• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மார்கழி மாத பூஜைகள்.

Status
Not open for further replies.

kgopalan

Active member
மார்கழி மாத பூஜைகள்.

மார்கழி மாத பூஜைகள்.
16-12-2013 முதல் 13-01-2014 முடிய தனுர் மாத உஷஹ் கால பூஜை செய்ய வேண்டும்.இது தேவர்களுக்கு அதிகாலை நேரம்.. கோதண்டஸ்தே ஸவிதரி ப்ரத்யூஷே பூஜநாத் ஹரே: ஸஹஸ்ராப்தா அர்சன பலம் தினேநைகேந.ன லப்யதே

என்பதாக கோதண்டம் எனும் தநுர் ராசியில் ஸுர்யன் சஞ்சரிக்கும் மார்கழி மாதத்தில் விடிய காலையில் , ஒரு நாள் ஶ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜை செய்தால் ஆயிரம் வருஷம் மஹா விஷ்ணுவை

பூஜை செய்த பலன் கிடைக்கும்.. ஒரு நாளாவது அதிகாலையில் ஸ்நானம் செய்து வீட்டில் பஞ்சாயதன பூஜை சாள்கிராம பூஜை செய்யலாமே.

ஶ்ரீ ஆண்டாள் அருலிய திருப்பாவை 30 பாட்டுக்களையும், திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி தினமும் காலையில் படிக்கலாமே. தம் தம் வழக்கப்படி


சிவ பூஜை அல்லது விஷ்ணு பூஜை தினமும் அதிகாலையில் ஸ்நானம் செய்து விட்டு செய்யவும். ஆலயங்களுக்கு செல்லவும்.அபிஷேக ஆராதனை பார்க்கவும்.

உஷ: காலே து ஸம்ப்ராப்தே போதயித்வா ஜகத்பதிம் ஸமப்யர்ச்சய பஜேத் விஷ்ணும் ஜகதாம் தோஷ சாந்தயே.

ஸூர்ய உதயத்திற்கு முன்பாக மஹாவிஷ்ணுவிற்கு அபிஷேகம் , துள்சியினால் அர்ச்சனை செய்து பயத்தம் பருப்பால் செய்த பொங்கலை

நிவேதனம் செய்து பூஜை செய்தால் அந்த் க்ராமத்திற்கும், அங்கு வஸிக்கும் மக்களுக்கும் ப்ராணிகளுக்கும் தோஷம் விலகி நன்மை உண்டாகும் என்கிறது சாஸ்த்திரம். ஆதலால் கோவில்களில் பூஜை செய்கிறார்கள்.

வீட்டில் செய்யும் தினசரி பூஜையையும் அதிகாலையில் தினமும் செய்யலாம்.காலை 6 மணிக்குள் அபிஷேகம், அலங்காரம் வரை செய்துவிட்டு
ஸூர்ய உதயத்திற்கு பிற்கு அர்ச்சனை நைவேத்யம் செய்து வருவது

வழக்கத்தில் உள்ளது. இதனால் நிவேதனத்திற்கு யாதயாமதோஷம் (பழமை) வராது. ஸூரிய உதயம் இந்த மாதத்தில் காலை 6-28 முதல் 6-40 வரை உள்ளது.

16-12-2013. தத்தாத்ரேயர் ஜயந்தி.
17-12-2013. சர்பப்பலி உத்ஸர்ஜனம்.
17-12-2013. லவண தானம். இன்று உப்பு தானம் செய்வதால் அடுத்த பிறவியில் மிக அழகாக பிறப்பீர்கள்.


18-12-2013 திருவாதிரை.
19-12-2013- பரசுராமர் ஜயந்தி.

24-12-2013. திஸ்ரேஷ்டகா
25-12-2013 அஷ்டகா
26-12-2013 அன்வஷ்டகா


31-12-2013 க்ருஷ்ண அங்காரக சதுர்தசி. யம தர்பணம் செய்ய வேண்டும்.பிறகு யமோ நிஹந்தா என்பதாகிய பத்து நாமங்களையும் சொல்லி , நீல பர்வத ஸங்காசோ என்பதாகிய வாக்கியங்களை சொல்லி நமஸ்கரிக்க வேண்டியது..


1-1-2014 ஹனுமான் ஜயந்தி; அமாவாசை.


5-1-2014 மஹா வ்யதீ பாதம்
11-1-2014. வைகுண்ட ஏகாதசி.
13-01=2014. போகி பண்டிகை.

மஹா வ்யதீ பாதம். இருபத்தேழு ந்க்ஷத்திரங்கள் இருப்பது போல் 27 யோகங்கள் உண்டு. இதில் ஒன்று வ்யதீ பாத யோகம். வருடத்திற்கு 96 தர்பணங்கள் செய்பவர்கள் ஒவ்வொரு வ்ய்தீ பாத யோகத்தன்று தர்பணம் செய்ய வேண்டும்.

