P.J.
0
புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம்: புது&
புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம்: புதுச்சேரி மாணவிகள் நெகிழ்ச்சி உதவி
சமூக வலைதளங்களிளும், வாட்ஸ் ஆப்பிலும் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்தியில், சமூகத்திற்கு தங்களது பங்களிப்பை செய்து பாராட்டு பெற்றிருக்கிறார்கள் புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவியர்.
அழகை மேம்படுத்திகொள்ள பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் இளைஞிகளுக்கு மத்தியில், தங்களது கூந்தலின் நீளம் குறைந்தாலும் உள்ளத்தில் அன்பைக் கூட்டிக்கொண்டு, அழகைப் பற்றி கவலைகொள்ளாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது கூந்தலை தானமாக அளித்துள்ளனர் அவர்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சை செய்வதின் மூலம் தங்களின் இயற்கையான கூந்தலை இழந்துவிடுகின்றனர். இதனால் அதிக மனச்சோர்வும் அடைகின்றனர். இயற்கை கூந்தல் விக் செய்ய குறைந்தது ரூ.10 ஆயிரம் முதல் ஆவதால் நோயாளிகளுக்கு இது ஒரு கூடுதல் செலவு. இதற்கு தீர்வு காண “கிரீன் டிரெண்ட்ஸ் ஹேர் மற்றும் ஸ்டைல் சலூன், “டேங்கில்டு” எனும் திட்டத்தை, அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு துவக்கியது.
இத்திட்டத்தில் இணைந்து சென்னை, திருச்சி போன்ற பகுதிகளில் பல்வேறு மாணவியர்கள் கூந்தலைத் தானமாக கொடுத்தனர். அந்த வரிசையில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தங்கள் கூந்தலை தானமாக கொடுக்க முன்வந்தனர்.
கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் கூந்தல் அலங்கார வல்லுனர்கள் மூலம் மாணவியரின் அழகிய கூந்தலின் ஒரு பகுதியை ‘கூந்தலின் ஸ்டைல்’ மாறாமல் குறைந்தது 8 அங்குலம் அளவிற்கு வெட்டி எடுத்துக்கொண்டனர்.
கூந்தல் தானம் வழங்கிய மாணவிகளில் சிலரிடம் பேசினோம். சாதனா, என்ற மாணவி, “ நான் இரண்டாம் ஆண்டு வணிகவியல் படிக்கறேன், ஒருமுறை தொலைக்காட்சியில் மாணவிகள் புற்றுநோயாளிகளுக்கு, இம்மாதிரி கூந்தல் தானம் செய்ததை பார்த்தேன். அதைப்பார்த்த என் அம்மா உங்க கல்லூரியில் கேட்டால் நீயும் தயங்காம கொடு என உத்வேகம் தந்தார். சில நாள்ல அந்த வாய்ப்பு எங்க கல்லுாரிக்கு கிடைச்சது. உடனே கொடுக்கணும்னு தோணுச்சு! முடியைத்தானே கொடுக்கறோம், கொஞ்ச நாள்ல வளர்ந்துடும், அதே சமயம் அழகு நிரந்தரமானதல்ல. இம்மாதிரி நம்மால முடிஞ்ச உதவியை செய்யறதால ஏற்படுகிற மனத்திருப்திக்கு ஈடே இல்லை" என்றார் நெகிழ்வாக.
Please read more from here
??????????????????? ??????? ?????: ?????????? ???????? ?????????? ????