V
V.Balasubramani
Guest
பேங்க் பேலன்ஸ் ரூ.10 கோடி... தொழில் பிச்சை எ
பேங்க் பேலன்ஸ் ரூ.10 கோடி... தொழில் பிச்சை எடுப்பது!
குவைத் வங்கியில் வெளிநாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நாடு கடத்தினர்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத், பக்ரைன் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குவைத்தில் வாகன ராேந்தில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர், அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த காவல்துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த பிச்சைக்காரர் அங்குள்ள வங்கியில் 5 லட்சம் பணம் போட்டு வைத்திருப்பது தெரியவந்தது. இந்த பணம் இந்திய மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
இதையடுத்து, பொதுமக்களை ஏமாற்றியதாக பிச்சைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபர் வெளிநாட்டை சேர்ந்தவர்.
குவைத்தில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் பிச்சை எடுக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு உடனே அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 22 பிச்சைக்காரர்கள் குவைத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.vikatan.com/news/article.php?aid=49390&utm_source=vuukle&utm_medium=referral#vuukle_div