மார்கழி மாத வ்யதீபாதத்திற்கு மஹா வ்யதீ பாதம் என்றும், தநுர் வ்யதீ பாதம் என்றும் அழைப்பர் .இந்த நாளில் காலை நித்ய கர்மா முடித்துவிட்டு ஒரு செம்பு (காப்பர்) தாமிர பாத்திரத்தில் நாட்டு சக்கரையை நிரப்பி அதன் மேல் தங்கம் அல்லது வெள்ளி ப்ரதிமையில் வ்யதீபாதம் ஆவாஹ்யாமி என்று ஆவாஹனம் செய்து ஸ்மராம் யஹம் வ்யதீபாதம் வீதஹவ்யாந்வயோத்பவம். ப்ரத்யங்முகம் பாடயந்தம் வேதாந் சிஷ்யாநஹர்நிசம்.

ஓம் பூ: வ்யதீபாதம் ஆவாஹயாமி; ஓம் புவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி; ஓம் ஸுவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி. ஓம் பூர்புவஸ்ஸுவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி. ஓம் நமோ வ்யதீபாதாய

என்று பூஜையும் ஜபமும் செய்யவும்.16 உபசார பூஜை செய்யவும்.ஓம் வ்யதீபாத தே நம: என்று 108 முறை ஜபிக்கவும்.சக்திக்கு தகுந்தவாறு தானம் செய்யவும்.

சந்திர க்ரஹணம், வ்யதீபாதம் போன்ற நாட்களில் செய்யும் தானம் எண்ணிலடங்கா பலனை வாரி வழங்கும்..ஏழைகளுக்கு தானம் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், கார்ய ஜயம், விரும்பிய அனைத்தும் கிட்டும் என்கிறது புராணம்.

வ்யதீபாத தினத்தில் செய்யும் ஜபம், பூஜை, தானம், ஹோமம், இவைகளுக்கு அளவற்ற பலன் உண்டு. அதிகாலையில் சங்கல்பம் செய்துகொண்டு ஸ்நானம் செய்யவும்.

5-1-2014 வ்யதீ பாத பூஜை ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் வ்யதீபாதத்தன்று இம்மாதிரி பூஜை செய்து அடுத்த மார்ழியில் முடிக்கவேண்டும்.உத்யாபன பூஜை செய்து ப்ரதிமை தானம், படுக்கை தானம் அன்ன தானம் பஞ்ச தானம் செய்ய வேண்டும். .

இவ்வாறு செய்பவர்களுக்கு நல்ல புத்ரன். சுகமான வாழ்க்கை, பிறிந்த உற்றார் உறவினர் சேர்க்கை போன்றவை ஏற்படும்.
 
pray permit me gopalan sir, to present an excerpt of sanjay subramaniam's margazhi bhajans...in tamil ofcourse, as a warmup to the coming month. thank you.

[video=youtube;8JhW_SMZWyw]http://www.youtube.com/watch?v=8JhW_SMZWyw&list=PL0298178CF902BD5B[/video]
 
அதிக மாதம்==புருஷோத்தம மாதம்.

சுமார் 32 மாதங்களுக்கு ஒரு முறை அதிக மாதம் வருகிறது. இரு அமாவாசைளுக்கு நடுவில் தமிழ் மாத பிறப்பு வரா விட்டால் அந்த மாதம் அதிக மாதம் என பெயர்படும்..

சூரியன் உதயமாகுமுன்பு முறையாக ஸ்நானம் செய்து விட்டு ஸந்தியா வந்தனம் செய்துவிட்டு , இரண்டு கை நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு
ஸுர்யனை நோக்கி நின்று கொண்டுக் கீழ் கண்ட மந்திரம் சொல்லி அர்க்கியம் விட வேண்டும். ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்
.
தேவ தேவ மஹாதேவ ப்ரளயோத்பத்தி காரக. க்ருஹாணார்க்கியம் மயாதத்தம் க்ருபாம் க்ருத்வா மமோபரி ஶ்ரீ ஸூர்ய நாராயணாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

புராண புருஷேசாந: ஸர்வலோக நிக்ருந்தன. அதி மாஸ வ்ருத ப்ரீதோக்ருஹாணார்க்யம் நமோஸ்துதே. புராண புருஷாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

ஸ்வயம்புவே நமஸ்துப்யம் ப்ரஹ்மணே அமித தேஜஸே
நமோஸ்து தே ச்ரியாநந்த தயாம் குரு மே மமோபரி ஸ்வயம்புவே நம:
இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்
யஸ்ய ஹஸ்தே கதா சக்ரே கருடோ யஸ்ய வாஹனம். சங்க: கரதலே யஸ்யே ஸ மே விஷ்ணு; ப்ரஸீதது. விஷ்ணவே நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
.
கலா காஷ்டாதி ரூபேண நிமேஷ கடிகாதி நா யோ வஞ்சயதி பூதாநி தஸ்மை காலாத்மனே நம: காலாத்மனே நம: இதமர்க்யம். இதமர்க்யம். இதமர்க்யம்.


