"எந்த மாத்ரமுன" (தமிழாக்கம்)
ராகமாலிகை - மிஸ்ர சாபு
அன்னமையா
Audio link:
[MEDIA=googledrive]1bRiWBZ-Yw9qK_gfJTJdL4l5Iane-Mtoz[/MEDIA]
ப்ருந்தாவனி
ஆ: ஸ ரி²ம¹ப நி³ஸ்,- அ: ஸ் நி²ப ம¹ரி²ஸ
பல்லவி:
; எந்த| வடி|வினில்|| எவர் நினைத்|தா|லும்||
; அந்த| வடி|வம் || நினதே| ; | ; ||
எந்தப் பண்|டமும்| அதன்|| மாவால்| அமைவ|து போல்||
எந்த வே|று பா|டும் || எண்ணம் அ|மைப்ப|தே; ||
அனுபல்லவி:
வைஷ்ணவர்கள்| அன்புடன்| உன்னை|| விஷ்ணு என்|றே வழி|படுவார்||
வேதாந்தம்| அறிந்தோர்| உன்னை|| பரப்பிரம்மம்| என்|பார்||
சைவர் சிவ| பக்தர்கள்| உன்னை|| சிவபெருமா|னே என| நினைப்பார்||
சிறப்புடன் கா|பாலிகர்|கள் உனை|| ஆதி பைர|வா எனப்| புகழ்வார்||
(எந்த வடிவினில்)
மாயாமாளவகௌள
ஆ: ஸ ரி¹க³ம¹ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம¹க³ரி¹ஸ
சரணம்:
சரியென நம்|புவார் சாக்|தர்கள்|| சக்தி ரூப|மே நீ |என்பார் - தரி||
சனம் பலவித|மாக| செய்வார்|| தன் நினைவில்| உன் புகழ்| பஜிப்பார் ||
அரிய நிதி| நீயே| ஆயினும்|| அல்ப அறிவில்| அற்பமே| ஆவாய் ||
அறிவில் உயர்ந்|தோர் உல|கில் உன்னை|| அறிவார் உயர்|வானவன்| என்றே||
குறை ஏதுமில்|லை உன்|னாலே|| நீரில் கமலம்| உயர்வது| போலே||
பரிசுத்த கங்|கை நீர்| ஊற்றாய் || அருகில் கிணற்றில்| வருவது| போலே ||
ஶ்ரீ வேங்கட|பதி நீ| ஆயின் || எம்மை ஏற்க | உள்ள தெய்|வமே||
நீயே எம|து புகல் என நெஞ்||சில் இது என்| பரதத்|துவமா||கும்
(எந்த வடிவினில்)