• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஹைதராபாத்: 10 வயது சிறுவன் ஒரு நாள் போலீஸ் க&#

Status
Not open for further replies.
ஹைதராபாத்: 10 வயது சிறுவன் ஒரு நாள் போலீஸ் க&#

ஹைதராபாத்: 10 வயது சிறுவன் ஒரு நாள் போலீஸ் கமிஷனராக நியமனம்

ஹைதராபாத்: ஒருநாள் முதல்வர்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ஹைதராபாத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் சாதிக் ஒருநாள் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மரணத்தில் வாசலில் உள்ள அந்த சிறுவனின் கனவை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஹைத்ராபாத்தில் சாதிக் என்ற சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாளை எண்ணிக்கொண்டு வருகிறான். இந்த சிறுவனுக்கு காவல்துறை ஆணையராக வரவேண்டும் என்பது கனவாகும்..

16-10-year-old-police-boy.jpg



சாதிக்கின் ஆசையை நிறைவேற்ற "ஆசையை நிறைவேற்றும் அறக்கட்டளை" முன் வந்தது. இதையடுத்து சிறுவனின் நிலை குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கனவை மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி நிறைவேற்றி வைத்தார். இதனையடுத்து நேற்று ஒரு நாள் மட்டும் சாதிக் காவல்துறை ஆணையராக காவல்துறை உடை அணிந்து கொண்டு, அதற்கான தொப்பியையும் அணிந்து கொண்டு காவல்துறை ஆணையர் நாற்காலியில் அமரச் செய்தார்.

அப்போது சிறுவனை ஏராளமானோர் புகைப்படம் எடுத்தனர். அப்போது, சிறுவனுக்கு காவல்துறை ஆணையர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறினார். காவல்துறை ஆணையராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரவுடிகளைப் பிடிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு பதிலளித்தான். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனின் விருப்பம் நிறைவேறியிருப்பதன் மூலம், அவனது வாழ்நாட்கள் சற்று அதிகரிக்கும் என்று அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார்.




10-year-old terminally ill boy is Hyderabad Police Chief for a day | ?????????: 10 ???? ??????? ??? ???? ?????? ???????? ??????? - Oneindia Tamil
 
போலீஸ் கமிஷனராக ஒருநாள் பொறுப்பு வகித்த

Appreciate this! We should do this more often!


போலீஸ் கமிஷனராக ஒருநாள் பொறுப்பு வகித்த 10 வயது சிறுவன்: ஐதராபாத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
ஆசிஃப்யார் கான்



10_year_old_commis_2155389f.jpg

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் சல்யூட் மரியாதையை ஏற்கும் காட்சி. | படம்: மொகமது யூசுப்
மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர்.

சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் 'Terminally-ill' நோயாளி ஆவார். டெர்மினலி இல் என்றால் அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும். காரணம் இவருக்கு இருக்கும் நோய்க்கு எந்த வித சிகிச்சையும் பலனளிக்காது என்று முடிவுகட்டப்பட்ட ஒரு நோயாளி ஆவார் அவர்.

சாதிக்கிற்கு இருக்கும் நோய்க்கு மருத்துவ தீர்வு கிடையாது என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்கு 5 மாதங்கள் முன்புதான் தெரியவந்துள்ளது. இவர் எம்.என்.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜி என்ற அரசு மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சாதிக்கின் தந்தை மொகமது ரஹீமுதீன், விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென்றே செயல்படும் 'மேக் எ விஷ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு காவல்துறையில் உயர் பதவியாற்ற வேண்டும் என்ற சாதிக்கின் தீராத அவாவை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அந்த அமைப்பின் உதவியுடன் ஐதராபாத் உயர்மட்ட காவல்துறையுடன் தொடர்பு கொண்டு சாதிக்கை ஒருநாள் கமிஷனர் நாற்காலியில் அமரவைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நன்றாக இஸ்திரி போடப்பட்ட போலீஸ் சீருடை, பதக்கங்கள், சாதனை பேட்ஜ்கள், பளபளக்கும் ஷூக்கள், தெலங்கானா போலீஸ் என்று பொறிக்கப்பட்ட போலீஸ் துறை பெல்ட் ஆகியவற்றுடன் கமிஷனருக்கேயுரிய மிடுக்குடன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஒருநாள் கமிஷனர் கையெழுத்திடுவதற்காக கோப்புகள் சாதிக் மேசையில் வைக்கப்பட்டன.

ஐதராபாத் நகர கமிஷனர் எம்.மகேந்தர் ரெட்டி நெகிழ்ச்சியுடன் சாதிக்கை வரவேற்று தனது நாற்காலியில் சிறுவனை உட்காரச் செய்தார். சில மணி நேரங்கள் கமிஷனராக சாதிக் பணியாற்றவும் அனுமதித்தார்.

என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சாதிக் சட்டென, “நான் ரவுடிகளைப் பிடிப்பேன்” என்றார் உற்சாகமாக. மேலும் நகரை அமைதியாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், போக்குவரத்து விவகாரங்களை கவனிப்பேன் என்றும் 10 வயது கமிஷனர் கூறி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக புதிய கமிஷனரை எப்படி வரவேற்க வேண்டுமோ அத்தகைய சடங்குகளுடன் கமிஷனர் அலுவலகத்தில் சாதிக்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவன் சாதிக் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் நடந்து வந்த போது, 'புதிய கமிஷனரை' காவல்துறை ஊழியர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகே கமிஷனர் மகேந்தர் ரெட்டியின் அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்தார் சாதிக்.

செய்தியாளர்களிடம் சாதிக் கூறும் போது, “என்னுடைய 3 மாமாக்கள் ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர். மேலும் இரண்டு பேர் கரீம்நகரில் காவல்துறையில் சேவை செய்து வருகின்றனர்” என்றார்.

மகனின் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட கசப்பான நிலையில் சற்றே மகிழ்ச்சியடைந்த தந்தை மொகமது ரஹிமுதீன், "எனது மகன் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கை அவனை வேறு ஒன்றிற்கு காத்திருக்கச் செய்துள்ளது" என்றார்.

"மரணத்தை எதிர்நோக்கும் சிறுவனின் கனவை நிறைவேற்ற முடிந்தது எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது" என்று கமிஷனர் மகேந்தர் ரெட்டி
தெரிவித்தார்

Source:Tamil Hindu (Tamil.thehindu.com)


 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top