குருக்ஷேத்ர மயோதேச: கால: பர்வத் விஜோஹரி: ப்ருத்வீ ஸம மிமம் தாநம் க்ருஹாண புருஷோத்தம புருஷோதமாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்;

மலாநாம் ச விசுத்யர்த்தம் பாப ப்ரசமநாய ச புத்ர பெளத்ராபிவ்ருத்யர்த்தம் தவ தாஸ்யாமி பாஸ்கர. பாஸ்கராய நம; இதமர்க்யம். இதமர்க்யம் இதமர்க்யம்.

என்ற ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தந்துவிட்டு ஸூர்ய மண்டலத்தில் ஶ்ரீ மஹா விஷ்ணுவை ப்ரார்தித்திக்கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அதி மாஸே து ஸம்ப்ராப்தே குட ஸர்பி: ஸமன்விதான் தத்யாதநேந மந்த்ரேண த்ரயஸ்த்ரிம்சத பூபகான் என்பதாக அதிக மாதம் எல்லா நாட்களும் தினந்தோறும் ஶ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீதிகாக

ஒரு வெங்கல பாத்ரத்தில் முப்பதுமூன்று வெல்ல அப்பங்களை வைத்து சிறிது, நெய், தக்ஷிணையுடன் யாராவது ஒரு ப்ராஹ்மணர்க்கு கீழ் கண்ட சங்கல்பம் சொல்லி தானம் செய்ய வேண்டும்.

சங்கல்பம்: மம த்ரயஸ் த்ரிம்சத் தேவதா அந்தர்யாமீ விஷ்ணு ஸ்வரூபீ ஸஹஸ்ராம்சு ப்ரீதி த்வாரா , நிகில பாப ப்ரசமன பூர்வகம் , புத்ர பெளத்ர யுத தந, தான்ய க்ஷேம ஸம்ருத்தி லோகத்வய ஸுக ஹேது: , ப்ருத்வீ தாந பல ப்ராப்த்யா

அபூபசித்ர ஸமஸங்க்ய வர்ஷ ஸஹஸ்ராவதி ஸ்வர்லோக . நிவாஸாதி கல்போக்த பல ஸித்யர்த்தம் , மல மாஸ ப்ரயுக்த –ஆஜ்ய –குட ஸர்பிர் மிச்ரித காம்ஸ்ய பாத்ரஸ்த த்ரயஸ்த்ரிம்ஸ த பூப தாநானி கரிஷ்யே. என்று ஸங்கல்பம் செய்துகொண்டு ஒரு வெங்கல பாத்ரத்தில் முப்பத்துமூன்று வெல்ல அப்பங்களையும் , சிறிது வெல்லத்தையும் , மற்றொரு கிண்ணத்தில் சிறிது நெய்யும் வைத்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி தாநம் செய்ய வேன்டும்.

விஷ்ணு ஸ்வரூபி ஸஹஸ்ராம்சு ஸர்வபாப ப்ரநாசந : அபூபான்ன ப்ரதாநேன மம பாபம் வ்யபோஹது. நாராயண ஜகத்பீஜ பாஸ்கர ப்ரதிரூபக
வ்ரதேநாநேந புத்ராம்ஸ்ச ஸம்பதம் சாபி வர்த்தய.

இமாநபூபான் காம்ஸ்ய பாத்ரஸ்தான் ஸர்பிர் குட ஹிரண்யாஜ்ய ஸஹிதான் மஹாவிஷ்ணு ஸ்வரூபிணே ப்ராம்ஹணாய துப்யமஹம் ஸம்ப்ரததே. என்று சொல்லி தாநம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மல மாதம்முழுவதும் அர்க்யம் அபூப தாநம் செய்ய வேன்டும் . மாதத்தின் கடைசி ஒரு நாளாவது அர்க்யம்,அபூப தாநம், நமஸ்காரம் செய்யலாம். அல்லது அபூப தாநம் இல்லாமலாவது அர்க்யம், நமஸ்காரம் செய்யலாம்.
புருஷார்த்த சிந்தாமணி புத்தகம் கூறுகிறது. க்ருஹே தஸ்ய ஸ்திரா லக்ஷ்மீ: யோ தத்யாத் ஸூர்ய ஸந்நிதெள தாரித்ர்யம் ந பவேத் தஸ்ய ரோக க்லேச விவர்ஜித; .
என்னும் சாஸ்திரப்படி மல மாச வ்ருதத்தை செய்பவரின் வீட்டில் மஹாலக்ஷிமி கடாக்ஷம் நிலைத்து இருக்கும். நோய், மன வருத்தம் இன்றி நீண்ட ஆயுளுடன் ஸுக வாழ்வு வாழ்வான்..
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top