• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீரங்க மஹத்வம் !

சொல்லும் சுடலும் உலகமே சொல்லும், அல்லும் பகலும் அணி திருவரங்கம் என்ன, நல்லோர் என்று சொல்லும் பெரியவர் திருவடியே சேர்ந்தேன் நான், திருவடியில்

ஏழு மதிள் அரங்கத்தம்மான், மச்சோடு மாளிகை மதிள் அரங்கருக்கு,

அத்தர், சித்தர், பக்தர் வாழும், அந்த நீல அரங்கர், ஏல நீல அரங்கர், தேனார் திருவரங்கம், தேனே திருவரங்கம்,

மண்டலத்தை மதிள் சூழ்ந்த ரங்கம் ஆங்காரம் கெய்யாத, அமுதென்ன தென்னரங்கம், ஹரி ஹரி பெரிய கோவில், அணி திருவரங்கம் கோயில், சொல்லுவார் சொல்லும் கோயில், தூய்மதி உறையாத கோயில், மெல்லியார் உறையும் கோவில், வேந்தரடி பணியும் கோயில், அல்லியார் போற்றும் கோயில், ஆண்டாள் அரவணைமேல் அமரும் கோயில், காதத்தே மணி ஓசை கேட்கும் கோயில்,

கேட்டதே இரண்டு செவியும் களிக்கும் கோயில், தூரத்தே திருச்சின்னம் தோற்றும் கோயில், வேதத்தால் பெரிய கோயில், விபீஷணர் வணங்கும் கோயில், ஆதி பெருமாள் என்று அனைவருக்கும் பெரிய கோயில் தானே!

ஹரி, ஹரி பெரிய கோயில். அம்புஜதத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில், தோராத தனி வீரன் தொழுத கோயில், துணையாம் விபீஷணற்கு துணையான கோயில், சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோயில்,

செழுமறையின் முதலெழுத்தை சேர்ந்த கோயில், தீராத வினையெல்லாம் தீர்க்கும் கோயில், திருவரங்கம் பெரிய கோயிலிதுதானே! ப்ரம்மாவும் பெறும் தவத்தால் பெற்ற கோயில், பெற்று வைத்து பிள்ளையவர் பெராத கோயில், அயன் வந்து அறுபதாயிரம் பேரோடு அர்ச்சித்த கோயில், பலவினைகள் தீர்த்த கோயில், பரிதாபம் தீர்த்த கோயில்,

திருவரங்கம் பெரிய கோயில் என திகழும் கோயிலிதுதானே!

ஸப்த ப்ராகாரமும், சந்நிதியும் கண்டேன்.

ஸர்வேஸ்வரன் திருவடிகளை சாஷ்டாங்கமாக சேவிக்க கண்டேன்.

இருபுறமும் காவேரி இசைந்துவர கண்டேன்.

திருமஞ்சன காவேரி சேவிக்கவே கண்டேன்.

ஆயனார் கோயில் அடி மதிலை கண்டேன். திருகோயில் ஆயனார் திருவழகை கண்டேன். அடையவளைஞ்சான் அடிமதிலை கண்டேன். ஆண்டாள் சந்நதி அதிசயம் கண்டேன். தேர் கண்டேன்.

சித்திரை வீதி கண்டேன். உத்தர வீதி கண்டேன். நாடு கண்டேன். நகரம் கண்டேன்.

நாலுகால் மண்டபத்தில் திருவந்திப்பு காப்பு அழகை கண்டேன். ஆனையேத்தி மண்டபமும், ஆண்டாளுடைய சேவை அழகையும், அரங்கனுடைய சேவை அழகையும் கண்டேன்.

தொண்டரடிபொடி ஆழ்வாரை சேரவே சேவித்தேன்.

கூரத்தாழ்வாரை கூடவே சேவித்தேன். நாதமுனி ஆழ்வாரை நன்றாகவே சேவித்தேன். ஆளவந்தாரை அனுதினமும் சேவித்தேன். சூடிக்கொடுத்த ஆண்டாள் திருவழகை சேவித்தேன்.

