• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீரங்கம்,பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம்

அரங்கருக்கு வருடாவருடம்
ஆனி மாதம்,ஜ்யேஷ்டா (கேட்டை)நக்ஷத்திரத்தன்று ,
விசேஷமாகதிருமஞ்சனம் (அபிஷேகம்)நடைபெறும் .
"ஜேஷ்டா" என்ற ஸம்ஸ்க்ருத சொல் 'பெரிய' என்ற பொருள்உரைக்கும்.
ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் (கேட்டை )என்றால் ,'பெரிய நக்ஷத்திரம்'என்றும் பொருள் கொள்ளலாம்.

கங்கையிற் புனிதமாய, காவிரி:
⚘??⚘??⚘??
பொதுவாக அரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும்,
"பெரிய பெருமாளான "மூலவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு ,இந்த ஆனி மாதத்தில்,"பெரிய நட்சத்திர த்தில்"(ஜ்யேஷ்டாநக்ஷத்திரத்தில்),ஸ்ரீரங்கத்தில் இரண்டு பிரிவாக,தெற்கிலும்,வடக்கிலும் ,"பெரிய மாலை"போல , தவழ்ந்து ஓடும் ,தமிழகத்தின்
புண்ணியமான ,புராதனம் மிக்க ,"பெரிய நதியான " தென் திருக்காவிரியில், இருந்து,"பெரிய கோபுரமான" ராஜ கோபுரத்தின் வழியே , தீர்த்தம் கொண்டு வரப்பட்டு
,விசேஷமாக ,"பெரிய கோயிலான"அரங்கர் ஆலயத்தினில் உள்ளே எழுந்தருளியிருக்கும், பெருமாளான ,அழகிய மணவாளருக்கும் ,(நம்பெருமாளுக்கு) ஸ்ரீதேவி,
மற்றும் பூதேவி தாயாருக்கும்
பெரிய அபிஷேகம் செய்யப்படும்.

பெரிய நட்சத்திரத்தில் ,பெரிய நதியில் இருந்து ,பெரிய கோபுரத்தின் வழியே ,பெரிய அளவில் (29 குடங்களில்
1 தங்கம்+28 வெள்ளி),பெரிய கோயிலில் உள்ள பெரிய பெருமாளுக்கு ,பெரிய அளவில் ,வெகு விமரிசை யாகநடைபெறும் ,திருமஞ்சனம் என்பதாலேயே ,இதற்கு "பெரிய திருமஞ்சனம்" என்று அழைக்கிறார்கள்.

(வருடத்தில் பதினோரு மாதங்கள் ,(ஐப்பசி தவிர ) ஸ்ரீ ரங்கத்தின் வடக்கு பகுதியில் ஓடும் ,வட திருக்காவிரியில் இருந்து ,யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும் .ஆனால் இந்தப் பெரிய திருமஞ்சன த்திற்கு மட்டும்வழக்கம்போல், கொள்ளிடக் கரையிலிருந்து தீர்த்தம் எடுக்காமல், ஸ்ரீரங்கத்தின் தெற்குப் பகுதியில்-அம்மாமண்டப த்தில் காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்.(ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக,காவிரியிலும்,கொள்ளிடத்திலும் தண்ணீரே இல்லாததால்(??!!) கொள்ளிடத்தில்(வட திருக்காவேரி), இதற்காக ஒரு புதிய கிணறு தோண்டி, அதிலிருந்து தீர்த்தம் எடுக்கப் பட்டது.)நமது அபச்சாரங் களைப் பொறுத்து ஷமிக்குமாறும்,நல்ல மழை பெய்ய அருளுமாறும், பெரியபெருமாளை வேண்டுவோம்

தேவ மரியாதைகளுடன் வரும் தீர்த்தம்:
????????
"ஆண்டாள்"யானையின் மீது தங்கக்குடத்திலும்,அர்ச்சகர்கள், வெள்ளிக் குடங்களிலும், காவிரித் தீர்த்தத்தை வேத கோஷங்கள், பாசுரங்கள் பாடி பெருமாளின்திருமஞ்சனத்துக்காக, ஊர்வலமாக சித்திரை வீதிகள் வழியாக எடுத்து வருவார்கள்.பெரிய
பெருமாளுக்கு பெரிய அபிஷேகம் ஆயிற்றே.
எனவே மங்கள இசையும் பெரிதாக 10 தவில்கள்,10 நாதஸ்வரங்கள்.

