நதிமூலம் ரிஷிமூலம்: நதிகள் உருவான வரலாறு
கங்கைக்கு நிகரான புண்ணிய நதியாக கருதப்படும் காவிரியும், வற்றாத ஜீவ நதியாக தென் தமிழகத்தை வளம் பெறச் செய்யும் !#தாமிரபரணியும் தமிழக மக்களின் வாழ்வியலில் கலந்து பாய்ந்தோடுகின்றன.
மக்களின் குடிநீர் தேவையையும், மிக நீண்ட பரப்பளவிலான விவசாய நிலங்களை செழிப்பாக்கும் இந்த இரண்டு நதிகளை மட்டுமல்லாமல் குசஸ்தலை, சுவர்ண கங்கை என்றழைக்கப்படும் பொன்முகலியாறு போன்ற நதிகளையும் உருவாக்கியவர் #அகத்திய_முனிவர் என்று இலக்கியம் மற்றும் #புராணங்கள் கூறுகின்றன.
இந்த சான்றுகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு #கதை கூறப்படுகிறது. ஒவ்வொரு கதைக்கு பின்னும் பல சுவாரஸ்யங்கள் அடங்கி இருக்கின்றன.
#கவேரர் என்ற முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தாராம். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், கவேர முனிவரின் முன் தோன்றி அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினாராம். பிறகு "முன்பு நான் தவம் செய்த போது விஷ்ணு பகவான் அருளால் எனக்கு புத்திரியாக இவள் தோன்றினால்.
#பெண் உருவம், #நதி உருவம் என இரண்டு உருவங்கள் கொண்ட இவளை உனக்கு #வரமாக தருகிறேன்" என்று கூறி மறைந்தாராம். முனிவர் அவளுக்கு #லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
சிவ பக்தையாக வளர்ந்த லோபமுத்திரை, சிவனை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ வேண்டும் வரத்தை கேள்” என்றாராம். தான் நதி உருவமாகி பூமியை #வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். 'கங்கைக்கு #இணையான #புனிதமுடையவளாய்_காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய #அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. உனக்கான காலம் வரும் போது #நதி வடிவம் #எடுப்பாய்' என்று கூறி மறைந்தார். அவர் கூறியபடியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அகத்தியர் லோபமுத்திரையின் நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார்.
ஒரு முறை சையமலை என்று அழைக்கப்பட்ட குடகுமலையில் இருவரும் பல நாட்கள் தங்கி சிவ பூசை செய்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அங்கிருந்த நெல்லி மரத்தடியில் தன் கமண்டலத்தை வைத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் அகத்தியர். அப்போது சிவனின் ஆணைப்படி, லோபமுத்திரை காவேரியாக மாறி நதி வடிவம் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டதால் தேவர்கள் அனைவரும்
#விநாயகரிடம்_முறையிட்டனர்.
விநாயகர் #காகமாக மாறி, கமண்டலத்தை #கவிழ்த்து காவிரியை பெருக்கெடுக்கச் செய்தார். பின் கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். பின் அனைத்தும் இறைவனின் #திருவருள் படியே #நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார். அவர் நடந்த சென்று பாதைகளில்தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன. ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.
அகத்தியர் தந்த #மற்றோர்ஆறுதாமிரபரணி. கங்கையின் #தங்கை என்று போற்றப்படும் இவள் ,அகத்தியரை வேண்டி அவரது கமண்டலத்தில் தவமிருந்தாள். அப்போது பாண்டிய மன்னன் பஞ்சத்தில் வாடிய தன் நாட்டை வளப்படுத்தமாறு அகத்தியரை வேண்டினான். அகத்தியர் தன் கமண்டலத்தை கவிழ்த்து தமிரபரணியை பாண்டிய நாட்டை வளப்படுத்துமாறு கூறினார். அவள் பொதிகை மலையில் உருவாகி, பல மலைகளைக் கடந்து பாபநாசத்தில் அருவியாக மாறி பாண்டிய நாட்டை வளப்படுத்தியபின், வங்கக் கடலில் கலந்தாள். அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த பொதிகை மலையானது, மூலிகைகள் நிரம்பப் பெற்றது. இதன் வழியே தாமிரபரணி உருவாகி பாய்வதால், தாமிரபரணி தண்ணீருக்கு #மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் ஆந்திர - தமிழக எல்லையை ஒட்டி ஓடும் குசஸ்தலை ஆற்றையும் உருவாக்கியவர், அகத்தியர் தான். இந்த நதிக் கரை நெடுக 108 சிவலிங்கங்களை அமைத்து பூஜித்துள்ளார். பெரும்பாலும் மலைகளை வலம் வந்து தியானத்தில் ஈடுபட்டவர் அகத்தியர். ஆகையால் அவர் #மருத்துவத்திலும் சிறந்து விளங்கியவராவார். வியப்பூட்டும் இந்த புராணத் தகவல்களின் மூலம் #ஆன்மிகமும்-இயற்கையும் கலந்த வாழ்வு நம் முன்னோரின் வாழ்வு என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அறிந்து கொண்டால் மட்டுமில்லாது அவர்கள் அமைத்த பாதையை பின்பற்றி நடந்தால் #நல்வாழ்வை #அடையலாம்.
#நன்றி : விகடன்.