பிரம்மன் தோற்றுவித்த உயிர்களானது தனது பாவபுண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணத்தினை அடைகின்றன. அவ்வாறன்றி எக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோஷம் பற்றுகிறது. இந்த தோஷமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷத்திற்கான பரிகாரம் :
பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்றால் திருவிடைமருதூர் கோவிலில், பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு.
மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் சொல்வது இக்கோவிலின் பரிகார முறையைத்தான். இதைத்தவிர வேறு சில எளிதான பரிகாரமுறைகளும் சொல்லப்படுகிறது.
கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க :
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவகிரகங்களுக்குத் தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அங்குச் செல்ல முடியாதவர்கள் அமாவாசை தினத்தன்று மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்குச் சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றி வந்து வணங்கி வர வேண்டும்.
இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கினால், சிவபெருமான் அருள்பாலித்து பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார்.
எனவே அவரவர் வசதிக்கேற்ப பரிகாரம் செய்து வழிபாடு செய்தால், இந்த பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடலாம். குடும்பத்தில் எல்லோருக்கும் சுபிட்சம் உண்டாகும். வீட்டில் வறுமை குறையும்.