நாள் தோறும் நாலாயிரம்
மாட மாளிகை சூழ் மதுரைப்பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மாமத யானை உதைத்தவன்
கூடு மாகில் நீ கூடிடு கூடலே (538)
பொருள்:
மாட மாளிகைகள் சூழ்ந்த வடமதுரையை நாடி வந்து , நம் தெருவின் நடுவே நடந்து , குவலயாபீடம் என்ற யானையை உதைத்து அழித்த கண்ணன் நம்மோடு கூடுவானாகில் , மனமே நீ முரண்படாமல் கூடுவாயாக .
விளக்கம்: நாடி என்ற பதத்தால் , கண்ணனே ஆண்டாளைத் தேடி வடமதுரைக்கு வந்ததாகப் பொருள் கொள்ள
வேண்டும்.
===============
அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும்
மதுரைப் பதி
கொற்றவன் வரில் கூடலே கூடிடு . (539)
பொருள்: எனக்காகவே பிறந்தவன் , மருத மரம் முறியும்படி நடை கற்றவன் , கம்சனை வஞ்சனையாய் அழித்தவன் உள்ள மதுரை நகருக்கு அரசனாகிய கண்ணன் வந்தால் மனமே அவனுக்குக் கட்டுப்படுவாயாக
விளக்கம்: ராமர் ராவணனை வீழ்த்தியது போல் தர்ம யுத்தம் செய்து கம்சனை வெல்ல முடியாது என்று கண்ணன் அறிந்திருந்தான்; எனவே வஞ்சனையால் கொன்றான் . மதுரைக்கு அரசன் உக்கிரசேனனே ; ஆனாலும் அவனுக்குப் பட்டம் தர, கண்ணனே காரணமாக இருந்ததால், கண்ணனை மதுரைக்கு அரசன் என்று ஆண்டாள் கூறுகிறாள் .
=============
அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் , எருதும் , புள்ளும்
வென்று எரி வேல் விறல் கஞ்சனும் , வீழ முன்
கொன்றவன் வரில் கூடலே கூடிடு . (540 )
பொருள்: வெறுக்கக் கூடிய செயல்களையே செய்து வந்த சிசுபாலனையும் , உயர்ந்த இரட்டை மருத மரங்களையும் , எருதாய் வந்த அசுரனனையும் கொக்காய் வந்த பகாசுரனையும், மற்றும் எல்லார் முன்னாலும் கம்சனைக் கொன்ற கண்ணன் வந்தால் அவனுக்குக் கட்டுப்படுவாயாக
==========
பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே (543)
பொருள்: நான்கு வேதங்களின் உட்பொருளாய் இருப்பவன், மத நீர் பெருகும் கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் , என்னைக் கவர்ந்தவன் , கோபியர் மனதில் உள்ளவன், அந்தக் கண்ணன் வந்தால் மனமே நீ கூடிவிடு.
=========
ஊடல் கூடல் , உணர்தல் புணர்தலை ,
நீடு நின்ற புகழ் ஆய்ச்சியர்
கூடலை , குழை கோதை கூறிய ,
பாடல் பத்தும் , வல்லார்க்கு இல்லை பாவமே (544)
பொருள்: ஊடலைக் காட்டக் கூடாதென்ற எச்சரிக்கை, மற்றும் கூடலில் உள்ள ஆர்வம் இந்த இரண்டையும் நெடுநாட்களுக்கு முன்னர் ஆய்ச்சியர் குலப்பெண்கள் நடத்தியதைக் கற்பனையில் கண்டு அழகிய கூந்தலை உடைய கோதை சொன்ன இந்த பத்துப் பாசுரங்கள் பாடுபவர்களின் பாவங்கள் அழியும் .