P.J.
0
மலம்பட்டி சுடுகாட்டில் 2வது மனித மண்டை ஓட
மலம்பட்டி சுடுகாட்டில் 2வது மனித மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுப்பு!
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.பி. நிறுவனம் மன நலம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை நரபலி கொடுத்து ஓலைப்பாயில் சுருட்டி புல்டோசரில் குழி தோண்டி சின்ன மலம்பட்டி சுடுகாட்டில் ஒரு பனை மரத்தின் கீழ் புதைத்ததை நேரில் பார்த்ததாக மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவை சேர்ந்த் சேவற்கொடியான் என்கிற பிரபு பகீர் புகாரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சகாயத்தை நேரில் சந்தித்து கொடுத்தார்.
சேவற்கொடியான் கூறிய புகாரை தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி சுடுகாட்டில் இன்று காலை 9 மணி முதல் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில் 8 பேர் கொண்ட குழுவினர் உதவியுடன் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
தோண்டும் பணியின்போது முதலில் சிறிய எலும்பு துண்டுகள் கிடைத்த நிலையில், பகல் 12.50 மணியளவில் 5 அடி தோண்டியபோது, அங்கிருந்து ஒரு மனித மண்டை ஓடு, 2 கால் எலும்புகள், 2 கை எலும்புகள், 2 முழங்கால்கள் மற்றும் 2 சிறிய எலும்புகள் என மொத்தம் 9 எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேலும் தோண்டும் பணி அங்கு தீவிரப்படுத்தப்பட்டது.
உணவு இடைவெளைக்கு பிறகு சுறு சுறுப்பாக நடைபெற்று வந்த தோண்டும் பணியின்போது, பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டாவதாக ஒரு மண்டை ஓடு, தொடை எலும்புகள், கால் எலும்புகள், கை எலும்புகள் என மேலும் 7 எலும்புகளும் சிறிய எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டது. இந்த எலும்பு துண்டுகள் வெள்ளை பட்டு வேட்டியில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. மேலும், அபிஷேக பொருட்களுடன் மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றும் அத்துடன் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.
இவைகளை மருத்துவக்குழுவினர் சேகரித்து மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இவை அனைத்தும் தடைய அறிவியல் துறைக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பின் சென்னைக்கும், மும்பைக்கும் சோதனைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் மேலும் பல எலும்பு துண்டுகள் கிடைக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- சண்.சரவணக்குமார், சே.சின்ன துரை
http://www.vikatan.com/news/article.php?aid=52363

(13/09/2015)
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி சுடுகாட்டில் தோண்டும் பணியின்போது 2வதாக ஒரு மனித மண்டை ஓடும் சில எலும்பு துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.