widower is called vithuran. not eligible to sit as brahmanaarththam. divorcee is also not eligible.
· ஸோதகும்ப சிராத்தம் தினமும் வருடம் 365 நாட்களும் செய்ய வேண்டியது.
(நித்யம்) . மாசிகம் மாதத்தில் ஒரு நாள் செய்ய வேண்டியது.. இவை இரண்டும் ஒரே நாளீல் வந்தால் மாசிகம் மாத்திரம் செய்தால் போதும்..
இங்கு ஒன்று செய்தாலே’ ப்ரஸங்காத்’ மற்ற ஒன்றும் செய்ததாக ஆகி விடும் .இது தக்ஷ மஹரிஷியின் வாக்கியம்...ஓரே நாளில் ஒரே கர்த்தா ஒரே பித்ருக்களை உத்தேசித்து இரண்டு சிராத்தங்கள் செய்ய தேவையில்லை.
பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாத பிறப்பும் ஒன்றாக வந்தால் முதலில் மாத பிறப்பு தர்பணம் பிறகு சிராத்தம்.
அமாவாசையும் மஹாளயமும் ஒன்றாக ஸம்பவித்தால் முதலில் அமாவாசை பிறகு மஹாளயம்.
தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மாசிகமும் மற்றொருவருக்கு வருடாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால் முதலில் வருஷ சிராத்தம் செய்துவிட்டு பிறகு தனி சமையல் செய்து மாசிகம் செய்ய வேண்டும்
விபத்தில் பெற்றோர் காலமானால் ஒரே நாளில் இருவருக்கும் சிராத்தம் செய்ய வேண்டும். முதலில் தகப்பனாருக்கு; பிறகு தாயாருக்கு. அன்னம், பாயசம் மட்டும் தனியாக செய்ய வேண்டும் .இங்கு யார் முதலில் இறந்தார்கள் என பார்க்க வேண்டாம்
ஆனால் தீட்டு அல்லது திதி த்வயத்தாலோ ஒரே நாளில்செய்யும்படி நேர்ந்தால் தனி தனி சமையலாக செய்து தந்தைக்கும் பிறகு தாய்க்கும் சிராத்தம் செய்ய வேண்டும்.. கர்த்தாவின் கோத்திர ப்ராஹ்மணர்களை பித்ருக்களாக வரிக்க கூடாது... வேதம் முழுவதும் கற்றவரும் , அனுஷ்டானமுள்ள.வருமான ப்ராஹ்மணர்களை
சிராத்தத்தில் வரித்து போஜனம் செய்விக்க வேண்டும். இதனால் கர்த்தாவின் பித்ருக்களுக்கு 7 தலை முறை வரை த்ருப்தி உண்டாகிறது
தாயார் அல்லது தகப்பனார் சிராத்தம் மஹாளய பக்ஷத்தில் வந்தால் இவர்கள் சிராத்தம் செய்த பிறகுதான் மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும்.
தற்காலத்தில் கூட்டு குடும்பம் இல்லாததால் முதலில் இளையவன் மஹாளயம் செய்த பிறகு தான் மூத்தவன் மஹாளயம் செய்ய வேண்டும்.
சகோதரர்கள் தனி தனியேத் தான் சிராத்தமும் செய்ய வேண்டும்..
. ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் சகோதரர்கள் வசித்தாலும் சிராத்தம் தனி தனியே தான் செய்ய வேண்டும்..
சிராத்தம் ஸம்பூர்ணமாவதற்கு முக்கியமாக தேசம் ,காலம், தகுதியுள்ள ப்ராஹ்மணர்கள்.,திரவ்யம், அக்கரையுள்ள கர்த்தா,, சிராத்தம் செய்யும் ஹோம குண்டத்தில் நிறப்ப பட்ட மண் தெற்கு பக்கம் சரிந்து இருக்க வேண்டும்..
சிராதத்திற்கு வரிக்கபடும் ப்ராஹ்மணர் வேதம் முழுவதும் அறிந்தவராகவும், மனைவியோடு கூடியவன், அனுஷ்டாதா, அங்கஹீனம் இல்லாதவன் (ஆறு விரல்கள் உட்பட ) .( குஷ்டம், க்ஷயம், அபஸ்மாரம், சொத்தை நகம் முதலியன இல்லாதவன் ) இவர்களை தர்ம சாஸ்திரம் முதல் பக்ஷமாக கூறுகிறது..
பிராமணரின் மனைவி 6 மாததிற்கு மேல் கர்பமாய் இருந்தாலும்,மாத விடாயாக இருந்தாலும், அவருக்கு தீட்டு இருந்தாலும் அவரை வரிக்ககூடாது.
வரிக்கபடும் இரு ப்ராஹ்மணர்கள் சகோதரர்களாக இருந்தாலும், அல்லது, தகப்பன், மகனாக இருந்தாலும் இவர்களை சேர்த்து வரிக்ககூடாது.
