57. "ராம மந்த்ரவ" தமிழாக்கம்)
ஜோன்புரி - ஆதி - புரந்தரதாசர்
ஆ: ஸ ரி²ம¹ப த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹க²ரி¹ஸ
Audio link:
[MEDIA=googledrive]1LTjxBEBsN_jWZSF70u9EDSuw6Y4QOvyo[/MEDIA]
பல்லவி:
;, ராம மந்திரம் ஜபிப்|பீரே| ; மாந்தரே||
;, ராம மந்திரம் ஜபிப்|பீரே....
அனுபல்லவி:
; , ராம மந்திரம் அன்றி| ; வேறு நி|னைக்க வேண்டாம்||
; சோமசேகரன் தன்| ; தேவியி|டம் உரைத்த||
(ராம மந்திரம்)
சரணம் - 1:
; எளிமையாய் உள்ளவரும்| ; உரக்கச் சொல்|லும் மந்திரம்||
; எந்த பயம் வந்தாலும்| ; உச்சரிக்கும்|மந்திரம்||
; எல்லாப் பாபங்களை|யும் போக்கிடும்| மந்திரம்||
; எளிதாக ஸ்வர்க்கத்தை| ; சேரச் செய்|யும் மந்திரம்||
(ராம மந்திரம்)
சரணம் - 2:
; சகல வேதங்களின்|சாரம் இந்|த மந்திரம்||
; முக்தி மார்க்கத்திற்கு| இதுவே மூ|ல மந்திரம்||
; பக்தி ரசத்திற்கு நல்ல| வழி காட்டும்| மந்திரம்||
; சுக நிதி புரந்தர| விட்டலனின்|மந்திரம்||
(ராம மந்திரம்)