Padmanabhan Janakiraman
Member
நென்மேலி:
பிண்டம் வைத்த பெருமாள் - ஸ்ராத்த ஸம்ரட்சண பெருமாள்:
எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும், என்று மட்டும் நினைக்கிறார்கள்.
இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்துக் கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின் செய்ய வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதிகள் அமையாது.
செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற திருத்தலம் அமைந்துள்ளது.
இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி சிறு குறிப்பு.
செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது. மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது.
இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்தஸ்ரீ யாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.
மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.
அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.
எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.
இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும்.
ஸ்வாமி இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.
தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .
இந்த தலம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.
பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.
அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நம் இல்லங்களில் முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்தாலும் அந்த திதியில் இந்த சன்னதியில் பணம் அனுப்பி பூஜை செய்ய வேண்டிக் கொள்ளலாம். குறைந்த கட்டணம் தான், எனவே எல்லோரும் பயன் பெற வேண்டும்.
This Post is for sharing knowledge only, no intention to violate any copyrights.