எங்களது உறவினர் பையன் அமெரிக்காவில் இருப்பவன் தன் தகப்பனார் திவசத்திற்கு நிமிந்த்ரத்துக்கு ஆட்கள் இல்லாத காரணத்தால் (சந்தியாவந்தனம் முறையாகச் செய்பவர்தான் என்பதால்), தகப்பனாரில்லாத தன் நண்பர்களை உட்கார வைக்கலாமா எனக் கேட்கிறான். ஆனால் அவர் நண்பர்களும், தகப்பனார் திவசத்தை விடாமல் செய்யும் அவரை ஊக்குவிக்க தான் நிமிந்தரத்துக்கு உட்காரத் தயார் என்றாலும், நண்பரின் மாமனார் அது சரியில்லை என்கிறார். யாரேனும் விளக்கம் தரலாமே.