P.J.
0
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி
ஸ்ரீராமபிரானை பலவித பெயர்களால் அழைப்பார்கள். பொதுவாக தெரிந்த கோசலை ராமன், தசரத ராமன், கோதண்ட ராமன், கல்யாண ராமன், ஜானகி ராமன், சீதா ராமன், ஸ்ரீராமன், ஜெயராமன் என்று பல பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்துக்காக அமைந்தவை. அவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. அவையும் அவற்றுக்கான காரணங்களும்:
சந்தான ராமன்: சூரிய வம்சத்தில் மானுடக் குழந்தையாக அவதரித்த ராமன்.
யக்ஞ ராமன்: விஸ்வாமித்திர முனிவரும் மற்றும் பல முனிவர்களும் சேர்ந்து நடத்திய வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கர்களை சம்ஹாரம் செய்து யாகங் களைக் காத்த ராமன்.
பவித்ர ராமன்: இந்திரனால் களங்கம் ஏற்பட்டு, கணவரின் சாபத்தினால் கல்லாக மாறிய அகலிகை ராமனின் திருப்பாதம் பட்டு பவித்ரமானாள். பாவப்பட்ட ரிஷி பத்தினியை புனிதவதியாக்கிய ராமன்.
உதாரண ராமன்: தந்தை தசரதன் சொல் காக்க மனைவி மற்றும் தம்பி லட்சுமணனோடு கானகம் புறப்பட்டு, மானுடர்க்கெல்லாம் ஓர் உதாரணமாகத் திகழ்ந்த ராமன்.
பிராதருவத்ஸல ராமன்: கானகம் தேடி வந்த தம்பி பரதனின் வேண்டுகோளின்படி, தன் பாதுகையை அளித்த, தன்னை காட்டுக்கு விரட்டிய சிற்றன்னையின் மகனாகவே இருந்தாலும் அந்த பரதனுக்குத் தன் பாசத்தை முழுமையாகக் காட்டிய ராமன்.
பராக்கிரம ராமன்: பஞ்சவடிபர்ணசாலையில் தங்கியிருந்த போது, தம்மை எதிர்த்த கரன், தூஷணன், திரிசரன் ஆகிய அரக்கர்களையும் அவர்களது அசுரப்படைகளையும் மிகுந்த பராக்கிரமத்தோடு, அடியோடு அழித்த ராமன்.
ஆனந்த ராமன்: மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தன் வருகைக்காக பன்னிரெண்டு வருடங்கள் காத்திருந்து தவமிருந்த சபரிக்கு அனுக்கிரகம் புரிந்து பெருவாழ்வையும் அவளுக்குப் பேரானந்தத் தையும் அளித்த ராமன்.
மோட்சபல பிரத ராமன்: சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப ராமபிரான் வாலியைக் கொல்ல, வாலி மார்பில் பாய்ந்த அம்பில் பொறித்துள்ள ‘ராம’ எனும் மந்திரத்தை மனத்தால் நினைத்து, வாக்கால் உச்சரித்து வாலிக்கு, ராம நாமத்தாலேயே மோட்சம் அளித்த ராமன்.
தாரக நாம ராமன்: ராவணனால் இழந்த இறக்கைகளை, ஜடாயுவின் அண்ணனான சம்பாதி, ராமநாம மகிமையில் மீண்டும் பெற்றார்; சீதை இருக்கும் இடத்தை வானர வீரர்களுக்குத் தெரிவித்தார். தன் நாமத்தை தாரக மந்திரமாக உச்சரித்த எல்லோரும் உய்யும் மார்க்கத்தை அருளிய ராமன்.
துக்கநாச ராமன்: அசோகவனத்தில் துக்கத்தில் துவண்டு கிடந்த சீதையிடம், ராமன் அளித்து அனுப்பிய கணையாழியை சமர்ப்பிக்க, அதைக் கண்ட சீதையின் துக்கமெல்லாம் தூசாகப் பறந்து போயிற்று. இவ்வாறு சீதைக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே துக்கம் போக்கும் ராமன்.
சரணாகத ரட்சக ராமன்: தன்னை சரணடைந்த விபீஷணன், தன் எதிரி ராவணனின் தம்பியாக இருந்தாலும் தன்னை நம்பி வந்தடைந்ததால் அவனை அரவணைத்துக் கொண்டு, ஆதரித்த ராமன்.
சேது ராமன்: வானரவீரர்கள் உதவியுடன் சேது சமுத்திரத்தைக் கடக்க பாலம் அமைத்து அதன் வழியாக லங்காபுரியை அடைந்த ராமன்.
கருணாகர ராமன்: நிராயுதபாணியாக நின்ற ராவணனை, நல்ல வாய்ப்பாகக் கருதி உடனே கொல்லாமல், இன்று போய் மறுநாள் போருக்கு வருமாறு சொன்ன கருணை வள்ளலான ராமன்.
- Aanmeega palan Magazine, aanmeega palan tamil magazine, Aanmeega palan eMagazine, Aanmeega palan e-magazine

டி.ஆர்.பரிமளரங்கன்