துவாபரயுக கோகுலத்தைக் காண வேண்டுமா? ராஜமன்னார்குடி பங்குனி பிரம்மோற்சவத்தில் 16 ஆம் நாள் காலை நடக்கும் வெண்ணெயத் தாழி/நவநீத சேவை உற்சவத்தில்(இன்று) அனுபவிக்கலாம். மற்ற திவ்ய தேசங்களில் நடக்கும் வெண்ணெயத் தாழி உற்சவத்தில், கண்ணபிரான் ஒரு குடத்தில், நிறைந்துள்ள வெண்ணெயை கையில் அளாவிக் கொண்டிருப்பார்.
ஆனால் இங்கு,வெண்ணெய்த் தாழியோடு,பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் "விருந்தாவனத்தில் கண்ட வீதியார வருவானான" ஶ்ரீவித்யா ராஜகொபாலனுக்கு வெண்ணெயில் ஐந்து மணி நேரம் திருமஞ்சனம் ( குளியல்) நடைபெறுகிறது.நன்றாகத் தவழ்ந்து,
"தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி"தாழியில் உள்ள/அவர் மேல் வீசி சமர்ப்பிக்கப்படும் வெண்ணெயை அளாவுகிறார்.சந்நிதியில் இருந்து புறப்பட்டு ரத வீதிகளில் வலம் வந்து ஆஸ்தானம் சேரும்வரை பக்தர்கள் வெண்ணெய் வீசிக் கொண்டே இருக்கிறார்கள்.சந்நிதியில் புறப்படும் போதே நன்றாக வெண்ணெய் பூசி வருகிறார்.வரும் வழியெங்கும் வெண்ணெய் வீச்சு.சுமார் 200 கிலோ வெண்ணெய் வீசியிருப்பார்கள்.(ஒரு வெற்றிலையில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்).
அவர் மேல் வீசப்படும் வெண்ணெயை, அர்ச்சகர் அவருக்கு நன்றாகப் பூசிவிட்டு,எடுத்து அனைவருக்கும் பிரசாதமாகத் தந்து கொண்டே இருக்கிறார்.
இன்று மன்னார்குடி,சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் கோபியர்களாக மாறி விட்டனரோ என்னும்படிமக்கள் வெள்ளம். வெண்ணெய் வெள்ளம்.
கோபாலன் மேல் வீசும் வெண்ணெய் மக்கள் மேலும் விழுகிறது -பாலகோபாலனின் ராசக்கிரீடையை நினைவூட்டும் வண்ணம் ! வெண்ணெய் படிந்த ராஜமன்னார் மேல்,மக்கள் ஓடி/நடந்து வருவதால் கிளம்பும் புழுதியும் படிவதால் பெரியாழ்வார் பாசுரத்துக்கும் இங்கே ஓர் பிரமாணம் .
வெண்ணெய் அளந்த குணுங்கும், . விளையாடு புழுதியும்
"வெண்ணெய் அளந்த குணுங்கும், விளையாடு புழுதியும்,கொண்டு, திண்ணென இவ்விராவுன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன், எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டிங்கு, எத்தனை போதும் இருந்தேன், நண்ணலரிய பிரானே! நாரணா !! நீராட வருவாய் !!!"
(-- அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)