• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மகளிர் மட்டும் ஆட்டோ

Status
Not open for further replies.
மகளிர் மட்டும் ஆட்டோ

மகளிர் மட்டும் ஆட்டோ

May 10, 2015

மகளிர் மட்டும் பேருந்துகளைப் பற்றி அறிந்திருக்கும் பலருக்கும் மகளிர் மட்டும் ஆட்டோ புதியது. அப்படியொரு ஆட்டோ சென்னையில் அல்ல, தேனியில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் இரட்டிப்பு ஆச்சரியம்தானே? அந்த ஆச்சரியத்துக்குச் சொந்தக்காரர் தேனி பழைய அரசு மருத்துவமனை ரோடு பகுதியைச் சேர்ந்த ரமாதேவி. ஆட்டோ மட்டுமல்ல கார், வேன், பஸ், ஜேசிபி இயந்திரம் எனக் கனரக வாகனங்கள் ஓட்டுவதிலும் இவர் வல்லவர்.


தேனி மாவட்டம் வருசநாடு மலைக் கிராமத்தில் பிறந்தவர் ரமாதேவி. அதிவேக வாகனங்களில் பயணிக்கத் தயங்கும் பெண்களுக்கு மத்தியில் சிறு வயதிலேயே வாகனங்கள் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். தற்போது பலவிதமான வாகனங்கள் ஓட்டுவதில் தேர்ச்சி பெற்று, மற்ற பெண்களுக்கும் பயிற்சி அளித்துவருகிறார். இரவு வேளைகளிலும் ஆட்டோ ஓட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறார்.


பாதியில் நின்ற படிப்பு


ரமாதேவியின் தந்தை பால்சாமி பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். ரமாதேவி 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததால் படிப்புக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஒரு அண்ணன், ஒரு தம்பி கொண்ட அந்தக் குடும்பத்தில் ரமாதேவியையும் ஆண் மகனைப் போலவே வளர்த்திருக்கிறார்கள். அந்த வளர்ப்பினால்தானோ என்னவோ பயமின்றித் தென்னை மரம் ஏறித் தேங்காய் பறிப்பது, கிணற்றில் நீந்தி மீன் பிடிப்பது என்று பல வேலைகளை ரமாதேவி துணிச்சலுடன் செய்திருக்கிறார்.


ஓட்டுநர் பயிற்சி



படிப்பைத் தொடரவில்லை என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்காமல் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவு செய்தார். ஆரம்பத்தில் ரமாதேவியின் விருப்பத்துக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களின் சம்மதத்தோடு பயிற்சி எடுத்துக்கொண்டார். தந்தையின் இறப்புக்குப் பிறகு தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த ரமாதேவி, மதுரையில் ஓட்டுநர் பயிற்சி முடித்து முதன் முதலில் தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகத் தனது பணியைத் தொடங்கினார்.

சென்னை, கோவை உள்ளிட்ட சில நகரங்களில் தனியார் நிறுவனங்களில் வேன், கார் ஓட்டிய அனுபவமும் இவருக்கு உண்டு. தற்போது தேனியில் கார், வேன், மோட்டார் சைக்கிள், ஆட்டோ எனப் பல விதமான வாகனங்களை ஓட்ட பயிற்சியளித்து வருகிறார்.


படிப்பைத் தொடரவில்லை என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்காமல் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவு செய்தார். ஆரம்பத்தில் ரமாதேவியின் விருப்பத்துக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களின் சம்மதத்தோடு பயிற்சி எடுத்துக்கொண்டார். தந்தையின் இறப்புக்குப் பிறகு தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த ரமாதேவி, மதுரையில் ஓட்டுநர் பயிற்சி முடித்து முதன் முதலில் தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகத் தனது பணியைத் தொடங்கினார். சென்னை, கோவை உள்ளிட்ட சில நகரங்களில் தனியார் நிறுவனங்களில் வேன், கார் ஓட்டிய அனுபவமும் இவருக்கு உண்டு. தற்போது தேனியில் கார், வேன், மோட்டார் சைக்கிள், ஆட்டோ எனப் பல விதமான வாகனங்களை ஓட்ட பயிற்சியளித்து வருகிறார்.


தோள் கொடுத்த நட்பு



கோவை தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது தன்னுடன் பணியாற்றிய ஜெசிந்தாமேரியின் ஆலோசனைப்படி விட்டுப்போன படிப்பை ரமாதேவி தொடர்ந்தார். “என் நெருங்கிய தோழியான ஜெசிந்தாமேரிதான் நான் பாதியில் விட்ட பள்ளிப் படிப்பை மீண்டும் தொடரக் காரணம். டுடோரியலில் படித்து இரண்டு பாடங்களை எழுதித் தேர்ச்சி பெற்றேன். இன்றுவரை எனது முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்துவரும் என் தோழியின் பாசத்துக்கு அளவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ரமாதேவி.


முழுக்க முழுக்க மகளிருக்காக மட்டுமே ஆட்டோ ஓட்டுவதால் தனது ஆட்டோவில் ‘லேடிஸ் ஸ்பெஷல்’ என்று எழுதிவைத்திருக்கிறார்.


“ஆண்கள் தனியாக வந்தால் ஆட்டோவில் ஏற்ற மாட்டேன். குடும்பத்துடன் வந்தால் ஏற்றிக்கொள்வேன். நான் துணிச்சலுடன் எதையும் செய்வதால் சில ஆண்கள் என் காதுபடவே என்னைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். அப்படிப் பேசியவர்களே இப்போது மரியாதையுடன் பார்க்கிறார்கள்” என்று பெருமிதத்துடன் சொல்லும் ரமாதேவி, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்குக் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்திருக்கிறார். வறுமையில் வாடும் பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் கட்டணம் பெற்றுக் கொள்ளாமல் வாகனம் ஓட்டக் கற்றுத் தருகிறார்.


தன்னம்பிக்கைப் பாடம்



வாகனங்கள் திடீரெனப் பழுதடைந்தால் எந்த இடத்திலும் பதற்றமோ பயமோ இன்றி, யாரையும் எதிர்பார்க்காமல் பெண்களே டயரைக் கழற்றி மாட்டவும் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். ரமாதேவியின் சேவையைப் பாராட்டி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல சான்றிதழ்கள், பரிசுகளை இவருக்கு வழங்கியுள்ளன. தேனியில் இருந்து பெரியகுளம்வரை நடந்த ஆண்கள் பங்கேற்ற கார் பந்தயத்தில் தனியொரு பெண்ணாகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.


“கையில் தொழிலும் மனதில் நம்பிக்கையும் இருந்தால் பெண்கள் நிச்சயம் முன்னேறி விடுவார்கள். அவர்கள் யார் கையையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் வாழ்வதற்காக ஏதோ என்னால் முடிந்தளவு உதவி செய்கிறேன். மற்றபடி பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை” என்ற தன்னடக்க வார்த்தைகளே ரமாதேவியின் பெருமையை உணர்த்திவிடுகின்றன.


????????: ?????? ??????? ????? - ?? ?????
 
Here is her photo for ready reference!

auto1_2401335g.jpg
 
I came across a girl, driving an auto in our area. Yet to check whether she will take me in her vehicle, if requested.

She has given her mobile number to me! :)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top