பெரிய ஆழ்வாரை பிரியாமல் சேவித்தேன். கற்கருடக்கம்பத்தை கண்குளிரசேவித்தேன். திருப்பானார் ஆழ்வார் திருவழகை சேவித்தேன். சக்கரத்தாழ்வாரை சரணம் என்று சேவித்தேன். உக்ர நரஸிம் ஹரை உகந்து சேவித்தேன். கோதண்ட ராமரை கூடவே சேவித்தேன். குலசேகர ஆழ்வாரை கூடவே சேவித்தேன். சீதா பிராட்டியார் திருவழகை சேவித்தேன்.

பிள்ளைலோகாச்சாரியாரை பிரியாமல் சேவித்தேன். பார்த்தசாரதியை பணிந்து நான் சேவித்தேன். பாஷ்யகாரரை பணிந்து நான் சேவித்தேன். திருகச்சி நம்பியின் திருவழகை சேவித்தேன்.

நம்மாழ்வாரை நன்றாகவே சேவித்தேன். மதுரகவி ஆழ்வாரை வணங்கி நான் சேவித்தேன்.திருமங்கை ஆழ்வார் திருவழகை சேவித்தேன். கொட்டார நாச்சியாரை கூடவே நான் சேவித்தேன். மேல பட்டாபிராமரை அடி பணிந்து நான் சேவித்தேன். பொய்கை முனி, பூதத்தாழ்வர், பேயாழ்வார் பிரியாமலே சேவித்தேன்.

தீர்த்தங்கரை வாசுதேவர் திருவழகை சேவித்தேன். தந்வந்திரியை கூடவே சேவித்தேன். ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ நீளாதேவி, பெரிய பிராட்டியாரை பிரியாமல் சேவித்தேன்.

தசாவதாரரின் திருவழகை சேவித்தேன். திருமங்கை மன்னன் திருவழகை சேவித்தேன். தூப்புல் ஆசாரியர் திருவடியை அடி பணிந்து சேவித்தேன். ஹயக்ரீவர் வந்நிதியை அடி பணிந்து சேவித்தேன். மேட்டழகிய சிங்கரை முன்பாக சேவித்தேன். கண்ணன் திருவடிகளை கண் குளிர சேவித்தேன்.

வாசுதேவ பெருமாளை வணங்கி சேவித்தேன். ஐந்து குழி மூணுவாசல் அதிசயமும் கண்டேன். புன்னாக விருக்ஷத்தின் கீழ் வேதவ்யாசரையும், வேணபடியும் சேவித்தேன். கோதண்டராமரை கூடவே சேவித்தேன்.

சீதாபிராட்டியார் திருவழகை சேவித்தேன். பரமபத நாதரை பக்தியுடன் நான் சேவித்தேன். அலங்கார ராமரை அழகாக சேவித்தேன்.காட்டழகிய சிங்கரை கண்குளிர சேவித்தேன்.லக்ஷ்மிதேவியை நன்றாக சேவித்தேன். திருமழிசை ஆழ்வாரை சேவித்தேன்.

கருடாழ்வாரை கிட்ட நின்று சேவித்தேன். ஆழ்வார் அனைவரையும் அடி பணிந்து சேவித்தேன். அஞ்சனாதேவியின் புத்திரரையும் அடி பணிந்து சேவித்தேன்.

சீனிவாசன் சந்நதியில் பெருமாளை நன்றாக சேவித்தேன். பூவராஹ பெருமாள் பெருமையெல்லாம சேவித்தேன். கமலவல்லி தாயாரை கண் குளிர சேவித்தேன். விரஜா நதியை வேணபடி சேவித்தேன். பரம பதவாசலை பக்தியுடன் சேவித்தேன்.

திருநாரயணபுரம் செல்லைபிள்ளையையும் சேவித்தேன். மடப்பிள்ளை நாச்சியாரை மகிழ்ந்து நான் சேவித்தேன்.

பெரிய பெருமாள் திருவடிகளே சரணம். பொற்குடகம்பத்தை பொருந்தி நான் சேவித்தான். வெங்கல வாசற்படியை வேணும்படி சேவித்தேன்.