இரண்டாம் பக்ஷமாக யோக்கியதை உள்ள பந்துகளையும், , விசுவேதேவ ஸ்தானத்திற்கு வேத அத்யயனம் செய்த ப்ரஹ்மசாரியும், த்ருஸூபர்ணம், மதுத்ரயம் மந்த்ரங்களாவது தெரிந்தவனையும், ப்ரதி வசனம் சொல்ல தெரிந்தவனும் வரிக்கலாம்..
கடைசீ பக்ஷமாக காயத்ரீ மந்த்ரம் ஜபம் மட்டிலுமாவது செய்யும் ப்ராஹ்மணராக இருத்தல் அவசியம்.
முதல் நாள் இரவே முடிந்தால் ப்ராஹ்மணர்கள் இரவு சாப்பாடு முடித்த பின் அவர்கள் வீட்டிற்கு சென்று உபவீதியாய் விசுவேதேவரையும் ,ப்ராசீனாவீதியாய் பித்ரு ஸ்தான ப்ராஹ்மணரையும் வரிக்கவேண்டும் என்று தர்ம சாத்திரம் கூறுகிறது.
அப்படி வரிக்கப்பட்டவர் சிராத்தம் முடியும் வரை நியமத்தை கடை பிடிக்க வேண்டும்
.விஷ்ணு இல்லாத சிராத்தம் நஷ்டம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது ஆகையால் ப்ரத்யக்ஷமாக ப்ராஹ்மணர் அந்த இடத்தில் வைக்க முடியாவிடில் இலையாவது போட்டு பரிமாரலாம்.
முடிந்தவுடன் இதை பசு மாட்டிற்கு கொடுக்கலாம் . ஸம்ப்ரதாயப்படி ஒரு ப்ரஹ்மசாரியை சாப்பிட சொல்லும் பக்ஷத்தில் பித்ரு சேஷமான அன்னம், முதலிய வஸ்துக்கள் போடக்கூடாது.
கர்த்தா சிராத்தத்திற்கு முதல் நாள், அன்று, மறுநாள் ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்
சிராத்த தினத்தன்று கோபம் கூடாது. பொய் சொல்லக்கூடாது .தாம்பூலம் போட கூடாது. அப் ப்ராமணரிடம் பேசக்கூடாது. பகலில்
தூங்ககூடாது .டூத் பிரஷால் பல் தேய்க்கலாம்.. வேப்பங்குச்சி, அரசங்குச்சிகளால் பல் தேய்க்க வேண்டாம்.
பல் குச்சியால் பல் தேய்பதால் ரத்தம் வெளீயாகலாம். பித்த நீர் சுரந்து பசி ஏற்படலாம் இவைகளை தடுப்பதற்காக பல் தேய்க்க கூடாது .
. ஆதலால் பற்களை கை விரல்களால் நன்றாக குழப்பி 12 தடவை வாய் கொப்பளிக்க
வேண்டும்.அன்று காலையில் காபி கூட சாப்பிட கூடாது. அன்று ஒரே வேளை சாப்பாடு தான். அன்று இரவு பாலும் பழமும் தான் சாப்பிட. லாம்..பக்ஷணங்களும் இரவில் சாப்பிடக்கூடாது..
அன்று வேத அத்யயனம் செய்ய கூடாது. சிராத்தத்திற்கு உரிய தானங்களை தவிர மற்ற தானங்கள் கொடுப்பது வாங்குவது கூடாது.
சிராத்தத்தன்று காலை நித்ய ஸ்நானம், ஸந்தியா வந்தனம், சமிதாதானம்// ஓளபாசனம்
மாத்யானிகம் இவைகளை தவிர வேறு தேவ கார்யங்கள் செய்யக் கூடாது.
.சிராத்தத்திற்கு மறுநாளும் க்ஷவரம்,,,எண்ணைய் தேய்த்து குளிப்பது,,பரான்னம்; ப்ரதிக்ரஹம் உடலுறவு கூடாது. மாத்யானிக ஸ்நானம் செய்யு முன்னர் மல ஜல விசர்ஜனம் செய்து விட வேண்டும்,
சிராத்தம் ஆரம்பித்த பிறகு முடியும் வரை மல ஜல விசர்ஜனம் செய்யக்கூடாது. அடக்கி கொண்டும் சிராத்தம் செய்ய கூடாது.
கர்த்தா கண்ணீர் விடாதவனும், கடுமையாக பேசாமலும், உற்று பார்க்காமலும்,, கோபம் இல்லாதவனும்,வேறு இடத்தில் மனம் இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்..