அரவணையில் அறிதுயில் கொள்ளும்,பெரியபெருமாளுக்கு 'புனுகு சட்டம்' அபிஷேகம்:
?????????
மூலவரான பெரிய பெருமாளுக்கு,"தைலக்காப்பு".அகில்கட்டை,சந்தனக்கட்டை
சாம்பிராணி ,வெட்டிவேர் ,நல்லெண்ணெய் மற்றும் புனுகு ,
பச்சைகற்பூரம்கொண்டு ,மண்பாத்திரத்தில் ,விறகு அடுப்பில் ,ஒரு சோதனைக்
குழாய் போன்ற அமைப்பில் , பானைகளைக் கொண்டு பரிசுத்தமாக காய்ச்சிய தைலம்,பாரம்பரிய முறையில் காய்ச்சப்பட்டு, தயாரிக்கப் படுகிறது இந்த பெரிய அபிஷேகத்தன்றுமட்டுமே ,
பெரிய பெருமாளுக்கு திருமுடி முதல் திருவடி வரை
(ஆதிஷேசனுக்கும்), சாற்றப்படும்....இதை "புனுகு சட்டம் "என்றும் சொல்லுவர்.

மூலவர் திருமேனி கல்லினாலோ.
அல்லது மரத்தினாலோ(தாது) செய்யப்பட்ட விக்ரஹம் அல்ல.முழுக்க முழுக்க "சுதையினால் " அதாவது
,சாளக்ராமங்கள்மற்றும்சுண்ணாம்பு ,இன்னும் பிற படிமங்களைக் கொண்ட ,(சுண்ணாம்புக்காரை)கலவைகளால் ஆன திருமேனி . இதனால், மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யும் வழக்கம் இல்லை.
திருமேனி மீது வஸ்திரம், திருவாபரணங்கள் மட்டுமே சாத்தப்படும். பூ, மாலைகள் சாத்தப்படுவதில்லை.

பிரம்மனைபடைத்த ,பிரம்மா
முதல்நாரதர் ,சூரியன் ,அவரின் குலத்தின் வழி வந்த இக்ஷுவாகு,தசரதன்,அவர் மகன் ராமர் அவர் பின்பு விபீஷணன் மற்றும் பன்னிரு ஆழ்வார்களாலும் ,பலப்பல ஆச்சார்யர்கள் முதலானோர்களால் பூஜிக்கப்பட்ட,இன்னும் பல கோடி ஆண்டுகள் பூஜிக்கப்போகின்ற அழிவில்லாத ,அநாதியான,
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவரான ,"பெரிய பெருமாளான " மூலவர் ஸ்ரீ ரங்கநாதரின் திருமேனியை பாதுகாக்கும்பொருட்டு , இந்த தைலமானது ,ஸ்ரீ ரங்கநாதரி ன் திருமேனியில் உள்ள , வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் களைந்து சாற்றப்படுகிறது.

இந்த "தைலக்காப்பு " சாற்றப் படுவதால் தான்,நாளை முதல் ,ஒரு மண்டல காலத்திற்கு அரங்கரின் திருமேனி திருவடி முதல் திருக்கண்டம்(கழுத்து) வரை "திரையிடப்பட்டு ,திருமுக தரிசனம் மட்டும் சேவையாகும்

ஒரு மண்டல காலத்தில் தைலக் காப்பு உலர்ந்த பின் பெருமாளுக்கு வஸ்திரங்கள் மற்றும்ஆபரணங்கள்அணிவித்து மூலவர் ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிமுதல் திருமுடி வரை ,மீண்டும் சேவை ஆகும் ..

உற்சவர் நம்பெருமாளுக்கு, பரிபூரண அபிஷேகம்:
????????
அதைப்போலவே,உற்சவரான ,
நம்பெருமாளுக்கும் ,உபயநாச்சிமார்களான ,ஸ்ரீ தேவிமற்றும்
பூ தேவி தாயார்களுக்கும்,
அவர்களின் திருமேனியை காக்கும் பொருட்டு ,அரங்கரின் முதல் பிரகாரமான "திருவெண்ணாழி",
(திரு+வெண்+ஆழி="திருவெண்ணாழி",திரு +பால்+கடல் =அதாவதுதிருப்பாற்கடலில்)
திருச்சுற்றில்,ஏழு திரையிட ப்பட்டு ,நம்பெருமாள் மற்றும் உபயநாச்சிமார்களுக்கு,அவர்களின் திருமேனியின் மேல், வருடம்முழுவதும் ,சாற்றப்பட்டு இருக்கும் ,தங்ககவசத்தினைக் களைந்து ,நேரிடையாக ,
திருமேனியில் ,பால்,தயிர்,பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் செய்விக்கப் படும்.இந்ததிருமஞ்சனத்தை ,அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள்சேவிக்கமுடியாது.இது"பெரிய ஏகாந்த திருமஞ்சனம் "என்று சொல்லப்படுகிறது .

