• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மகிழ்ச்சியைக் கொடுக்குமா மச்சங்கள்?

Status
Not open for further replies.
மகிழ்ச்சியைக் கொடுக்குமா மச்சங்கள்?

மகிழ்ச்சியைக் கொடுக்குமா மச்சங்கள்?

201503091536028278_Happiness-Does-the-moles_SECVPF.gif



இறைவன் படைப்பில் மிகப் பெரிய அற்புதம், கோடிக் கணக்கான மனிதர்களைப் படைத்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான அங்க லட்சணத்தில் படைத்திருப்பது தான். ஒருவருக்கு காது நீண்டிருக்கும், ஒரு சிலருக்கு மூக்கு நீண்டிருக்கும். ஒரு சிலருக்கு உடல் பெருத்திருக்கும். ஒரு சிலருக்கு உடல் மெலிந்திருக்கும்.


வண்ண, வண்ண ஆடைகளில் விதவிதமான டிசைன் வரைவது போல பிரம்மா மனிதர்களை விதவிதமான தோற்றத்தில் படைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்வார்கள். அவர்கள் பிறந்த நேர அடிப்படையில் கணித்த ஜாதகம் அவர்களின் எதிர்காலப் பலன்களைச் சொல்லும்.

அவர்கள் பிறந்த மேனியில் குறியிட்ட குறியீடு தான் மச்சம். அவரவர்களின் குணங்களை அவை எடுத்துரைக்கும். அதனால் தான் பலரும் மச்சத்தைக் கண்டு அச்சப்படுவர். குழந்தை பிறந்த உடனேயே எங்கெங்கெல்லாம் மச்சம் இருக்கிறது என்று தேடிப்பார்ப்பர். ஒரு சில மச்சங்கள் ராஜயோகங்களை கொடுக்கும். ஒரு சில இடங்களில் இருக்கும் மச்சம் போராட்டமான வாழ்க்கையைக் கொடுக்கும்.

நாம் கண்ணால் பார்க்க முடியாத இடத்தில் மச்சமிருந்தால் நல்லது என்றும், மறைவிடங்களில் அந்தரங்கப் பகுதிகளில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடிவரும் என்றும் கிராமப் புறங்களில் சொல்வார்கள்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அவற்றை எடுத்துரைக்க ஜோதிட சாஸ்திரம், எண்கலை, சாமுத்திரிகா லட்சணம், மச்ச சாஸ்திரம் என்றெல்லாம் பலவகை சாஸ்திரங்களை முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஓட்டுப் போட்டதற்கு அடையாளம் காட்ட நகத்தில் மையால் ஒரு புள்ளி வைப்பது போல, படைப்புத் தெய்வம் மனித உடலில் மூக்கிலோ, கையிலோ, மார்பிலோ, காலிலோ, வயிற்றிலோ, முதுகிலோ வைக்கப்படும் புள்ளி 'மச்சம்' என்று கருதப்படுகின்றது. தோலில் மேற்பகுதியில் தெளிவாகத் தெரியும். மச்சக்குறிகள் இல்லாத மனிதர்களே கிடையாது.

மச்சங்களிலே பலவகைகள் இருக்கின்றன. கருப்புநிற மச்சங்கள், பழுப்புநிற மச்சங்கள், சிவப்புநிற மச்சங்கள் என்று சிறிய வடிவிலோ, பெரிய வடிவிலோ அமையலாம். காயம் போன்றவற்றால் வரக்கூடிய வடுக்களை மச்சம் என்று கருதக் கூடாது.

வீட்டிற்கு எப்படி முகப்பு முக்கியமோ, அப்போ உடலுக்கு முகம் தானே முக்கியம். முகத்தில் மச்சம் இல்லாதவர்கள் முன்னேற்றத்தின் முதல் படியில் நிற்பர். இதேபோல உடலில் எல்லா இடங்களிலும் இருக்கும் மச்சங்களுக்கும் உரிய பலன்களை மச்ச சாஸ்திரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

மச்சங்களின் பலன்களை அறிவதற்கு முன்னால் அவை மச்சக்குறிகள் தானா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை ரகசியங்களையும், வாழ்வில் ஏற்படக் கூடிய அதிர்ஷ்டங்களையும், தெரிந்து கொள்ள உதவும். மச்சத்தின் மூலம் எப்படியும் வாழலாம் என்ற நிலையை மாற்றி இப்படித்தான் வழ வேண்டும் என்ற நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி அவர்களது உடலில் வலது, இடது பக்கத்தில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆண்களுக்கு வலது பக்கத்தில் மச்சம் இருப்பது யோகம் தரும். பெண்களுக்கு இடது பாகத்தில் மச்சம் இருப்பதும் யோகம் தரும்.

பொதுவாக ஆண்களுக்கு வலது கன்னத்தில் மச்சமிருந்தால் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தைப் பெறுவர். இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் இனிமையாகப் பழகுவர். வம்பு, வழக்குகளுக்கு போகமாட்டார். பெண்களுக்கு வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும். இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் சமயத்திற்கு ஏற்றாற் போல சாமர்த்தியமாகப் பேசுவர்.

ஆண்களுக்கு நெற்றியில் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் பணவரவு திருப்தி தரும். இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் எந்தக் காரியத்தையும் பொறுமையாகச் செய்து முடிப்பர். பெண்களுக்கு வலது நெற்றியில் மச்சம் இருந்தால் கணவரின் அன்பிற்கு பாத்திரமாக விளங்குவர். இடது பக்கம் மச்சமிருந்தால் எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே நிம்மதியைப் பெற முடியும்.

இங்ஙனம் மச்ச சாஸ்திரம் நம் உடல் முழுவதிலும் உள்ள மச்சங்களை விவரித்துக் கொண்டே போகிறது. சில இடங்களில் உள்ள மச்சங்கள் சோகங்களை உருவாக்கும். அங்ஙனம் சோகங்களைக் குறிக்கும் இடத்தில் உள்ள மச்சங்களின் பலனை அறிந்து அதற்கேற்ற கிரகத்திற்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. மச்சம் அழியாது. ஆனால் நமது அச்சம் மாறும். ஆலய வழிபாடு வாழ்வை வளமாக்கும் அல்லவா?


????????????? ?????????? ??????????||Happiness-Does-the-moles
 
I have a small mole in my neck. They say that women who have moles in their neck will hoard on golden jewelry. This is not true in my case. Neither I have the habit of purchasing lot of gold, nor my hubby encourages it.

And secondly, there is a prominent black mole in my left palm, near the lunar mount (I guess). It is located on the way bottom of the life line. I do not know what result this holds, but I think owing to its strategic placement at the start of the 'money line' at the base of the palm, that this tells that I will change my field b/w my degree and actual profession (since this is the source of income) and maybe a foreteller of difficulties on professional front, too! I would so love to show my palm to a palmist and confirm on this one!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top