தேவ பூஜை, ப்ருஹ்மயஞ்கம் சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும். சிராத்தம், உபவாசம் அநுஷ்டிக்கும் நாளில் வந்தால், சிராத்தம் முடித்து பித்ரு சேஷம் அவசியம் சாப்பிட வேண்டும்
யாசகம் வாங்கிய பொருளால் சிராத்தம் செய்யக்கூடாது. இரும்பு பாத்ரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் சமையலுக்கோ பரிமாறவோ உபயோகபடுத்த கூடாது. .சமையல் செய்யும் பாத்திரங்களை நன்றாக தேய்த்து
அலம்பிய பிறகு உபயோகபடுத்தவும் .ப்ராஹ்மணர்களுக்கு பரிமாறும்போது பதார்த்தங்கள் சூடாக இருக்க வேண்டும். இரண்டாவது முறை
வேக வைக்க கூடாது. சிராத்த முதல் நாள் எந்த பக்ஷணமும் தயார் செய்து வைத்து , சிராத்தத்தில் போடக்கூடாது. வீட்டில் கோலம்
மணிஓசை அன்று கூடாது.
பெற்றோருக்கு ஆப்தீகம் முடியும் வறை எங்கும் சிராத்தம் சாப்பிட போக கூடாது. சிராத்தம் செய்து வைக்கலாம்.
போக்தா:_=-வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் முதல் நாளோ அன்றோ மறூநாளோ வேறு எங்கும் சிராத்தம் சாப்பிடக்கூடாது.
சிராத்தம் சாப்பிட்ட நாளில் சிராத்த சாப்பாட்டிற்கு முன்போ அல்லது பின்போ
சிராத்த சாப்பாட்டை தவிர மறுபடியும் பால், காபி உள்பட எதையும் சாப்பிடாமலிருத்தல், நீண்ட தூரம் ப்ரயாணம் செய்யாமலிருத்தல்;; அதிகமான சுமையுள்ள பொருட்களை சுமக்காமலிருத்தல்;
சிராத்தம் சாப்பிட்ட நாள் முழுவதும் வேதம், சாஸ்திரம், புராணம் போன்றவற்றை சொல்லாமலும், சொல்லி கொள்ளாமலுமிருத்தல்; அன்று முழுவதும் இந்திரிய கட்டுபாட்டுடன் தனியாக வசித்தல்;;
சிராத்தம் சாப்பிடும் முன்போ பின்போ எந்த விதமான தானமும் வாங்காமலிருத்தல் ;ஸந்தியா வந்தனத்தை விஸ்தாரமாக செய்யாமலிருத்தல்; ஒளபாசனத்தை தவிர வேறு எந்த ஹோமமும் செய்யாமலிருத்தல்.; நிர்ணய சிந்து-286.
சிராத்த சாப்பாடு ஜீரணமாகும் வறை பித்ருக்கள் ஸூக்ஷமமாக சாப்பிட்ட நபரிடம் இருப்பதாக ஐதீகம்
...
சிராத்தம் சாப்பிட்ட நாளன்று மாலையில் வலது கையில் சிறிது சுத்தமான ஜலத்தை எடுத்துக்கொண்டு 10 முறை காயத்ரி ஜபம் செய்து விட்டு அந்த ஜலத்தை குடித்து விட வேண்டும்.
. பிறகு தான் சுத்தி ஆகி ஸாயம் கால சந்தியாவந்தனம், ,ஒளபாசனம் செய்யலாம் என்கிறார் உசநஸ் என்னும் மஹரிஷி
பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு பித்ருக்களை த்ருப்தி செய்தால்
பித்ருக்கள் சந்தோஷப்பட்டு நீண்ட ஆயுள், அழியா புகழ்,,உடல் வலிமை.,செல்வம், பசு, தான்யங்கள், சுகம் ஆகியவற்றை அனுக்கிரஹிக்கிறார்கள் என்கிறது யம ஸ்ம்ருதி,
.
சிராத்தம் சாப்பிட்ட அன்று இரவும் சாப்பிடக்கூடாது அத்யயனம் செய்யக்கூடாது தூர தேசம் போகக்கூடாது. ப்ரஹ்மசர்யம், வேறு இடத்தில் ப்ரதிக்ரஹம் வாங்காமல் இருப்பது
அன்று காலை க்ஷவரம் செய்து கொள்ளாமல் இருப்பது இவைகளை கடை பிடிக்க வேண்டும்..வேறு எந்த வைதீக கர்மாவும் செய்யக்கூடாது. தாம்பூலம் போடலாம்.
வரித்த பிறகு சிராத்த ப்ராஹ்மணர் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது.
ராக்ஷஸர் முதலியவர்களை துரத்துவதற்காக ப்ராஹ்மணர் சாப்பிடும்போது அபிச்ரவணம் மற்றவர்களை கொண்டு சொல்ல செய்ய வேண்டும்.. அதற்காக சில ப்ராஹ்மணர்களை வரிக்க வேண்டும்..
ருக் வேதம், சுக்ல யஜுஸ்: க்ருஷ்ண யஜுஸ் ஸாம வேதம் இவைகளில் அபிசிரவண மந்திரங்கள் உள்ளன.. வசதி உள்ளவர்கள் எல்லோரையும் வரச்சொல்லலாம்..