நம்பெருமாள் திருமேனியில் சாற்றப்பட்டு உள்ள ,தங்க கவசத்தின்உள்ளே ,
பச்சைக் கற்பூரம் ஒரு பாதுகாப்பு கவசம் போல், மெல்லியதுணிகளைக்கொண்டு,திருமேனிமுழுவதும் சாற்றப் பட்டு இருக்கும் .அந்த பச்சைக் கற்பூரக் கவசமானது, உற்சவரின்திருமேனியை
ஆண்டுமுழுவதும் ,பாதுகாக்கும் பொருட்டு ,சாற்றப் படுகிறது

பொதுவாக பச்சைக்கற்பூரம் கொண்டு, பாதுகாக்கும் எந்த பொருட்களும் ,நீண்ட நாட்கள்பாதுகாப்பாக,இருக்கும் .அதோடு புழு ,பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் வர விடாமல்தடுக்கும்.இதற்காகவே ,நம்பெருமாளுக்கும் ,உபயநாச்சிமார்களுக்கும்,இத்தகைய சிறப்பு மிக்க ,பச்சைக் கற்பூரம்கொண்டு , ஒருகவசமும்அதன்மீதே,தங்ககவசமும் ,ஆபரணங்களும் ,வைர ,வைடூரிய ,மாணிக்கங்களும் ,பூமாலைகளும் சாற்றப் படுகின்றது.

இப்படிப்பட்ட ,தைலக்காப்பும்,
பச்சைக் கற்பூறக் கவசமும் "நம்முன்னோர்களின் கண்டுபிடிப்புகள்",என்பதில்,
நாம் பெருமை கொள்ள வேண்டும் .இந்த பாதுகாப்பு முறைகள் ,காலங்காலமாக அழியாதது..அரியது.மெய்ஞ்ஞானம் கண்ட விஞ்ஞான முறை.இந்தப் பாதுகாப்பு முறைகளை ,இன்றும், இன்னும் வரப்போகும் காலங்களிலும் தொடரச் செய்வது மட்டும் அல்ல,அதை சரியாகச் செய்வதும் நமது கடமையாகும்.

பெரிய கோவிலில்,இந்த "பெரிய திருமஞ்சனம் "தவிர மற்ற எந்தக்காலத்திலும்,
நம்பெருமாளுக்கோ,உபய நாச்சிமார்களுக்கோ ,பால்
,தயிர் ,பஞ்சாமிர்தம் கொண்டு (திருமஞ்சனம்( அபிஷேகம்)
செய்வது கிடையாது . வருடம் முழுவதும்நடக்கும்
,திருமஞ்சனங்களில் ,காவிரித்தீர்த்தத்தில் ,(வெந்நீர் கூடஉண்டு ) ,சந்தனம்
மற்றும் குங்குமப்பூகலந்தே
,திருமஞ்சனம் நடக்கும் . இன்றைய திருமஞ்சனத்துக்கு பக்தர்களும்பால்,தயிர்,இளநீர்,பன்னீர் போன்ற திரவியங்க ளைச் சமர்ப்பிக்கிறார்கள்.

பெரிய திருப்பாவாடை உற்சவம்:
???????????
ஜேஷ்டாபிஷேகத்துக்கு அடுத்த நாள் ‘பெரிய திருப்பாவாடைத் தளிகை’ பெரிய பெருமாள், சந்நிதி வாசலில் சமர்ப்பிப்பார்கள். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளைகள்,வாழைப்பழம்,மாங்காய், தேங்காய், நெய் ஆகியவற்றை அதிகமாகக் கலந்திருப்பார்கள். அத்துடன் சிறிதளவு உப்பும்சேர்ப்பார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் மற்றும் நைவேத்தியம் செய்த பின், அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

இதற்கு "பெரிய திருப்பா வாடை "என்று பெயர்.பெரிய திருப்பாவாடைத் தளிகை. நாள்தோறும் பெருமாளுக்கு நடைபெறும் நிவேதனங்களில், ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால், அதற்குப்பிராயச்சித்தமாக, இந்தப் "பெரிய தளிகை" அமுது செய்விக்கப்படுவதாக ஐதீகம்!.