கருகூல நாச்சியரை கண்குளிர சேவித்தேன். விமானசேவையை வேணுபடி சேவித்தேன். செங்கமல நாச்சியாரின் திருவழகை சேவித்தேன். துலுக்க பிராட்டியாரை சேரவே சேவித்தேன். சேரவல்லி தாயாரை சேரவே சேவித்தேன். கிளி மண்டபத்தை கிட்ட வந்து சேவித்தேன். சேனை முதலியாரை சேரவே சேவித்தேன்.பரவாசுதேவரை பக்தியுடன் சேவித்தேன். கண்ணன் திருவடியை கண்டு சேவித்தேன்.

ஸ்ரீனிவாசன் திருவுருவத்தை கண்டு நான் சேவித்தேன். அர்ஜுனமண்டபத்தை அழகாகவே சேவித்தேன். சந்தன மண்டபத்தை சதுராகவே சேவித்தேன்.ஜய,விஜயாள் இருபுறமும் சென்று நான் சேவித்தேன். 108-பெருமாள் திருவடிகளே சரணம். பெரிய பெருமாளை பிரியாமல் சேவித்தேன். கஸ்தூரி ரங்கனாரை கண்குளிர சேவித்தேன். அண்டை நாச்சியாரை அழகாக சேவித்தேன்.

பக்கத்து நாச்சியாரைபாங்காக சேவித்தேன். சின்ன பெருமாள் செல்வரை சேவித்தேன். திருவரங்கமாளிகையாரை சென்று நான் சேவித்தேன். பாம்பின்மேல் பள்ளிகொண்டிருக்கும் பரிமள ரங்கரை சேவித்தேன்.கருமுகிலார் அரவவணையின் மேல் கண் வளர கண்டேன். திரு கண்டேன். பொன்மேனி கண்டேன். திருமதிலும் மணி மரமும் கண்டேன்.

திருவடிமேல் வளரும் சிலம்பையும் கண்டேன். பீதாம்பரமும், பிராட்டி திருமார்பில், மார்கண்ட பூணலும், மதிநிறைந்த ஆபரணமும், கார்முகிலார் வண்ணனை கண்டாயோ நெஞ்சமே, கஸ்தூரி ரெங்கனை கண்டாயோ நெஞ்சமே, அஞ்சனை வண்ணனை அடிபணிந்து கண்டீரோ, பெருமாள் மஹத்துவததையும், வைரகடுக்கனும், பெருமாள் பிராட்டியார் அழகன்னோ! பார் உலகம் ஆண்ட பூங்கிளியை தோற்றுமே பார்வை அழகன்னோ!

பாருலகம் ஆண்டுவந்த ஆண்மை உண்மை அருள் படைத்த பார்வை அன்னோ! தூண்டாத மணிவிளக்கை சுடலெரித்த பார்வை அன்னோ1 இரும்புபோல் ஹ்ருதய நெஞ்சம், இதயம் உருகும் வண்ணம் மரங்கள்போல் வலிய நெஞ்சம், வாழை நார் போல் வசப்படுத்தி, பூதங்கள் என்னும் தழையை கிள்ளி, பொல்லாத குணங்களை வேரறுத்து புண்ணிய குணங்களுக்கு விளக்கேற்றி, மோகனா, மோகினி மாயை விலக்கி, பேரார் தன்னில் பெருகவே கண் வளர்ந்தேன் கோதை முகில் வண்ணன், உகந்து கலந்ததுபோல், உஷாக்காலத்தில் எழுந்திருந்து, ஹரி ஹரி என்னும் அக்னியை கிளப்பி, திருவரங்கம் என்னும் திருவிளக்கேற்றி, ஆராதனம் என்னும் ஆபரணச்செல்லமெடுத்து, சிற்றம் சிறுகாலே என்னும் திறவு கோலாலே, திருக்காப்பு திறந்து,

முத்து, வைரம், வைடூர்யம், வேதம், அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் என்கிற மந்திரங்களையும் கூடவே சேர்த்து, சரணாகதியை நினைத்து, மரணாகதியை மறந்து, துரிதம், துரிதம் என்று தூய விகக்கேற்றி, பரம பதம் என்று பல்லாண்டு பாடுவதுமே.

