பகவான் எதற்காக நரசிம்ஹ அவதாரம் பண்ணினான் என்றால்,
சர்வ வஸ்துகளினுள்ளும் அவன் வியாபித்துருப்பதை
நாம் உணர்ந்து கொள்ளவே பண்ணினாராம்
விஷ்ணு புராணத்திலே ஒரு ஸ்லோகத்தில்
"ஹே விஷ்ணு! நாராயணா! நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய்.
அது தர்ம சூக்ஷமமான விஷயம்.
ஆனால், அப்படி நீ பரவியிருப்பதை
எல்லோரும் உணர வேண்டும்
என்பதால் அல்லவா
நரசிம்ஹ அவதாரம் பண்ணினாய்" என்று வருகிறது.
ராமாவதரத்திலே நமக்கு யார் தந்தையாய் இருக்கக் கூடியவன் என்று
நிதானமாகப் பார்த்து தசரதனை வரித்து, மெதுவாக அவதாரம் பண்ணினான்.*
அதே மாதிரி வஸூதேவர் கிரஹத்திலே வந்து அவதரிக்கப் போகிறான் என்பதை முன்கூட்டியே சொன்னான்.
தேவகியின் கர்பத்திலே வாசம் பண்ணினான்.
நரசிம்ஹ அவதாரத்தில் இதற்கெல்லாம் அவகாசமே இல்லை.
யார் அப்பா? யார் அம்மா ? என்றெல்லாம் யோசனை பண்ணவில்லை.
வித்யுத் என்று மின்னல்போல் அவதாரம் பண்ணினான்.
அதி வேகம் அந்த அவதாரத்திலே.
அதிலும் பிரம்மனின் நினைத்து பார்க்கவே முடியாத வரத்தை (வார்த்தையை) மெய்பிக்க வேண்டும்.
எவ்வளவு சிரமம்.
இங்கே பிரஹலாதன் காட்டும் தூணிலிருந்து வரவேண்டும்.
பிரஹலாதன் வார்த்தையை ரக்ஷிப்பதற்க்காக முன்னேற் பாடில்லாமல் ஏற்பட்டது.
சஹஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப் பட்ட அவதாரம் எது என்றால் நரசிம்ஹ அவதாரம்தான்.
சஹஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்ஹனே பேசப் படுகிறான்.
அப்படி சஹ்ஸ்ரநாமத்தைப் பார்த்தோமேயானால், அது நரசிம்ஹ பிரபாவம் என்பது தெளிவாகத் தெரியும்.
ஆயிரம் நாமங்களும் அவன் பெருமையை பேச வந்தது என்பதை அறிய முடியும்.
நாரசிம்ஹவபுஸ்ரீமான் என்று முதலில் நரசிம்ஹ அவதாரத்தை பீஷ்மாச்சாரியார் கொண்டாடுகிறார்.
தேசத்தினாலோ, காலத்தினாலோ,
வஸ்துவினாலோ அளக்க முடியாதவன் பரமாத்மா
என்று காட்டிய அவதாரம் நரசிம்ஹ அவதாரம்தான்.
விஸ்வம் என்ற சொல் நரசிம்ஹனை குறிப்பது அதுவே விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் ஆரம்பத்தில் வருகிறது.
முடிவில் கடைசியிலும் நரசிம்ஹ அவதாரம்தான்.
கடைசி திருநாமம்,
சர்வ ப்ரஹ்ரணாயுத.
இதற்கு ஆதி சங்கர பகவத்பாதாள் பாஷ்யம் இயற்றுகிறபோது
"எம்பெருமானுக்கு எல்லாமே ஆயுதம்" என்கிறார்.
நரசிம்ஹனாக அவன் அவதாரம் செய்த போது அவன் நகங்களே அவனுக்கு ஆயுதமாகின அல்லவா ?
ஆகவே சர்வ ப்ரஹ்ரணாயுத: என்ற நாமம் நரசிம்ஹனேயே குறிக்கும் என்கிறார்
-
*முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹச்சார்