சந்தனக்காப்பு:
???????
இன்று ஒருநாள் மட்டுமே "பெரியதிருமஞ்சனத்தன்று"
மட்டுமே ,மூலஸ்தானத்தில்,
உள்ள சுவர்களில் ,சந்தனம் பூசப்படும் ..வருடம் முழுவதும் செய்யப்படும் ,ஆரத்தி ,வருடம் முழுவதும்அணையாமல் ,சுடர்கின்ற தீபஒளியின் ,படிமங்கள் அரங்கனின்மூலஸ்தானத்தில் ,படர்ந்துஇருக்கும்.,அதை இன்று ஒருநாள் மட்டுமே சுத்தம் செய்து ,சுவர்களின் சந்தனத்தால் ,பூச்சு பூசப்படும்.

ஆபரண அணிகல அணிவரிசை:
⛤⛥⛦⛧⛤⛥⛦⛧
அதோடு மட்டும் அல்லாமல். நம்பெருமாள்திருமேனியில் வருடம் முழுவதும் சாற்றப்பட்டு இருந்த ,தங்ககவசங்களும் வைர,வைடூரிய ,மாணிக்கமகுடங்களும்.திருப்பாதுகைகளும்
,இந்தப் 'பெரியதிருமஞ்சன த்தின்'போதுமட்டுமே ,பொதுமக்களின்முன்பு ,பார்வைக்கு வைக்கப் பட்டு ,தங்க நகைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி துவங்கும்-யாகசாலைக்கு முன்புள்ள தொண்டைமான் மேட்டில்.ஆனால் பாதுகாப்பு கருதி,இப்போது பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி யில்லை.கோவில் நிர்வாகத்தார்,ஸ்தலத்தார்கள்.பக்தர்களின் சில பிரதிநிதிகள் முன்னிலையில் இவை கணக்கெடுக்கப்பட்டு பரிசுத்தம் செய்வதற்காக பொற்கொல்லர்களிடம தரப்படுகின்றன.அவர்கள் அங்கேயே அவற்றைச் சுத்தப்படுத்தி,மாலை 4.30 மணியளவில்,மீண்டும் இவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கிறார்கள்.அவை, எடைகள் சரிபார்க்கப்பட்டு,
மீண்டும் அரங்கரின் திருமேனியிலும்,உபய நாச்சிமார்களின் திருமேனியிலும் சாற்றப்படும்.

பரதாழ்வார்,பெற்ற பேறு நாமும் பெறலாம்:
?????????
பரதாழ்வார் ஸ்ரீராமரின் பாதுகைகளைத் தன் சிரசில் வைத்து,எடுத்து வந்து,ராஜ சிம்மாசனத்தில் வைத்து வணங்கினார்.இன்று நம்பெருமாள் தம்,"ஆசன பத்மத்திலே அழுந்திய திருவடி நிலைகளை"-தங்கத் திருவடிக் கவசங்களை -அற்புதமாக பெருவிரலுக்கும்,மற்ற விரல்களுக்கும்இடையே துருத்திக் கொண்டிருக்கும் பாதுகைகளை,பக்தர்களின் சிரசில் வைத்து அருள் பாலிக்கிறார்.பொன்னும்,மணியும்,பவளமும்,முத்தும் பொறித்த அபயஹஸ்த -வைத்த அஞ்சல் என்ற கை-அங்கிலும் நம் சிரசில் சாத்தப்படுகிறது.(நம்பெருமாளின் நகைகளில் பாதுகைகளையும்,அபய ஹஸ்த அங்கிலையும் மட்டும் வெளியே கொணர்ந்து தொண்டைமான் மேட்டில் அமர்ந்து சாதிப்பார்கள்)

"திருப்பொலிந்த சேவடி என்
சென்னியின் மேல் வைத்தாய்"என்னும் பெரியாழ்வார் திருமொழியை இன்று கண்ணார,நெஞ்சார அனுபவிக்கலாம்.

இரவு 10.30 மணிக்கு மூலவர் பெரிய பெருமாளுக்கு, மங்களஹாராத்தி நடக்கிறது. இன்றும்,நாளை மாலை 4.30 வரை மூலவர்மற்றும் உற்சவர் சேவை கிடையாது.

பெரியபிராட்டியார் ஜேஷ்டாபிஷேகம்:
???????
பெரியபெருமாளுக்குப் போலவே,பெரியபிராட்டியாருக்கும் இம்மாதம் 19,20தேதி களில்,ஜேஷ்டாபிஷேகம்,
பெரியதிருப்பாவாடை நடைபெறுகிறது.

சக்கரத்தாழ்வாருக்கும்,காட்டழகிய சிங்கருக்கும் இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

(-அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

7659
 

Latest posts

Latest ads

Back
Top