70. "கிருஷ்ணா நீ பேகனே" (தமிழாக்கம்)
யமுனாகல்யாணி - மிஸ்ரசாபு - வியாசராயா
ஆ: ஸ ரி²க³ப ம²க³ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ம¹ரி²ஸ
Audio link:
[MEDIA=googledrive]1j-CF4RxL1G7TY8CtpZ-THFOwYn_Szak-[/MEDIA]
பல்லவி:
; க்ருஷ்ணா நீ|| வேகமாய்|| ; வாராயோ||
அனுபல்லவி:
; வேகமாய்|| வாராயோ||
; முக தரிசனம்|| தாராயோ||
(க்ருஷ்ணா நீ)
சரணம் - 1:
; காலினில் எழில்|| சலங்கை ஒளிர||
; நீல மணிக்|| கங்கணம் மிளிர||
; நீல வண்||ணணே நாட்டியம்||
; நீ ஆடி|| வாராயோ||
(க்ருஷ்ணா நீ)
சரணம் - 2:
; இடையில் மணி|| ஒட்டியாணம்||
; விரல்களில்|| மோதிரங்கள்||
; அசையும் வை||ஜயந்தி மாலை||
அழகாக|| அலங்கரிக்க||
(க்ருஷ்ணா நீ)
சரணம் - 3:
; காசி பீ|தாம்பரத்தோடும்||
; கையிலே|| குழலோடும்||
; பூசிய|| சந்தன நறுமணம்||
; வீசிடும்|| மேனியோடும்||
(க்ருஷ்ணா நீ)
சரணம் - 4:
; ஜகமெல்லாம்|| உன் வாயில்||
; அன்னைக்கு|| காட்டியவா||
; ஜகமெல்லாம்|| காத்திடும்||
நம் உடுப்பி|| ஶ்ரீ க்ருஷ்ணா||
(க்ருஷ்ணா நீ)