தங்களை நாதமுனிகளுக்கு அருளியதை மகான் எம்பார் நயமாக வர்ணிக்கிறார்: ‘நம்மாழ்வார் என்ற காளமேகம், லட்சுமிநாதனெனும் கடலிலே புகுந்து கருணையாகிற நன்னீரை முகந்து மேலெழுந்து, கருமேகமாகி, கர்ப்பவதிபோல் மெல்ல நகர்ந்து நாதமுனி என்ற மலை உச்சியில் நாலாயிரத்தையும் மழையாகப் பொழிந்தது. அந்த மழை, உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி என்ற அருவிகள் மூலமாக ஆளவந்தார் (யாமுநாச்சியர்) என்ற பெரிய ஆற்றையடைந்து, வீரநாராயணபுரத்தில் (வீராணம்), எம்பெருமானாராகிய (சுவாமி ராமானுஜன்) ஏரியில் வந்து தேங்கி நிறைந்து நின்றது.
அந்த ஏரியிலிருந்து புனித நீர் ராமானுஜரின் 74 சிஷ்யர்கள் (74 சிம்மாசன அதிபதிகள்) வழியாக மக்களுக்குள் எப்போதும் பாய்ந்து கொண்டேயிருக்கிறது.’’
‘வேதத்தின் உட்பொருளையெல்லாம் தம் நெஞ்சில் எம்பெருமான் நிலை நிறுத்தினான்’ (‘மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி என் னெஞ்சுள் நிறுத்தினான்’) என்று மிக குதூகலத்துடன் கூறுகிறார். இப்படி வேதங்களிலுள்ள அரிய பெரிய கருத்துகளை யாவரும் அறியும் வண்ணம் இனிய எளிய தமிழ்ப் பாக்களால் பாடினார்.
இதை அனைவரும் கற்றுணர்ந்து ஊரும், நாடும், உலகமும் தன்னைப் போலவே பகவானுடைய திரு நாமங்களையும் தார்கள் என்கிற குணநலன்களையும் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்பினார்.
இப்படிப் பல பெரு மைகளோடு விளங்கும் ஆழ்வாரைக் காண, ‘விண்ணாட்டவர் மூதுவர்’ என்னும்படியான நித்ய சூரிகளும், மஹரிஷிகளும், தேவர்களும், குறுகூருக்கு வர, ஆழ்வார் அக்குழாத்துக்கும் சேர்த்து ‘பொலிக பொலிக பொலிக’ என்று பல்லாண்டு பாடி காப்பிட்டு மகிழ்ந்தார்.
‘பொலிக...’ என்கிற பாசுர த்தின் மூலம் உலகைத் திருத்தி பகவான் திருவடியில் சேர்த்து வைக்கும்படியான ராமானுஜர் வரப் போகிறார் என்று பல இடங்களில் குறிப்பால் உணர்த்தினார்.
‘அருளாழி வரிவண்டே’ என்று, ராமானுஜரை வண்டாக விளித்தே பாசுரத்தை அருளினார். இவரை ப்ரபன்ன ஜன கூடஸ்தர் என்றழைப்பர்.
பகவானை ஏழைப் பங்காளன் என்பதுபோல், அவனிடம் பக்தி செய்து உயர்ந்த சரணாகதியின் மூலம் அவனை அடைவதே ப்ரபத்தி மார்க்கமாகும்.
அப்படி உயர்ந்த பக்தியான சரணாகதி செய்த வர்களை ‘ப்ரபன்ன ஜனங்கள்’ என்றழைப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் தலைவனாக ஸ்வாமி நம்மாழ்வார் திகழ்வதால் அவரை ‘ப்ரபன்ன ஜன கூடஸ்தர்’ என்பார்கள்.
இப்போது திவ்ய தேச கோயில்களில் தெய்வத் திருமேனியை நாம் தரிசித்து பூஜித்து பக்தி செலுத்துகிறோமே, அந்த அர்ச்சராதி மார்க்கத்தை முதன்முதலாக உருவாக்கியவர் நம்மாழ்வார் என்றறியும்போது வியப்பால் விழிகள் விரிகின்றன.
‘சூழ்விசும் பணி முகில் தூரியம் முழக்கின்’ முதலான பத்துப் பாடல்களில் அந்த மார்க்கத்தை அவர் விவரித்திருக்கிறார். வடமொழியிலுள்ள வேதத்தில் எப்படி அர்ச்சராதி மார்க்கம் விவரிக்கப்பட்டிருக்கிறதோ, அப்படியே இவரும் வெளியிட்டிருக்கிறார்.
தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதில் ‘அந்தமில் பேரின்பத்து அடியரோடிருக்கும்படி’, அவாவற்று வீடு பேறு பெற்றார்