தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்Ī
[h=1]தேர்தல் அறிக்கையை நம்பி இருக்கும் திமுக: ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க திட்டமா..?[/h]
By dn, சென்னை
First Published : 12 March 2016 01:51 PM IST
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், மகளிரணி சார்பில் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் குறித்தும், மக்களிடம் பிரதானப்படுத்தி பேச வேண்டிய திட்டங்கள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கூட்டணி கைகொடுக்காத நிலையில் தேர்தல் அறிக்கையை நம்பி இருக்கும் திமுக இலவச ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ரேஷன்கார்டுதாரர்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கும் வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக யூகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.