P.J.
0
நடிகர் சிவக்குமார் அட்வைஸ்
நடிகர் சிவக்குமார் அட்வைஸ்
நாலரை மணிக்கு விழிப்பு. ஒன்றரை மணி நேரம் வாக்கிங். வாக்கிங் இல்லாத நாட்களில், வீட்டிலேயே எட்டு வகையான யோகா. ராத்திரி ஒன்பது மணிக்குக் கட்டாயம் தூங்கப் போய்விடுவேன்.
பேரக் குழந்தைகள்தான் சுறுசுறுப்புக்குக் காரணம். காலை 7.20 பெசன்ட் நகர் சூர்யா வீட்டுக்குப் போய், பேத்தியை பிக்கப் பண்ணி, ஸ்கூல்ல கொண்டுவிடுவேன். திரும்பி வந்து 8.45க்குப் பேரனைக் கொண்டுபோய் ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன். தனிமை, மனஅழுத்தம்னு சொல்றவங்க, குழந்தைகளோட நேரம் செலவழிச்சா, சந்தோஷம் தானா வந்துடும்.
நிறைய சிறுதானியங்கள் சாப்பிடுறேன். காலையில் சிறுதானியக் கஞ்சி, ஆவியில் வேகவைச்ச ஏதாவது ஒரு டிஃபன். லஞ்சுக்கு மூன்று சப்பாத்தி, நிறையக் காய்கறி, வரகு அரிசி சாதம் ஒரு கரண்டி. சாயங்காலம் பப்பாளி, மாதுளை, பாதி ஆப்பிள். இரவுக்கு இரண்டு இட்லி, ஒரு தோசை, இடியாப்பம் தேங்காய்ப்பால்னு லைட்டா சாப்பிடுறேன். டீ, காபி குடிக்கிறது இல்லை. நிறையத் தண்ணீர் குடிக்கிறேன்.
மனசை லேசா வைச்சுக்க நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறேன். சொற்பொழிவுக்குத் தயார் பண்றது, எழுதறதுனு என்னை எப்பவும் பிஸியா வைச்சுக்கிறதால சோர்வு பக்கத்திலயே வர்றது இல்லை.
Source: Vikatan EMagazine