62. "பாவமுலோன" (தமிழாக்கம்)
சுத்த தன்யாசி - ஆதி - அன்னமையா
ஆ: ஸ க²ம¹ப நி²ஸ் - அ: ஸ் நி²ப ம¹க²ஸ
Audio link:
[MEDIA=googledrive]1Kp0Ien8hW9BI1Tvq9k26sVJVIhi7XQU8[/MEDIA]
பல்லவி:
; நம் எண்ணங்களிலும்| ; நம் செயல்|களிலும்||
; நம் சேவை எல்லாம்| ; கோவிந்த|னுக்கே மனமே||
சரணம் 1:
; ஹரி அவதாரங்களே| ; அனைத்து ஆ|ண்டவர்கள்||
; ஹரியின் உள் அடங்கும்| ; அனைத்து| அண்டங்கள்||
; ஹரி நாமங்களே| ; அனைத்து மந்|திரங்கள்|
; ஹரி ஹரி ஹரி ஹரி| ; ஹரி என்|பாய் மனமே||
(நம் எண்ணங்களிலும்)
சரணம் 2:
;, விஷ்ணுவின் மஹிமையே| ; பல வித | கர்மங்கள்||
; விஷ்ணுவின் புகழே| ; உயர்வான |வேதங்கள்||
; விஷ்ணு ஒருவரே| ; விஸ்வத்தின்| அந்தராத்மா||
; , விஷ்ணுவே விஷ்ணுவே| ; எனத் தேடு|வாய் மனமே||
(நம் எண்ணங்களிலும்)
சரணம் 3:
; அச்யுதன் இவரே | ; ஆதியும்| அந்தமும்||
; அச்யுதன் இவரே| ; அசுரரை| அழிப்பவர்||
; அச்யுதன் இவரே ஶ்ரீ| ; வேங்கட|கிரி வாசர்||
; அச்யுதா அச்யுதா| ; சரணம் என்|பாய் மனமே||
(நம் எண்ணங்களிலும்)