• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வாழும் உயிரும் சாகும் உயிரும்...

Status
Not open for further replies.

shridisai

You Are That!
வாழும் உயிரும் சாகும் உயிரும்...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”.

எண்ணென்ப: எண்ணக்கூடிய தகுதி படைத்தோரை சதா
(இடைவிடாது, Pure Concentration) எண்ணிய படியே இருத்தல்.

யார் அத்தகுதி படைத்தோர்?
"யார் அறிவாகிய ஒளியை தூண்டுகிறாரோ
அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக"
என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள். இத்தகைய அறிவை
தூண்டுபவரை சுட்டிக்காண்பித்தே எண்ணென்ப என்கிறார் வள்ளுவர்

ஏனை எழுத்தென்ப: என்பதிற்கு யாரால் இவ்வறிவு தூண்டப்படுகிறதோ
அத்தகையவரின் நாமமே ஏனைய எல்லா எழுத்திற்க்கும்
தலையாய எழுத்தாகும் என்று பொருள்.

இவ்விரண்டும் கண்ணென்ப : வள்ளுவர் ஏன் எண்ணையும்,
எழுத்தையும் கண்களோடு ஒப்பிடுகிறார்? எவ்வாறு கண்கள் இரண்டாயினும்
பார்வை ஒன்றாய் உள்ளதோ அவ்வாறே
எண்ணும் எழுத்தும், அதாவது நாமமும் ரூபமும் பிரிக்கவே
முடியாத தகுதியில் ஒன்றாக்கப்பட வேண்டும்
என்பதை விளக்கவே கண்களை உவமானமாக்கிறார். இதே கருத்தில் அவ்வை பிராட்டியும்
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
என்கிறார்.

எவ்வாறு எண்ணையும்,எழுத்தையும் ஒன்றாக்குவது?
ஷரிடி சாய்பாபா தம் அருளுரையுள் இவ்வாறு கூறுகிறார்.
"என்னுடைய உருவமற்ற தகுதியையை அல்லும் பகலும்
இடைவிடாது தியானிப்பீர்களாக. அவ்வாறு தியானித்தால்
நாளடைவில் தியானம்,தியானம் புரிபவர் என்ற வேறுபாடு
மறைந்து என்னுடன் ஒன்றாக ஐக்கியமாவீர்கள் என்று”.

உருவமற்ற தகுதியை எவ்வாறு தியானிப்பது?
மானிடப்பிறவி அனைத்துள்ளும் மறைபொருளாய்
பொதிந்து இருக்கும் தூய அறிவே ஸ்ரீ ஷ்ரிடி சாய்பாபாவின்
உருவமற்ற தகுதியாகும். இத்தூய அறிவை இடைவிடாது
அவரின் நாமத்தோடு இணைந்தே தியானிக்கப்படவேண்டும்.
Brihadaranyaka Upanishad ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Pure self consists of Mind,Speech,Breath
அவ்வாறு முயற்சிப்பின் !!!
அறிவு = உருவமற்ற தகுதி=Mind
அறியப்படுபொருள்= ஸ்ரீ ஷ்ரிடி சாய்பாபா(நாமம்)=Continuous Speech
அறிபவன்= நான் என்னும் தனி வியக்தி=In breath and Out breath
என்னும் மூன்று தகுதிகளும் ஒன்றாகி தூய அறிவின்(Pure Self)
சொரூபமாய் விளங்கிகொண்டிருக்கும் ஸ்ரீ ஷ்ரிடி சாய்பாபாவோடு
இரண்டற கலக்கலாம்.

வாழும் உயிர்க்கு: இங்கு வள்ளுவர் வாழும் உயிர்க்கு என்று
சொல்வது மனிதர்கள் இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையை பற்றி அல்ல.
There is Life after Death என்பது பைபிள் வாசகம்.
நித்திய ஜீவர்களாக வாழ, வாழ்ந்து கொண்டிருக்கும்
உயிர்களையே வாழும் உயிர்களாக இங்கு குறிப்பிடுகிறார்.

மேலும் வள்ளுவர் இங்கு Present Continuous Tense ஆக
வாழும் உயிர்க்கு என்னும் நேர்மறை சொல்லை
ஏன் பயன்படுத்த வேண்டும் ? எதிர்மறை சொல்லாக
சாகும் உயிர்கள் இருப்பதை நமக்கு அறிவிக்கவே !!!


எது சாகும் உயிர்கள் ?
இப்பூவுலகில் உள்ள 84 லக்ஷம் ஜீவராசிகளில் மனிதகுலத்திற்கு
மட்டுமே இத்தூய அறிவை அறியும் ஆற்றல் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவேதான் அவ்வையார்அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது"என்கிறார்.அவ்வாறு கிடைக்கப்பெற்ற இவ்வரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்ட உயிர்கள் இம்மெய்யை(மனித உடம்பை) விடுத்து மற்ற 84 லக்ஷம் ஜீவராசிகளில் ஏதோ ஒன்றாய் பிறந்து தாம் நழுவ விட்ட (மீண்டும் திரும்பி பெறவே முடியாத சந்தர்ப்பத்தை) எண்ணி எண்ணி,நொந்து கடலில் அகப்பட்ட கட்டையாய் சாகும் உயிர்களாக இப்பூவுலகில் உலா வந்து கொண்டிருப்பதை வள்ளுவர் தம் ஞானதிருஷ்டியில் கண்டதையே நமக்கு குறளாக எச்சரித்துள்ளார்


Sairam
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top