உம்பவரும், செம்பனைமேல், மாளிகைமேல், தாளகமாம், செம்பொன் படிகையாம், நாகத்தலையணியாம், படுக்கையில் வாழும் குருமணி தேசத்தில் ஹரியே! ஹரியே கதியாகி, பர்வதங்களை விருக்ஷங்களாக்கி, விருக்ஷத்தின் கீழ் அவதாரமாகி, சப்த சமுத்திரம் ஆறாகி, தசபலி திட்டம் திருமதிலாகி மந்தார புஷ்பத்தில் மாலை தாழ, ஏகசக்கிறாள் பல்லாண்டு பாட

அஷ்டவசுக்கள் வாக்காள் விளக்க, தும்புரு நாரதர் கீதங்கள் இசைக்க, சுக்கில வசுக்கள் சோபனை சொல்ல, சப்த சமுத்திரம் திருப்பள்ளிக்கட்டிலின் கீழ், தச சமுத்திரம் திருப்பால் பரிமாறி, அனந்தன் என்னும் தலைகணை போட்டு, அச்சுதன் என்னும் கால் கோட்டை நாட்டி, ஸ்ரீ கோவிந்தன் என்னும் முத்துகால் நாட்டி ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நீளாதேவியோடு யோக நித்திரை செய்யும்போது பிரும்மாவும் கமலத்தை காணாமல் ஓடி எங்கும் தேடி தாமரை நானத்தோகையிலே

தமையன் கைகொண்ட முதல் ஏது சேவகம், ஏது சேவகம் என்னும் தசரதர் ச்ய்த தபஸினாலே, கௌசலை செய்த பாக்கியத்தினாலே, சீதை மணவாளர் தசரதருக்கே புத்திரராய், மூர்த்தி நால்வராம், திருவயோத்தியில் அவதாரம் செய்து எழுந்தருளினார்.

கைகேயி தந்த வரத்தாலே கானகத்திற்கு சென்று இலங்கையை அழித்து, இராவணனை
ஸம் ஹரித்து விபீஷணருக்கு லங்கா நகர பட்டாபிஷேகம் செய்து வைத்து, சீதையை சிறை மீட்டு அயோத்திக்கு எழுந்தருளி, ஆறில் ஒன்று கடமை வாங்கி, அனைவரையும் த்ருப்தி செய்து, இப்படி கற்ப காலத்தின் நடுவே அரசாண்டிருக்கும்போது, விபீஷணருக்கு திவ்ய விமானத்தை தந்தருளினாய்.

விபீஷணனும்-தான் இந்த பாக்கியம் பெற்றோம் என்று, அடிமேல் பெற்று, முடிமேல் கை கொண்டு இலங்கை நோக்கி எடுக்கபோனதளவு, எடுக்கபோகாதளவு, காவேரியின் நடுவில் சந்திர புஷ்கரணி தென்கரை மேல் புன்னாக விருக்ஷத்தின் கீழே எழுந்தருளினார்.

விபீஷணர் பாதம் விளக்கி, பரிசுத்தம் பண்ணி அந்தி தொழுது அனுஷ்டானம் பண்ணி பாதிரி பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, பாரிஜாத பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, மகிழம்பூவில் மூவாயிரம் கொண்டுவந்து, திருத்துழாய் தளத்தை ஏராளம் கொண்டுவந்து, அன்று மலர்ந்த செந்தாமரை புஷ்பத்தில் இரண்டாயிரம் கொண்டுவந்து, கஸ்தூரி அரணியின் கணக்கில்லாமல் கொண்டுவந்து, இரு திருவடியில் சமர்ப்பிவித்து,

இக்ஷ்வாகு வம்சத்து ராஜாவானவர் தம்மை தாமே எழுந்தருளிசெய்துவந்த பெருமாளே, மாதவரும் நீரே, மதுசூதனரும் நீரே, ஸ்ரீதரரும் நீரே, செந்தாமரை கண்ணனும் நீரே, ஒரு சப்த சாகரரே, சதுர்புஜரே, மங்கை மணவாளரே, மதுரை மன்னவரே, அம்புவிகரசரே, புண்டரீகாக்ஷரே இப்படி அரண்டும், புரண்டும் பரிதாபம் பண்ணினார். அப்போது பெருமாள், யாம் அந்த ராக்ஷஸ பூமிக்கு வரவல்லோமென்றார். ஸ்ரீராமருள்ளமட்டும் இங்கேயே கண் என்றார்.

