P.J.
0
மணிக்கு 300 கி.மீ. வேகம்: சென்னை–மும்பை இடையே அ
மணிக்கு 300 கி.மீ. வேகம்: சென்னை–மும்பை இடையே அதிவேக ரெயில்?
செப்டம்பர் 25,2015
புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, அதிவேக ரெயில்களை இயக்குவதற்காக வைர நாற்கர திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி மாநகரங்களை இணைத்து, மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை–மும்பை வழித்தடம் குறித்து ஆராய பிரான்ஸ் (சிஸ்ட்ரா), மும்பை–டெல்லி வழித்தடம் பற்றி ஆராய சீனா (தேர்டு ரெயில்வே சர்வே அன்ட் டிசைன் இன்ஸ்டிடியூட்), டெல்லி–கொல்கத்தா வழித்தடம் குறித்து ஆராய ஸ்பெயின் (இனிக்கோ) நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிவேக ரெயில்களை இயக்குவதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். இந்த ஆய்வுப்பணி ரூ.30 கோடியில் நடத்தப்படுகிறது.
தற்போது டெல்லி–மும்பை சூப்பர்பாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 16 மணி நேரமாக உள்ளது. புதிய அதிவேக ரெயில் விடப்படுகிறபோது, இந்த பயண நேரம் பாதியாக குறைந்து விடும் என கூறப்படுகிறது.
சென்னை–டெல்லி வழித்தடத்தில் அதிவேக ரெயில்கள் இயக்குவது பற்றி சீன நிறுவனம் ஒன்று ஏற்கனவே ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.dailythanthi.com/News/In...peedHighspeed-train-between-ChennaiMumbai.vpf