ஒருபுறம் வலிய நாடு, இருபுறம் காவேரி, இருபுறம் ரெங்கவிலாஸம், இருபுறம் வலிய நாடு, உறையூர் வல்லி தாயார்,, ஒரு புறம் நானிங்கு மானிடரை ஈடேற்ற வந்தேன், வருஷத்திற்கு ஒரு முறை வந்து நீ போவாயென்று, வருஷத்திற்கு ஒரு முறை நீ வந்து ஆராதனம் செய்வாய் என்றும், திருவடியும், மலரும் விடையும் தந்து அருளி அனுப்பினார். விபீஷணர் தாம் மோக்ஷம் பெற்றதால் இந்த பாக்கியம் பெற்றோமென்று , சிரசால் வகுத்து, தெளிநீர்சார்த்தி, முன்கால் பணிகள் சார்த்தி, முழங்கால் பணிகள் சார்த்தி, திருவிரல் ஆழி சார்த்தி, திருக்கணைக்கால் தண்டை சார்த்தி, ஒரு முத்தோடு ஒரு முத்து ஒரு கோடி விலை பெற்ற திரு முத்து ஹாரத்தை திருமார்பில் திகழவே சார்த்தி,

முத்து, முத்தோடு மாணிக்கம் அறுபதினாயிரம் கோடி விலை பெற்ற திரு நீலநாயக பதக்கத்தை திருமார்பில் திகழவே சார்த்தி, வாகனம் நல்ல வளையள் சார்த்தி, மாணிக்க தோடும் சார்த்தி, கண்டத்தில் காரையும் சார்த்தி, கட்டி முத்து மாலையும் சார்த்தி, ஏழுலகம் ஆண்டவருக்கு யக்ஞோபவீதம் சார்த்தி, பாருலகம் ஆண்டவருக்கு பாண்டியன் கொண்டையும் சார்த்தி ஸர்வேஸ்வரனுக்கு தகுட்டு பீதாம்பரம் சார்த்தி, அழகிய மணவாளனுக்கு அரைநூண்மாலையும் சார்த்தி, அரைவடகிங்கிணியும் சார்த்தி, கண்ணன் உகந்தமாலை, சடகோபன் அளித்த மாலை, சூடிகொடுத்த மாலை, திருமார்பில் திகழவே சார்த்தி,

பொன்னு திருவடியில் புஷ்பம் சமர்ப்பித்து, தங்க திருவடியில் தண்டையும், சியம்பும் சமர்ப்பித்து, பூலோக வாசிக்கு பொங்கல் தளிகை சமர்ப்பிவித்து,பாரளர்ந்த நாதனுக்கு பால் மாங்காய் சமர்ப்பிவித்து, மலைபோல் வளர்ந்தால்போல்

வடகடலும், தெங்கடலும் வளர்ந்தால்போல் முகத்தில் கருண்ட கேசமும், முகத்தில் உருண்டைமுடியும், அண்டம் கயிறாக, ஆற்கடல் பாம்பாக, யக்ஞசித்தன் திருமதிலாகி, எழில்ரங்கத்தம்மான், ஹனுமன் படையும், கருடக்கொடையும், பரிமளமான உடையவரும், வடதிருவாசல் தேசிகரும்,

கோமகளார் எடுத்தக்கொற்றக்குடையும், திருமகளார் எடுத்த திருவந்திகாப்பழகும் இப்பேற்கொண்டு ஸ்ரீரெங்காவதாரத்தை கற்றவரும் கேட்டவரும், கற்றுகொடுத்தவருக்கும், காதுகுளிர கேட்டவருக்கும், சொல்லு, சொல்லு என்று செவிகுளிர கேட்டவருக்கும்,

இன்னும் சொல்லு என்று இருந்திருந்து கேட்டவருக்கும், பின்னும் சொல்லு என்று பிரியமாய் கேட்டவருக்கும், எட்டாத பரமபதம் இமைபொழுதில் கிடைக்கும், தட்டாத பரமபதம் தானே கிடைத்துவிடும், மன்னு திருவோண துவாதசியில் சொல்லி துதிப்பார், சுத்தராகி, பக்தராகி உள்ளும் , புறமும் ஜோதி உடனாய் சேர்ந்திருப்பார், என் எம்பெருமாள் திருவடிகளே சரணம்.
 

Latest ads

Back
Top